Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பரமக்குடி தரைப்பாலம் அருகே கழிவுகள் அகற்றம்

Print PDF

தினமணி 21.01.2010

பரமக்குடி தரைப்பாலம் அருகே கழிவுகள் அகற்றம்

பரமக்குடி, ஜன. 20: பரமக்குடி-எமனேஸ்வரம் தரைப் பாலம் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாகவும், தொற்று நோய் பரவும் விதத்திலும் கொட்டப்பட்டிருந்த நகராட்சிக் கழிவுகளை துப்புரவுப் பணியாளர்கள் புதன்கிழமை சுத்தம் செய்தனர்.

எமனேஸ்வரம் தரைப்பாலம், மக்கள் அதிக நடமாட்டமுள்ள பகுதியாகும். இப் பகுதியில் கடந்த சில மாதங்களாக நகராட்சிக் கழிவுகள் கொட்டப்பட்டு, உடனுக்குடன் லாரிகளில் அள்ளப்பட்டு வந்தன. சமீப காலமாக இங்கு லாரிகளில் அள்ளிச் செல்வதை நிறுத்தி விட்டதால், அப் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசும் நிலையில், தொற்று நோய் பரவும் அபாய நிலை ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் கூறி வந்தனர்.

இதுகுறித்து தினமணி நாளிதழில் செவ்வாய்க்கிழமை செய்தி வெளியானது. இதன்பேரில், ஆட்சியர் டி.என். ஹரிஹரன் உத்தரவின் பேரில், நகராட்சித் துப்புரவுப் பணியாளர்கள் அப் பகுதியில் கொட்டப்பட்டிருந்த கழிவுகள் அனைத்தையும் ஜே.சி.பி இயந்திரம் மற்றும் லாரிகள் மூலம் அப்புறப்படுத்தினர். இதுகுறித்து நகராட்சிப் பணியாளர்கள் கூறும்போது, மற்ற நகராட்சிகளில் டெம்பர் பிளேசர் வைக்கப்பட்டு, அதன் மூலம் எளிதாக லாரிகளில் உடனுக்குடன் அகற்றும் முறை அமல்படுத்தப்படுகிறது. இங்கும் கழிவுகளை கொட்டுவதற்கு அதுபோன்ற டெம்பர் பிளேசர்கள் வைக்கப்பட்டால், பொதுமக்களுக்கு இடையூறு வராமல் பார்த்துக் கொள்ளலாம்

Last Updated on Thursday, 21 January 2010 10:39