Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

விவரங்களின்றி உணவுப் பொருள்கள் விற்றால் நடவடிக்கை

Print PDF

தினமணி 2.12.2009

விவரங்களின்றி உணவுப் பொருள்கள் விற்றால் நடவடிக்கை

திருவாரூர், டிச. 1: திருவாரூர் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் போதிய விவரங்கள் இல்லாமல் உணவுப் பொருள்களை விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையர் க. சரவணன் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருவாரூர் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் பெரிய மளிகைக் கடைகளில் சுகாதார அலுவலர், உணவு ஆய்வாளர் மற்றும் சுகாதார ஆய்வாளர் கொண்ட சுகாதாரக் ழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் பெரும்பாலான கடைகளில் பாலிதீன் பைகளில் உணவுப் பொருள்கள் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், இந்த பாலிதீன் பைகளில் உணவுப் பொருள்கள் குறித்து போதிய விவரங்கள் இல்லாமல் உள்ளன. மேலும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உணவுப் பொருள்கள் அந்நாட்டு

மொழிகளிலேயே விற்பனை செய்யப்படுகிறது. இவை அனைத்தும் உணவுக் கலப்படத் தடைச் சட்டத்துக்கு எதிரானது என்பதால் அச்சட்டத்தின் கீழ் வழங்கப்படும் தண்டனையை இதற்கும் வழங்கப்படும். எனவே, உணவுப் பொருள்களின் பெயர், மொத்த அளவு, கலக்கப்பட்ட மூலப் பொருள்களின் அளவு, தயாரிக்கப்பட்ட அல்லது அடைக்கப்பட்ட இடத்தின் முகவரி மற்றும் தேதி, காலாவதியாகும் தேதி, சைவம் மற்றும் அசைவத்தைக் குறிக்கும் அடையாளக் குறியீடுகள் உள்ளிட்ட விவரங்களுடன் விற்பனை செய்ய வேண்டும். இத்தகைய விவரங்கள் ஏதுமின்றி பொருள்கள் விற்பனை செய்யப்பட்டால் அந்த விற்பனையாளர்கள் மீது உணவுக் கலப்படத் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுமென நகராட்சி ஆணையர் சரவணன் எச்சரித்துள்ளார்.