Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சுகாதாரத்துறை அதிகாரிகள் டீக் கடைகளில் திடீர் ஆய்வு

Print PDF

தினமலர் 23.02.2010

சுகாதாரத்துறை அதிகாரிகள் டீக் கடைகளில் திடீர் ஆய்வு

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தின் பல பகுதிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் டீக்கடைகளில் திடீர் ஆய்வு செய்தனர்.விழுப்புரம் சுகாதார பணிகள் துணை இயக்குநர் டாக்டர் கிருஷ்ணராஜ் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மளிகை கடை, டீக்கடைகளில் நேற்று சுகாதார துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.

திண்டிவனம்: நகராட்சி ஆணையர் முருகேசன் உத்தரவின் பேரில் சுகாதார அதிகாரிகள் ராஜரத்தினம், ஜோதிபாசு, சரவணன் உள்ளிட்டோர் கடைகளில் விற்கப்படும் டீத்தூள் களை பரிசோதனை செய்தனர். இதில் 20 கிலோ கலப்பட டீத்தூள் பாக்கெட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஒலக்கூர் வட்டார மருத்துவஅலுவலர் சாந்தி தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் பரமசிவம், மனோகர், புஷ்பநாதன் ஆகியோர் திண்டிவனம் அடுத்த பட்டணம் கிராமத்தில் சோதனை மேற்கொண்டனர். அப் போது டீக்கடையில் இருந்த கலப் பட டீத்தூள் பறிமுதல் செய்யப் பட்டது. அதே கிராமத்தை சேர்ந்த ஆனந்தன் வீட்டில் வைத்திருந்த 22 கிலோ போலி டீத்தூள் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. வீட்டின் உரிமையாளர் தலைமறைவாகிவிட்டார்.

விக்கிரவாண்டி: வட்டார மருத் துவ அலுவலர் டாக்டர் ரவிக்குமார் தலைமையில் சுகாதார மேற்பார்வையாளர் கலியபெருமாள், ஆய்வாளர் ரவிக்குமார் மற்றும் சுகாதார துறை ஊழியர்கள் நேற்று திடீர் சோதனை நடத்தினர். விக்கிரவாண்டி பகுதியில் உள்ள மளிகைகடைகள், டீக்கடை, பொதுவிநியோக கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு போலி டீத்தூள் பாக்கட்டுகள் 25 கிலோ பறிமுதல் செய்தனர். செஞ்சி: வட்டார சுகாதார மேற் பார்வையாளர் நல்லதம்பி தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் ஏழுமலை, விஜயகுமார், சண்முகம், இளங்கோ, தமிழ்வாணன் உள்ளிட் டோர் பஸ் நிலையம், திண்டிவனம் ரோடு, விழுப்புரம் ரோடு பகுதியில் சோதனை நடத்தினர்.இதில் பல்வேறு நிறுவனங்களின் பெயரில் இருந்த 10 கிலோ கலப்பட டீ தூள் பாக்கெட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Last Updated on Tuesday, 23 February 2010 07:03