Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அடையாற்றில் கலக்கும் கழிவு நீர் நிறுத்தம்

Print PDF
தினமணி 19.12.2009

அடையாற்றில் கலக்கும் கழிவு நீர் நிறுத்தம்


கிண்டி திருவிக தொழிற்பேட்டையில் 7.35 கோடியில் நிறைவேற்றப்பட்டுள்ள கழிவுநீர் இறைக்கும் நிலையத்தை வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார் துணை முதல்வர்

சென்னை, டிச.18: ""சென்னையில் அடையாறு ஆற்றில் கலக்கும் கழிவு நீர் முழுவதுமாக நிறுத்தப்படும்'' என்று துணை முதல்வர் மு..ஸ்டாலின் அறிவித்தார்.

சென்னை கிண்டி திரு.வி.. தொழிற்பேட்டையில் கழிவு நீர் இறைக்கும் நிலையத்தை மு..ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார். அப்போது, அவர் கூறியது:

இந்தத் திட்டத்தின் மூலம், தொழிற்பேட்டையின் கழிவுநீர் நெசப்பாக்கம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லப்படும். அங்கு, கழிவு நீர் சுத்திகரிக்கப்பட்டு வெளியேற்றப்படும்.

இதன் மூலம், கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள 610 தொழிற்சாலைகளும், தொழிற்பேட்டைக்கு அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் வாழும் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோரும் பயனடைவர். இதுவரை, கிண்டி தொழிற்பேட்டை கழிவுநீர் இறைக்கும் நிலையத்தில் இருந்து அடையாறு ஆற்றில் கலந்து வந்த கழிவுநீர் முழுவதுமாக நிறுத்தப்படும்.

இந்தத் திட்டத்தால், அடையாறு ஆற்றில் 7 வழித் தடங்கள் மூலம் கலந்து வந்த கழிவுநீர் தடுக்கப்பட்டுள்ளது'' என்றார் ஸ்டாலின்.

கிண்டி தொழிற்பேட்டை தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ரூ.2.57 கோடியும், சென்னை குடிநீர் வாரியம் சார்பாக ரூ.4.77 கோடி பங்களிப்புடன் கழிவு நீர் இறைக்கும் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

Last Updated on Saturday, 19 December 2009 07:44