Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அரவக்குறிச்சி வட்டாரத்தில் மளிகைக் கடைகளில் சுகாதாரத் துறையினர் ஆய்வு

Print PDF

தினமணி 20.01.2010

அரவக்குறிச்சி வட்டாரத்தில் மளிகைக் கடைகளில் சுகாதாரத் துறையினர் ஆய்வு

அரவக்குறிச்சி, ஜன. 19: அரவக்குறிச்சி வட்டாரப் பகுதிகளில் உள்ள மளிகைக்கடைகளில் பொது சுகாதாரத் துறையினர் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.

அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி, அண்ணா நகர், மலைக்கோவிலூர் ஆகிய பகுதிகளில் உள்ள மளிகைக் கடைகள், எண்ணெய்க் கடைகள் ஆகியவற்றில் பொது சுகாதாரத் துறையினர் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். கடலை எண்ணெய், நல்லெண்ணெய்,சூரியகாந்தி எண்ணெய், தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட சமையல் எண்ணெய் வகைகளின் மாதிரிகள் இந்தக் கடைகளிலிருந்து எடுக்கப்பட்டு, சென்னை கிட்டியில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது. மேலும், எண்ணெய்ப் பொட்டலங்களில் உள்ள விவரங்கள் சரிபார்க்கப்பட்டன. அப்போது தவறு கண்டறியப்பட்ட கடைகளில் சுமார் ரூ. 3,500 மதிப்புடைய எண்ணெய் பறிமுதல்செய்யப்பட்டது. இதேபோல, விற்பனை உரிமம் இல்லாமல் கடைகளை நடத்திவருவோரும் எச்சரிக்கப்பட்டனர். ஆய்வில், மருத்துவர்கள் சாந்திகண்ணன், கொளதமன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தங்கவேல், சுகாதார ஆய்வாளர்கள் டைட்டஸ், கருப்புசாமி, சிவலிங்கம், ராமசந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Last Updated on Wednesday, 20 January 2010 06:26