Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மளிகை கடைகளில் சுகாதார ஆய்வாளர்கள் திடீர் ஆய்வு

Print PDF

தினமணி 18.12.2009

மளிகை கடைகளில் சுகாதார ஆய்வாளர்கள் திடீர் ஆய்வு

திருவள்ளூர்
, டிச. 17: திருவள்ளூர் அருகே உள்ள மளிகைக் கடைகளில் பொருள்களின் தரம் மற்றும் காலாவதி தேதிகளை சுகாதார ஆய்வாளர்கள் வியாழக்கிழமை திடீர் ஆய்வு செய்தனர்.

÷திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் அருள்செல்வி, பர்வீன் ஆகியோரின் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் முருகதாஸ், காண்டீபன், உணவு ஆய்வாளர்கள் சுந்தர்ராஜன், சேகர் ஆகியோர் மணவாள நகரில் உள்ள 20-க்கும் மேற்பட்ட மளிகைக் கடைகளில் திடீர் ஆய்வு நடத்தினர். ÷

சமையல் பொருள்களான மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், தனியா தூள் மற்றும் அனைத்து பொருள்களின் தரம் மற்றும் உற்பத்தி தேதி, காலாவதி தேதி ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.

÷மேலும் கடையில் உள்ள பொருள்களை சுகாதாரமாகவும், பாக்கெட்களில் அடைத்து விற்பனை செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தினர். மேலும் கடம்பத்தூர் ஒன்றியம் முழுவதும் ஆய்வு தொடரும் என டாக்டர் அருள்செல்வி தெரிவித்தார்.

Last Updated on Friday, 18 December 2009 06:46