Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பருவ மழை துவக்கம் டெங்கு பரவாமல் தடுக்க யோசனை

Print PDF

தினகரன்           29.10.2013

பருவ மழை துவக்கம் டெங்கு பரவாமல் தடுக்க யோசனை

துறையூர், : உப்பிலியபுரம் பேரூராட்சியின் சிறப்பு கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் மைவிழி அன்பரசன் தலைமை வகித்தார்.  செயல் அலுவலர் மல்லிகா அர்ஜூனன், துணைத் தலைவர் ராமசாமி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பேரூராட்சி கவுன்சில் தொடங்கி இரண்டு ஆண்டுகள் முடிந்து, 3ம் ஆண்டில் அடி எடுத்து வைத்து முதல் கூட்டம் நடத்தப்படுவதாகவும், அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து கவுன்சிலர்கள், அதிகாரிகள், அலுவலக ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

செயல் அலுவலர் மல்லிகாஅர்ஜூனன் பேசுகையில், பருவமழை தொடங்கியுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து வார்டுகளிலும் பாதுகாப்பு பணிகளை  மேற்கொள்ள வேண்டும்.

டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பொதுமக்கள் காய்ச்சிய குடிநீரையே பருக வேண்டும் என்றார். கூட்டத்தில் அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.