Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிநீர்தொட்டி சுத்தம் செய்யாவிட்டால் பணிநீக்கம் ஆபரேட்டர்களுக்கு எச்சரிக்கை

Print PDF

தினகரன் 24.12.2009

குடிநீர்தொட்டி சுத்தம் செய்யாவிட்டால் பணிநீக்கம் ஆபரேட்டர்களுக்கு எச்சரிக்கை

அரியலூர், : அரியலூர் கலெக்டர் ஆபிரகாம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
அரியலூர் மாவட்டத் தில் அனைத்து கிராம ஊ ராட்சிகளில் பன்றிகளால் பொதுமக்களுக்கு சுகாதார கேடு ஏற்படாத வகையில் அவைகளை அப்புறப்படுத்த ஊராட்சி தலைவர்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை 15 நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்து குளாரினேசன் செய்து பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீர் தடையின்றி வழங்க வேண்டும். அவ்வாறு செய்ய தவறும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களை (ஆபரேட்டர் கள்) பணிநீக்கம் (டிஸ்மிஸ்) செய்ய நேரிடும். சம்மந்தப்பட்ட ஊராட்சி தலைவர் மீதும் குற்றவியல் உள்ளி ட்ட சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு கலெக்டர் ஆபிரகாம் தெரிவித்துள்ளார்.

Last Updated on Thursday, 24 December 2009 06:13