Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தொழுநோய் ஒழிப்பு தினம் விழிப்புணர்வு பேரணி

Print PDF

தினமலர் 03.02.2010

தொழுநோய் ஒழிப்பு தினம் விழிப்புணர்வு பேரணி

ஆரணி:உலக தொழுநோய் ஒழி ப்பு தினத்தை முன்னிட்டு, ஆரணியில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.ஆரணி நகராட்சி, மாவட்ட தொழுநோய் துணை இயக்குனர், புனிதவளனார் மருத்துவமனை தொழுநோய் பிரிவு இணைந்து ஆரணியில் உலக தொழுநோய் ஒழிப்பு தின பேரணி நடத்தியது. நிகழ்ச்சிக்கு, கமிஷனர் சசிகலா தலைமை வகித்தார். புனித வளனார் மருத்துவமனை தொழுநோய் பிரிவு இயக்குனர் சிறியபுஷ்பம் முன்னிலை வகித்தார்.

மாவட்ட துணை இயக்குனர் ராமலிங்கம் வரவேற்றார்.நிகழ்ச்சியில், வெல் தொண்டு நிறுவனம் சார்பில் மகளிர் சுயஉதவிக்குழுவினர் 100க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். மாவட்ட தொழுநோய் சுகாதார துணை இயக்குனர் ஜெயபாலன் பேரணியை தொடங்கி வைத்து பேசியதாவது:திருவண்ணாமலை மாவட்டத்தில் 200 பேர் தொழு நோயால் பாதிக்கப்பட்டு இருந்தனர். அவர்களில் 160 பேர் பூரணமாக குணமாகியுள்ளனர்.

தொழுநோய் ஒரு பரம்பரை நோய் அல்ல. மற்ற நோய்களை போல் இதற்கும் சிகிச்சை எடுத்துக் கொண்டால் சீக்கிரம் குணமடையலாம். எனவே, தொழுநோய் அறிகுறி உள்ளவர்கள் தானாக முன்வந்து சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தால், இன்னும் 10 ஆண்டுகளில் தமிழகத்தில் இருந்து தொழுநோய் முற்றிலும் இல்லாமல் ஒழித்து விடலாம்.இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து, ஆரணி நகராட்சி அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் பழைய பஸ்நிலையம், மார்க்கெட் ரோடு வழியாக சென்று புனித வளனார் மருத்துவமனை அருகே முடிந்தது. இதில், தொழுநோய் விழிப்புணர்வு சம்பந்தமான கோஷங்கள் எழுப்பப்பட்டு, துண்டுபிரசுரங்கள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் டாக்டர் பாஸ்கர், டவுன் எஸ்.., காண்டீபன், லயன்ஸ் கிளப் உறுப்பினர்கள் சந்திரமோகன் சேகர், செல்வமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Last Updated on Wednesday, 03 February 2010 07:54