Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி மருத்துவமனைகளில் 20 பணியிடங்களை நிரப்ப 2 ஆண்டுகளாக முயற்சி

Print PDF

தினமலர்            27.12.2013 

மாநகராட்சி மருத்துவமனைகளில் 20 பணியிடங்களை நிரப்ப 2 ஆண்டுகளாக முயற்சி

சென்னை:மாநகராட்சி மருத்துவமனைகளில் பணிபுரிய மருத்துவர்களிடம் ஆர்வம் இல்லாததால், காலியாக உள்ள 20 பணியிடங்களை நிரப்ப முடியாமல், கடந்த இரண்டு ஆண்டுகளாக மாநகராட்சி முயற்சி.

62/82


திருவொற்றியூர், மணலி, மாதவரம், பெருங்குடி, சோழிங்கநல்லுார் ஆகிய மண்டலங்களை தவிர, மற்ற மண்டலங்களில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. மாநகராட்சி சார்பில், 82 இடங்களில் நடத்தப்படும் இவற்றில், தலா ஒரு மருத்துவர் மற்றும் ஒரு மருந்தாளுனர் இருக்க வேண்டும்.

ஆனால், தற்போது, 20 இடங்களில் மருத்துவர்களும், 12 இடங்களில் மருந்தாளுனர்களும் இல்லை. இவற்றில் முக்கிய குடிசை பகுதிகளில் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையங்களும் உள்ளன.

இந்த பற்றாக்குறையால், ஒரே மருத்துவர் இரு இடங்களில் பணியாற்ற வேண்டி இருப்பதோடு, சில இடங்களில், மருந்தாளுனர்களே மருத்துவர்கள் போல் மருந்துகளை பரிந்துரைக்க வேண்டிய சூழலும் உள்ளது.

ஒப்பந்த முறை

காலி பணியிடங்களை நிரப்ப மாநகராட்சி கடந்த இரண்டு ஆண்டுகளாக முயற்சித்து வருகிறது. ஆனால், 'தனியார் மருத்துவமனைகளில் அதிக சம்பளம் கிடைப்பதால் மாநகராட்சியில் பணிபுரிய மருத்துவர்களிடையே ஆர்வம் இல்லை' என, மாநகராட்சியின் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதனால், மருத்துவர் தேர்வுக்காக பல முறை நேர்காணல் நடத்தப்பட்டும் பலனில்லை. சமீபத்தில் 20 மருத்துவர் பணியிடங்களுக்காக நடந்த நேர்முக தேர்வுக்கு, 80 பேருக்கு மாநகராட்சி அழைப்பு அனுப்பியது. 12 பேர் மட்டுமே நேர்முக தேர்வுக்கு வந்தனர். இவர்களின் பணி நியமனமும் இன்னும் உறுதி செய்யப் படவில்லை.

இதனால், வேறு வழியில்லாமல், ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர்களை நியமிக்கவும், குடிசை பகுதிகளில் 'கிளினிக்' நடத்தி வரும் தனியார் மருத்துவர்களை, மாலை நேரத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்ற நியமனம் செய்யவும் மாநகராட்சி நிர்வாகம் முடிவெடுத்து உள்ளதாக தெரிகிறது.