Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வெள்ளலூரில் தினமும் 1,000 மெட்ரிக் டன் குப்பை குவியும்:மூன்று நகராட்சிகளுக்கு அனுமதி

Print PDF

தினமலர் 02.01.2010

வெள்ளலூரில் தினமும் 1,000 மெட்ரிக் டன் குப்பை குவியும்:மூன்று நகராட்சிகளுக்கு அனுமதி

கோவை மாநகராட்சியில் தினமும் 600 மெட்ரிக் டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. இவை, உக் கடம், பீளமேடு, ஒண்டிப்புதூர் உள்பட நான்கு இடங்களில் உள்ள குப்பை மாற்று நிலையங்களுக்கு வாகனங்களில் கொண்டு செல் லப்படுகின்றன. பின்னர், அங்கிருந்து 100க்கும் மேற்பட்ட லாரிகள், டிராக்டர்களில் எடுத் துச் செல்லப்பட்டு, மாநகராட்சிக்குச் சொந்தமாக வெள்ளலூரில் உள்ள 604 ஏக்கர் பரப்புள்ள உரக்கிடங்கில் கொட்டப்படுகின் றன. இப்பணிக்காக, ஆண் டுக்கு 20 கோடி ரூபாயை மாநகராட்சி செலவழிக்கிறது.

கடந்த பல ஆண்டுகளாக கொட்டப்பட்ட இந்த குப்பை, மலை போல குவிந்தது. பல லட்சம் மெட்ரிக் டன் அளவில் குவிந்த குப்பைகளால் ஈ, கொசுக்கள் பெருமளவில் உற்பத்தியாகி சுற்று வட்டாரப் பகுதிகளில் படையெடுத்து பெரும் பிரச்னை ஏற்பட்டது.இதற்கு எதிராக அப்பகுதி மக்கள் பெரிய அளவில் போராட்டம் நடத்தினர்.

அதன்பின், மாநகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கையில் இறங்கி, கோவை "சிறுதுளி' அமைப்புடன் இணைந்து, சுகாதாரக்கேடு பிரச் னைக்கு தீர்வு கண்டது. ஜவஹர்லால் நேரு தேசிய நகர புனரமைப்புத் திட்டத்தில், முதற்பணியாக 97 கோடி ரூபாய் மதிப்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டப்பணிகளும் அதே கால கட்டத் தில் துவங்கின.

தற்போது, வெள்ளலூரில் கொட்டப்படும் குப்பை, தரம் பிரிக்கப் பட்டு நவீன உரக்கிடங் கிற்கு அனுப்பப்படுகின் றன. மட்காத கழிவுகள் "லேண்ட் பில்லிங்' முறையில் நிரப்பப்பட்டு, அழகிய கட்டமைப்பாக மாற் றப்படுகின்றன. இதனால், குப்பை பிரச் னைக்கு நிரந்தர தீர்வு ஏற் பட்டுள்ளது. மாநகராட்சிக் குச் சொந்தமான இதே பகுதியில் தான் மத்திய சிறையும் மாற்றப்படுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், எதிர்காலத்தில் மாநகராட்சி குப் பைகளை கொட்ட இடம் இருக்குமா, என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில், குறிச்சி, குனியமுத்தூர், கவுண்டம்பாளையம் நகராட்சி குப்பைகளையும் வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் கொட்ட முடிவு செய்யப்பட் டுள்ளது. இந்த மூன்று நகராட்சிகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்ட போதிய இடம் இல்லாததால், கடந்த 2007ம் ஆண்டிலேயே இதே கோரிக்கை எழுப்பப்பட்டது.

இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு 2007 ஜூன் 8ல் நடந்த கூட்டத்தில், கோவை மாநகராட்சி கமிஷனருக்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலரால் அறிவுறுத்தல் வழங் கப்பட்டது.குப்பையை தரம் பிரித்தபின், அதற்குரிய கட்டணத்தைச் செலுத்தினால், வெள்ளலூர் குப்பை கிடங்கில் குப்பை கொட்ட அனுமதிப்பதாக, கோவை மாநகராட்சி நிர்வாகம் ஒப்புதல் வழங்கியது.

இதற்கான தீர்மானங்களை கவுண்டம்பாளையம், குனியமுத்தூர் நகராட்சிகள் நிறை வேற்றி அனுப்பின. ஆனாலும், தொடர் நடவடிக்கை இல்லை. இந்நிலையில், கடந்த ஏப்ரலில் நடந்த திடக்கழிவு மேலாண்மைத் திட்ட செயலாக்கம் தொடர்பான கூட்டத்தில், இதே கோரிக்கை மீண்டும் வலியுறுத்தப்பட்டது.

நகராட்சிகளின் நிர்வாக கமிஷனரும் இது குறித்த அறிவுறுத்தலை மாநகராட்சிக்கு வழங்கினார்.அதன் அடிப்படையில், வெள்ளலூர் குப்பை கிடங் கில் மேற்கண்ட மூன்று நகராட்சிகளின் குப்பைகளையும் கொட்ட, மாநகராட்சி நிர்வாகம் ஒப்புக் கொண்டு, அதற்கு கடந்த 29ம் தேதியன்று கவுன்சில் கூட் டத்தில் ஒப்புதலும் பெற் றுள்ளது.

தற்போது வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் நவீன உரக்கிடங்கு அமைக்கும் பணி மற்றும் "சானிட்டரி லேண்ட் பில்லிங்' பணிகள், தனியார் மூலமாக நடந்து வருகின்றன. தனியார் அமைப்புடன் இதற்காக 20 ஆண்டுகளுக்கு மாநகராட்சி ஒப் பந்தம் போட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணங் களை மூன்று நகராட்சி நிர்வாகங்களும் செலுத்த வேண்டும். விரைவில் மூன்று நகராட்சி குப்பைகளும் வெள்ளலூரில் குவியப்போவதால், தற்போது குவியும் குப்பையுடன் சேர்த்து தினமும் 1000 மெட்ரிக் டன் குப்பை அங்கு சேரும் என கூறப்படுகிறது.

புதிதாக 27 ஏக்கரில் பூங்கா:உலகத் தமிழ் செம் மொழி மாநாட்டை முன் னிட்டு, கோவை மத்திய சிறை உள்ள இடத்தில் தமிழகத்திலேயே மிகப்பெரிய தாவரவியல் பூங்கா அமைக்கப்படும், என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். தவிர, மாநாட்டுக்கு முன், 47 பூங்காக்கள் புதிதாக அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, கவுண்டம்பாளையம் குப்பைக் கிடங்கு இருந்த இடத்தில் 27 ஏக்கர் பரப் பில் மேலும் ஒரு பிரம் மாண்ட பூங்கா அமைக் கப்படவுள்ளதாக மாநகராட்சி மேயர் வெங்கடாசலம் தெரிவித்தார். அங்கு யோகா பயிற்சி மையம் அமைக்க திட்டமிருப்பதாகவும் தெரிவித்தார்.

Last Updated on Saturday, 02 January 2010 07:22