Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

புதுவையில் போலீஸôர் அணிவகுப்புடன் குப்பைகள் அகற்றம்

Print PDF

தினமணி 20.11.2009

புதுவையில் போலீஸôர் அணிவகுப்புடன் குப்பைகள் அகற்றம்

புதுச்சேரி கருவடிக்குப்பத்தில் காவல் கண்காணிப்பாளர் என்.டி.சிவதாசன் (இடது) தலைமையில் குப்பைகளை அகற்றுவதற்காக நடைபெற்ற அணிவகுப்பு.

புதுச்சேரி, நவ. 19: புதுச்சேரியில் போலீஸôர் அணிவகுப்பு நடத்திய பின்னர் குப்பைகள் அகற்றப்பட்டன.

புதுச்சேரியில் சேகரிக்கப்படும் குப்பைகளை குறிப்பிட்ட இடங்களில் கொட்டுவதற்கு கடந்த 15 நாள்களாக பல்வேறு இடங்களில் எதிர்ப்புகள் கிளம்பின.

இந்தப் பிரச்னை பூதாகரமானது. லாரிகள் மற்றும் டிராக்டர்களில் அள்ளப்பட்ட குப்பைகள் கொட்ட முடியாமல் ஆங்காங்கே பொதுமக்களால் தடுத்து நிறுத்தப்பட்டன.

இந் நிலையில் நகரப் பகுதிகளில் தேங்கிய குப்பைகளை இரவோடு இரவாக 400 டன்னுக்கும் மேல் சேகரிக்கப்பட்டு வியாழக்கிழமை வடக்குப் பகுதி காவல் கண்காணிப்பாளர் என்.டி.சிவதாசன் தலைமையில் போலீஸôர் அணிவகுப்புடன் கொண்டுச் சென்று லாஸ்பேட்டையில் கொட்டப்பட்டது.

இதை பொதுமக்கள் யாரும் தடை செய்யவில்லை.

இதனால் நகரில் குப்பைகள் மெல்ல மெல்ல குறையத் தொடங்கியுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் புதுச்சேரி பழைய நிலைக்கு மீண்டும் விரைவில் திரும்பி விடும்.

இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஆ.நமச்சிவாயம் செய்து வருவதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முழுவீச்சில் குப்பைகளை அகற்றும் பணிகளை வருவாய்த் துறையினரும் மேற்பார்வையிட்டனர்.

நகராட்சி ஆணையர்கள் (புதுச்சேரி) குப்புசாமி, (உழவர்கரை) ராஜமாணிக்கம் ஆகியோர் குப்பைகளை அகற்றும் பணிகளை துரிதப்படுத்த கேட்டுக் கொண்டுள்ளனர்.