Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நகரின் முக்கிய பகுதிகளில் இரவு நேர துப்புரவு பணி மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தார்

Print PDF

தினத்தந்தி            21.10.2013

நகரின் முக்கிய பகுதிகளில் இரவு நேர துப்புரவு பணி மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தார்

நகரின் முக்கிய பகுதிகளில் இரவு நேர துப்புரவு பணியை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தார்.

மேயர் தொடக்கம்

மதுரை மாநகராட்சி முக்கிய பகுதிகளில் இரவு நேர சிறப்பு துப்புரவு பணியினை கமிஷனர் நந்தகோபால் முன்னிலையில் மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:–

முதலமைச்சர் உத்தரவின்படியும், ஆலோசனைபடியும் மதுரை மாநகராட்சியில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் கடந்த மாமன்ற கூட்டத்தில் மதுரை மாநகராட்சியின் மைய பகுதிகளில் இரவு நேரங்களில் சிறப்பு துப்புரவு பணி மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.

மாசி வீதிகள்

மாநகராட்சியின் முக்கியமான பகுதிகளான சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் மையப் பகுதிகளில் இரவு துப்புரவு பணி இன்று முதல் மேற்கொள்ளப்படும். குறிப்பாக பெரியார் பஸ் நிலையம், நேதாஜி ரோடு, டவுன் ஹால் ரோடு, நான்கு சித்திரை வீதிகள், நான்கு மாசி வீதிகள், மேல வடம்போக்கித் தெரு, பெருமாள் கோவிலை சுற்றியுள்ள பகுதிகள், டி.பி.கே.ரோடு, வணிக வளாக பஸ் நிலையம், மேல வெளிவீதி ரெயில்வே நிலையம் வரை, மேல மாரட்டு வீதி ஆகிய ஆகிய பகுதிகளில் இரவு 9 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை சுமார் 50 பணியாளா;கள் துப்புரவு பணியில் ஈடுபடுவார்கள்.

மதுரை மாநகரை இரவு நேரங்களிலும் சுத்தமாக வைத்து கொள்வதற்காக இந்த பணி தினந்தோறும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் நகர்நல அலுவலர் யசோதாமணி, நகரப்பொறியாளர் (பொறுப்பு) மதுரம், உதவி கமிஷனர் தேவதாஸ் உள்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.