Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திருவண்ணாமலையில் இன்று முதல் 18-ம் தேதி வரை ஜப்பானிய மூளைக் காய்ச்சல் தடுப்பூசி முகாம்

Print PDF

தினமணி 15.12.2009

திருவண்ணாமலையில் இன்று முதல் 18-ம் தேதி வரை ஜப்பானிய மூளைக் காய்ச்சல் தடுப்பூசி முகாம்

திருவண்ணாமலை, டிச. 14: திருவண்ணாமலை, நகராட்சி மற்றும் பொது சுகாதாரத் துறை சார்பில் திருவண்ணாமலை நகரில் ஜப்பானிய மூளைக் காய்ச்சல் தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 1 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவசமாக ஜப்பானிய தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது.

செவ்வாய்க்கிழமை முத்துவிநாயகர் கோயில் தெருவில் உள்ள நகராட்சி மகப்பேறு இல்லத்தில் 12, 15, 17, 21 வார்டுகளுக்கும், அண்ணா நகர் 7-வது தெருவில் 28, 29 வார்டுகளைச் சேர்ந்தவர்களுக்கும் தடுப்பூசி போடப்படும்.

16-ம் தேதி புது முஸ்லிம் தெரு சத்துணவு மையத்தில் 4, 5 வார்டுகளுக்கும், தேனிமலை சத்துணவு மையத்தில் 27-வது வார்ட்டைச் சேர்ந்தவர்களுக்கும், 17-ம் தேதி துராபலித் தெரு சத்துணவு மையத்தில் 13, 14, 19, 20, 22, 23 வார்டுகளுக்கும், ,.சி. நகர் அஸ்வின் கிளினிக்கில் 8, 9, 24, 25, 25, 30 வார்டுகளைச் சேர்ந்தவர்களுக்கும் தடுப்பூசி போடப்படும்.இதேபோல் 18-ம் தேதி பேகோபுரத் தெரு சத்துணவு மையத்தில் 6, 7, 10, 11 வார்டுகளுக்கும், மாரியம்மன் கோயில் தெரு சத்துணவு மையத்தில் 31, 32, 33, 34, 36-வது வார்டுகளைச் சேர்ந்தவர்களுக்கும் தடுப்பூசி போடப்படும். பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என நகராட்சி ஆணையர் சேகர் தெரிவித்துள்ளார்.