Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

டீக்கடைகளில் சுகாதாரத்துறை 'ரெய்டு' ஏழு கிலோ கலப்பட டீத்தூள் பறிமுதல்

Print PDF

தினமலர் 23.02.2010

டீக்கடைகளில் சுகாதாரத்துறை 'ரெய்டு' ஏழு கிலோ கலப்பட டீத்தூள் பறிமுதல்

உடுமலை : உடுமலை ஊராட்சி ஒன்றிய பகுதிகளி லுள்ள டீக்கடைகளில் சுகாதாரத்துறையினர்அதிரடி ஆய்வு செய்தனர். ஏழு கிலோ கலப்பட "டீ'த்தூளை பறிமுதல் செய்தனர். தமிழ்நாடு அரசு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பில் உடுமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட எரிசனம்பட்டி, பெரியவாளாடி, அமராவதிநகர் மற்றும் செல்லப்பம்பாளையம் ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குட்பட்ட கிராமங்களில் கலப்பட டீத்தூள் விற்பனை மற்றும் பயன்படுத்தப்படுத்தப்படுகிறதா என ஆய்வு நடந்தது.வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மகாராஜன் தலைமையில், ஆய்வாளர்கள் நாகதிருமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி, சிவானந்தம் மற்றும் கோடீஸ்வரன் இப்பணியில் ஈடுபட்டனர். நேற்று 17 டீக்கடைகள், 7 மளிகை கடைகள் என மொத்தம் 24 கடைகளில் ஆய்வு மேற்கொண்டதில், கலப்பட டீத்தூள் என கண்டறியப்பட்ட ஏழு கிலோ தூளை பறிமுதல் செய்து அழித்தனர். டீத்தூளில் கலப்படம் செய்யப்பட்டுள்ளதா என கண்டறியடீத்தூள் உணவு மாதிரி எடுக்கப்பட்டு, ஆய்வு கூடத்திற்கு அனுப்பட்டது.ஆய்வில், டீக்கடைகளில் பொதுமக்கள் முன்னிலையில்,டீத்தூளில் கலப்படம் செய்யப்பட்டுள்ளதை கண்டறியும் சோதனை முறை செய்து காண்பிக்கப்பட்டது. மேலும், பொதுமக்கள் கலப்படடீத்தூள் பயன்படுத்துவதால், மூட்டுவலி, குடல்புண் மற்றும் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் ஏற்படலாம் என சுகாதாரத்துறையினர் எச்சரித்தனர்.

Last Updated on Tuesday, 23 February 2010 07:05