Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பெ.நா.பாளையத்தில் கொசு ஒழிப்புப் பணி

Print PDF

தினமணி          21.10.2013

பெ.நா.பாளையத்தில் கொசு ஒழிப்புப் பணி

பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் டெங்கு கொசு ஒழிக்கும் வகையில் அபேட் மருந்து தெளிக்கும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.

பருவ மழை பெய்யத் தொடங்கியிருப்பதையொட்டி பெரியநாயக்கன்பாளையத்தில் பல பகுதிகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியுள்ளது. இதில், டெங்கு காய்ச்சலை பரப்பக்கூடிய கொசுக்கள் வளரக்கூடும் என்பதால், இதனைத் தடுக்கும் பொருட்டு பெ.நா.பாளையம் பேரூராட்சித் தலைவர் பி.ஆர்.ஜி.அருண்குமார் அறிவுறுத்தலின் பேரில் செயல் அலுவலர் துவாரகநாத் சிங் மேற்பார்வையில், பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் பரமசிவம், துடியலூர் சுகாதாரத் துறை ஆய்வாளர்கள் எஸ்.ஆர்.ராமராஜ், பாஞ்சாலி ஆகியோர் தலைமையில் துப்புரவுப் பணியாளர்கள் வீடுகளில் உள்ள கழிவுநீர்த் தொட்டிகள், நீர் தேங்கியுள்ள இடங்களில் அபேட் மருந்து தெளித்தனர். மழைக்காலம் தொடங்கியிருப்பதால், மழை நீரை தேங்கவிடக்கூடாது, காய்ச்சிய நீரையே குடிக்க வேண்டும் என்பன குறித்து பேரூராட்சி நிர்வாகம் சார்பில் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.