Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மழைக்கால நோய்களைத் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை

Print PDF

தினமணி 6.11.2009

மழைக்கால நோய்களைத் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை

சென்னை, நவ.5: எளிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவதன் மூலம் வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட மழைக்கால நோய்களிலிருந்து பொதுமக்கள் தப்பிக்கலாம்.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள வழிமுறைகள்:

* குடிநீரை வடிகட்டி, கொதிக்க வைத்து, ஆற வைத்து குடிக்க வேண்டும். *

உணவு உண்ணும் முன்பும், கழிவறைகளை பயன்படுத்திய பின்பும் கைகளை சோப்பினால் நன்கு கழுவ வேண்டும்.

* குடிநீர் வாரியத்தின் குடிநீர் வழங்கும் நேரம் தவிர்த்து, மற்ற நேரங்களில் தேங்கிய நீரை பம்புகளிலிருந்து அடித்தெடுத்து பருகுவதைத் தவிர்க்க வேண்டும். *

வெளி இடங்களில் மலஜலம் கழிப்பதைத் தவிர்த்து, கழிவறைகளை பயன்படுத்த வேண்டும்.

* சாலையோர ஈ மொய்த்த பண்டங்களை உண்ணக் கூடாது. *

வாந்தி வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் உப்பு, சர்க்கரை கரைசலை அருந்தலாம். * பாதிப்பு அதிகமாக இருந்தால் அருகில் உள்ள மாநகராட்சி மருத்துவமனை அல்லது அரசு மருத்துவமனைகளை அணுக வேண்டும்.

* மேலும் உதவிக்கு 1913, 2591 2686, 2591 2687 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

Last Updated on Friday, 06 November 2009 06:02