Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

3.8 லட்சம் குழந்தைகளுக்கு 2ம் கட்டமாக போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணி

Print PDF

தினமலர் 08.02.2010

3.8 லட்சம் குழந்தைகளுக்கு 2ம் கட்டமாக போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணி

வேலூர்:வேலூர் மாவட்டத்தில் நேற்று 2ம் கட்டமாக போலியோ சொட்டு மருந்துவழங்கும் பணி நடந்தது.தமிழகத்தில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு 2வது தவணையாக போலியோ சொட்டு மருந்து நேற்று வழங்கப்பட்டது. அதன்படி, வேலூர் மாவட்டத்தில் 2 ஆயிரத்து 96 முகாம்களில் 3 லட்சத்து 80 ஆயிரத்து 548 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கும் பணி நேற்று நடந்தது.வேலூர் அடுத்த தொரப்பாடி பேரூராட்சி அலுவலகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் ராஜேந்திரன் தலைமை வகித்து, குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கினார்.இதில் வேலூர் சுகாதார மாவட்ட துணை இயக்குநர் சுரேஷ், இணை இயக்குநர் வரதராஜன், தொரப்பாடி பேரூராட்சி தலைவர் லதா, துணைத்தலைவர் திருமால், செயல் அலுவலர் தயாளன், சுகாதார திட்ட அலுவலர் கென்னடி, மாவட்ட பூச்சியியல் வல்லுநர் கோபாலரத்னம், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கிருஷ்ணமூர்த்தி, சுகாதார ஆய்வாளர் மண்ணப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.இன்னும் 2 நாட்களுக்கு...வேலூர் சுகாதார மாவட்ட துணை இயக்குநர் சுரேஷ் நிருபர்களிடம் கூறுகையில், "இன்று (நேற்று) விடுபட்ட குழந்தைகளுக்கு 8 மற்றும் 9 ஆகிய 2 நாட்களுக்கு களப்பணியாளர்கள் வீடு, வீடாக சென்று சொட்டு மருந்து போடுவார்கள். அந்த 2 நாட்களிலும் பூட்டியுள்ள வீடுகளுக்கு அடுத்தடுத்த நாட்களில் வீடு, வீடாக பணியாளர்கள் சென்று குழந்தைகளுக்கு சொட்டு மருந்து போடுவார்கள். இந்த பணி வரும் சனிக்கிழமை வரையில் நடக்கும்' என்றார்.

குழந்தைகளைகாக்க வைத்த கலெக்டர்மாவட்ட அளவில் 2ம் கட்டமாக போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியை வேலூர் அருகேயுள்ள தொரப்பாடியில் காலை 8 மணிக்கு கலெக்டர் தொடங்கி வைப்பார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.இதனால் அந்தப்பகுதியைச் பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள், தங்கள் குழந்தைகளுடன் காலை 8 மணிக்கு முன்னதாகவே பேரூராட்சி அலுவலகம் வந்து காத்திருந்தனர். ஆனால் குறிப்பிட்ட நேரத்துக்கு கலெக்டர் வரவில்லை."இதோ வந்துவிடுவார், வந்துக்கிட்டு இருக்கிறார்' என்று அதிகாரிகள் சொல்லிக் கொண்டே இருந்தனர். நேரம் ஆக, ஆக பொறுமையிழந்த பெண்கள் சிலர், தங்கள் குழந்தைகளுடன் வீட்டுக்கு திரும்பிச் சென்றனர். மற்றவர்கள், கலெக்டர் கையால் தங்கள் குழந்தைக்கு சொட்டு மருந்து வழங்கட்டும் என்று பேரூராட்சி அலுவலக வாசலில் போடப்பட்டு இருந்த சேர்களில் அமர்ந்து காத்திருந்தனர். ஒரு மணி நேரம் தாமதமாக காலை 9 மணிக்கு கலெக்டர் ராஜேந்திரன் வந்து முகாமை தொடங்கி வைத்தார். அதனர் பின்னர் அங்கு காத்திருந்த குழந்தைகளுக்கு அவர் சொட்டு மருந்து வழங்கினார்.

ராணிப்பேட்டையில் போலியோ சொட்டு மருந்து முகாமை எம்.எல்.. காந்தி துவக்கி வைத்தார்.ராணிப்பேட்டை முத்துக்கடையில் நடந்த நிகழ்ச்சிக்கு சேர்மன் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். ஜேசிஸ் சங்க மண்டல முன்னாள் தலைவர் மணிவண்ணன், நகர மு.தலைவர் ஏழுமலை, செயலாளர் கருணாகரன் ஆகியோர் முன்னிலையில் ராணிப்பேட்டை எம்.எல்.. காந்தி குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுத்து முகாமை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் நகராட்சி மருத்துவர்கள் வானதி, கவுசல்யா, நகராட்சி சுகாதார அலுவலர்கள் ரகீம், பாஸ்கரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அணைக்கட்டு:ஊசூர், அணைக்கட்டு, ஒடுக்கத்தூர் பகுதியில் போலியோ "சொட்டு' மருந்து வழங்கப்பட்டது.ஊசூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட கிராமங்களில் 82 மையங்கள் அமைத்து 15 ஆயிரம் குழந்தைகளுக்கு டாக்டர் சசிகுமார் முன்னிலையில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இந்த பணியில் சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் என 324 பேர் ஈடுபட்டனர். சுகாதார ஆய்வாளர்கள் மண்ணப்பன், பூசாமி, மோகனமூர்த்தி, சரவணராஜ் ஆகியோர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.அணைக்கட்டு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட கிராமங்களில் 84 மையங்கள் அமைத்து 3 ஆயிரத்து 200 குழந்தைகளுக்கு வட்டார மருத்துவ அலுவலர் கைலாசம், டாக்டர்கள் சந்தோஷ்குமார், ராணி, நிவேதினி முன்னிலையில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.இந்த பணியில் சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் என 84 பேர் ஈடுபட்டனர்.சுகாதார ஆய்வாளர் சீனிவாசன், மருந்தாளுனர் கருணாகரன், சமுதாய சுகாதார செவிலியர் மலர்கொடி ஆகியோர் கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டனர். ஒடுகத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட கிராமங்கள் மற்றும் மலைப்பகுதியில் 39 மையங்கள் அமைத்து டாக்டர்கள் கார்த்திக், வெங்கடேஷ், கார்த்திக் நாராயணன், லாவண்யா ஆகியோர் முன்னிலையில் 5 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. மருத்துவமல்லா மேற்பார்வையாளர் துளசிகாந்தன், சுகாதார ஆய்வாளர்கள் சுகுமார், துரைசாமி, செவிலியர்கள் வேண்டா, தமிழ்ச்செல்வி ஆகியோர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.ஊசூர், அணைக்கட்டு, ஒடுகத்தூர் பகுதியில் நடந்த போலியோ சொட்டு மருந்து முகாம்களை உதவி இயக்குனர் விஸ்வநாதன் மேற்பார்வையிட்டார்.

குடியாத்தம்:குடியாத்தம் நகராட்சியில் 31 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் அமைக்கப்பட்டது. பழைய பஸ் நிலையம் அருகே அமைக்கப்பட்டிருந்த போலியோ சொட்டு மருந்து முகாமை நகரமன்ற தலைவர் பாஸ்கர் துவக்கி வைத்தார். நகராட்சி ஆணையாளர் சுப்பிரமணி தலைமை வகித்தார். சுகாதார அலுவலர் ஆறுமுகம், கவுன்சிலர்கள் அமுதா கருணா, அன்வர் பாஷா, இன்னர்வீல் சங்க பொருளாளர் விஜயலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆம்பூர்;ஆம்பூரில் 38 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடந்தன. இந்த ஆண்டுக்கான இரண்டாம் கட்ட போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்கள் நேற்று நடந்தன. ஆம்பூரில் புதிய பஸ்நிலையம் அருகில் நடந்த முகாம் துவக்க விழாவிற்கு நகராட்சி தலைவர் நசீர் அகமது தலைமை தாங்கினார். ஆணையர் உதயராணி ஒரு குழந்தைக்கு சொட்டு மருந்து கொடுத்து முகாமை துவக்கி வைத்தார்.ஆம்பூர் நகராட்சி மற்றும் ரோட்டரி சங்கம், அரிமா சங்கம், ஜேசி சங்கம் உட்பட பல சேவை சங்கங்களின் சார்பாக ஆம்பூர் கஸ்பா ஏ, கஸ்பா பி, கிருஷ்ணாபுரம், உமர்ரோடு, சான்றோர்குப்பம், பன்னீர்செல்வம் நகர் உட்பட அனைத்து நகராட்சி பள்ளிகளிலும், புதிய பஸ்நிலையம், அரசு மருத்துவமனை உட்பட 36 இடங்களிலும், நடமாடும் முகாம் 2 ஆகியவற்றில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை 13 ஆயிரம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டன.

Last Updated on Monday, 08 February 2010 06:18