Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

காய்ச்சிய குடிநீரை குடியுங்கள்: நகராட்சி கமிஷனர் வேண்டுகோள்

Print PDF

தினமலர் 23.12.2009

காய்ச்சிய குடிநீரை குடியுங்கள்: நகராட்சி கமிஷனர் வேண்டுகோள்

கடலூர்:பொது மக்கள் காய்ச்சிய குடிநீரையே பருக வேண் டும் என கடலூர் நகராட்சி கமிஷனர் குமார் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:வடகிழக்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வருவதால் நகரப்பகுதிகளில் மழை நீர் தேக்கம் அடைந்து சுகாதார பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெளியேற்ற செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டு வருகிறது.இந்நிலையில் குடிநீர் குழாய்கள் மூலம் வினியோகம் செய்யப்படும் குடிநீரினை பாதுகாப்பு கருதி பொது மக்கள் காய்ச்சி பருகுமாறு அறிவுருத்தப்பட்டுள்ளது. மேலும் நகர பகுதிகளிலுள்ள அனைத்து ஓட்டல் களிலும் காய்ச்சிய குடிநீர் வழங்க உத்தரவிடப்பட் டுள்ளது. சுகாதார நலன்கருதி சாலையோரங்களில் விற்கும் உணவுகளை உண்ண வேண்டாம் என எச்சரித்துள்ளார்.