Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கொசுக்களை அழிக்க புது மெஷின் வந்தாச்சு

Print PDF

தினமலர் 24.12.2009

கொசுக்களை அழிக்க புது மெஷின் வந்தாச்சு

திருப்பூர் : திருப்பூர், 15 வேலம்பாளையம் நகராட்சியில் கொசுத்தொல்லைக்கு தீர்வு காண, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில், 3.20 லட்சம் ரூபாய் செலவில் "மைக்ரோ போக்' என்ற புதிய மெஷின் வாங்கப்பட்டுள்ளது.

செயல் அலுவலர் குற்றாலிங்கம் கூறுகையில், ""மைக்ரோ போக் மெஷினை ஸ்டார்ட் செய்ய மட்டும் பெட்ரோல் தேவை. பின், டீசலுடன் "ஸ்பேரி திரியம் இரண்டு சதவீதம்' என்ற திரவம் கலக்கப்படுகிறது. இதில் இருந்து வெளிவரும் புகை, தெருக்கள் மற்றும் கழிவு நீர் தேங்கியுள்ள இடங் களில் அடிக்கப்படும். இதுதவிர, பராமரிக்கப் படாமல் கிடக்கும் குட்டை மற்றும் கொசுக்கள் பரவும் இடங்களின் மீது தெளிக்கப்படும். ""மைக்ரோ போக் மெஷினில் "அபேட்' என்ற திரவம் நிரப்பி, புகை வெளிவரச்செய்து, பயன் படுத்த முடியும். "அபேட்' கலக்கப்பட்டு வெளிவரும் புகை, வீடுகளில் உள்ள தண்ணீர் தொட்டிகள், பாசி படரும் இடங்கள், பொது குடிநீர் குழாய் உள்ள இடங்களில் அடிக்கப்பட உள்ளது. இதனால், நல்ல தண்ணீரில் இருந்து உற்பத்தியாகும் கொசுக்கள் முழுவதும் அழிந்து விடும்,'' என்றார்.

Last Updated on Thursday, 24 December 2009 09:38