Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

போலியோ சொட்டு மருந்து வழங்க முன்னேற்பாடு தீவிரம்

Print PDF

தினகரன் 24.12.2009

போலியோ சொட்டு மருந்து வழங்க முன்னேற்பாடு தீவிரம்

திருப்பூர்: போலியோ சொட்டு மருந்து முதல் கட்ட முகாம் வரும் ஜனவரி 10ம் தேதி நடக்க உள்ள நிலையில், இதற்கான முன்னேற்பாடு பணிகளை சுகாதாரத்துறை துவக்கியுள்ளது.

நாடுமுழுவதும் போலியோ நோய் தாக்குதலை தடுக்கும் வகையில் ஆண்டுதோறும் இரு கட்டங்களாக 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. அதன்படி, நடப்பாண்டில் ஜனவரி 10 மற்றும் பிப்ரவரி 7ம் தேதி போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

இதற்கான முன்னேற்பாட்டு பணி தற்போது துவங்கியுள்ளது. கடந்தாண்டு போலியோ சொட்டு மருந்து வழங்கும் போது வீண் புரளியால் ஏற்பட்ட அசம்பாவித நிகழ்வுகள் இந்தாண்டு தொடராத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக அனைத்து மாவட்ட சுகாதார அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்கான நடவடிக்கைகளை சுகாதாரத்துறை தீவிரப்படுத்தியுள்ளது.

மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் விஜயலட்சுமி, மாநகர நல அலுவலர் ஜவஹர்லால் ஆகியோர் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளனர்.

திருப்பூர் மாநகராட்சியில் 50 ஆயிரம் குழந்தைகள் 5 வயதுக்கு உட்பட்டவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. இவர்களுக்கு கடந்தாண்டை போலவே 79 மையங்கள் மூலம் போலியோ சொட்டு மருந்து வழங்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இது தவிர பஸ் நிலையங்கள், ரயில் நிலையம் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் கூடும் பகுதிகளிலும் மையங்கள் அமைக்கப்படுகிறது. மேலும், தெருவோர குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்காக நடமாடும் மையங்களும் செயல்படுத்தப்படுகிறது.

இதன் மூலம் தெருவோர குழந்தைகள் மற்றும் பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ள குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பணிக்காக சுகாதார பணியாளர்கள், செவிலியர்கள், சத்துணவு அமைப்பாளர்கள், கல்லூரி, பள்ளி மாணவர்கள் உட்பட சுமார் 400 பேரை பணியில் ஈடுபடுத்தப்பட மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இதேபோல் மாவட்டத்தின் பிற பகுதிகளில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியை சுகாதாரத்துறை மேற்கொள்கிறது. இதற்கான பணிகளை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் விஜயலட்சுமி மேற்கொண்டு வருகிறார்.

மாவட்டத்தில் 5 வயதுக்குட்பட்ட 3 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. 1000க்கும் அதிகமான முகாம்களை அமைத்து போலியோ சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. தொடர்ந்து மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடந்து வருகிறது.வதந்திகளை தடுக்கசிறப்பு பிரசாரம்போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணி தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்த சுகாதாரத்துறையினருக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. விழிப்புணர்வு பிரசாரத்தில், வதந்திகளை நம்ப வேண்டாம் என்பதை உணர்த்தும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, ஆட்டோ உள்ளிட்ட வாகன பிரசாரங்களில் வதந்திகளை தடுக்க சிறப்பு விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது.

வதந்தி காரணமாக திருப்பூர் சுகாதார மாவட்டத்தில் கடந்தாண்டு முதல் தவணையில் 75 சதவீத குழந்தைகள் மட்டுமே போலியோ சொட்டு மருந்து ட்டுக்கொண்டனர்.இந்நிலையில், நடப்பாண்டு 100 சதவீத இலக்கை எட்ட வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

Last Updated on Thursday, 24 December 2009 06:20