Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

1867 மையங்களில் போலியோ சொட்டு மருந்து

Print PDF

தினமலர் 11.01.2010

1867 மையங்களில் போலியோ சொட்டு மருந்து

மதுரை : இளம்பிள்ளை வாதத்தை தடுக்க, மதுரையில் 1867 மையங்களில், 5 வயதிற் குட்பட்ட மூன்று லட்சம் குழந்தைகளுக்கு இலவச போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது.தினமலர் அலுவலகத்தில், மாநகராட்சி டாக்டர் ஜெயமணி, நர்சுகள் கலாராணி, பிருந்தா ஆகியோர் சொட்டு மருந்து வழங்கினர். மதுரை அரசு மருத்துவமனை குழந்தைகள் நலப்பிரிவில், துறைத் தலைவர் டாக்டர் அமுதா ராஜேஸ்வரி தலைமையில் டீன் சிவக்குமார் வழங்கினார். விடுபட்டவர்களுக்கு இன்று, நாளை, நாளை மறுநாள் வரை வீடுகளுக்கே சென்று மருந்து கொடுக்கப்படுகிறது. சுகாதார பணிகள் துணை இயக்குநர் டாக்டர் பழனிச்சாமி தலைமையில், சுகாதாரம் மற்றும் சத்துணவு பணியாளர்கள், தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் உட்பட மொத்தம் 6675 பேர் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். மதுரைக்கு வந்த 541 வெளிமாநிலத்தவர் குழந்தைகள், 698 இலங்கை அகதிகளின் குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்டது. மாநகராட்சி கமிஷனர் செபாஸ்டின் தலைமையில், மீனாட்சி அம்மன் கோயில் உட்பட 267 மையங்களில் வழங்கப்பட்டது. நடமாடும் குழுக்கள் மூலம், நாடோடிகள், அகதிகள், கட்டட தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

Last Updated on Monday, 11 January 2010 10:50