Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கை

Print PDF

தினகரன்         26.11.2013

டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கை

கோவை, : கோவை மாவட்டத்தில் டெங்கு நோய் பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் நேற்று உத்தரவிடப்பட்டது. கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வளர்ச்சி பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.

தமிழக கைத்தறி, கைத்திறன், ஜவுளி, கதர்த்துறை முதன்மை செயலாளரும், கோவை மாவட்ட கண்காணிப்பு அதிகாரியுமான ஹர்மந்தர் சிங் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக், மாநகராட்சி கமிஷனர் லதா, மாவட்ட வருவாய் அலுவலர் கற்பகம், பொள்ளாச்சி சப் கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முருகன், கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குநர் முத்து கோபாலகிருஷ்ணன், பொது சுகாதார பணிகள் துணை இயக்குநர் சோமசுந்தரம், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் ராமகிருஷ்ணன், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் முருகேசன், ஆர்.டீ.ஓ குணசேகரன் உட்ப பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதில் மாவட்ட அளவில் டெங்கு நோய் பரவலை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கவேண்டும். வீடுகளின் அருகே நீர் தேங்கி இருந்தால் அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும். கொசு பெருக்கத்தை தடுத்து நோய் பரவலை தடுக்க வேண்டும் என கண்காணிப்பு அதிகாரி உத்தரவிட்டார்.

 மாவட்ட அளவில் திட்ட பணிகளை விரைவாக முடிக்கவேண்டும். முதியோர் உதவி தொகை, இலவச மனை பட்டா, ஆடு, மாடு உள்ளிட்ட நலத்திட்ட பணிகளை தடையின்றி மேற்கொள்ளவேண்டும். பொதுமக்களின் புகார்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.