Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நொய்யல் ஆற்றில் கழிவை கொட்டிய வேன் பறிமுதல்

Print PDF

தினமலர் 01.03.2010

நொய்யல் ஆற்றில் கழிவை கொட்டிய வேன் பறிமுதல்

திருப்பூர் : நொய்யல் ஆற்றில், ஓட்டல் மற்றும் இதர கழிவை கொட்டிய வேன் பறிமுதல் செய்யப்பட்டது. "வேன் டிரைவர் மற்றும் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,' என ஆர்.டி.., அலுவலக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

நொய்யல் ஆற்றில் தொழிற்சாலைக்கழிவுகள் கொட்டப்பட்டு, ஆறு மாசுபடுத்தப்படுகிறது. ஓட்டல், பேக்கரி, இறைச் சிக்கடைகளில் இருந்தும் கழிவுகள் ஆற்றில் கொட் டப்படுகின்றன. இதைத்தடுக்க, மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த மாதம் நொய்யலில் தொழிற்சாலைக் கழிவுகளைக் கொட்ட வந்த டூ-வீலர் மற்றும் மினி ஆட் டோவை, மாநகராட்சி நிர் வாகம் பறிமுதல் செய்தது.

வீரபாண்டி அருகே ஓடையில் கழிவை கொட் டிய மினி ஆட்டோவை, தெற்கு ஆர்.டி.., அலுவலகத்தினர் பறிமுதல் செய்தனர். இந்நிலையில், யுனிவர்சல் ரோடு அருகே நேற்று நொய்யலில் ஓட் டல் கழிவை டெம்போ மூலம் கொட்டுவதாக, கலெக்டருக்கு புகார் சென்றது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க ஆர்.டி.., அலுவலகத்தினருக்கு உத்தரவிட்டார். சம்பவ இடத்தில் ஆய்வு செய்த வடக்கு வட்டாரப் போக்குவரத்து இன்ஸ் பெக்டர் உலகநாதன், ஓட்டல் கழிவை கொட்டிக் கொண்டிருந்த டெம்போ வேனை (டி.என்., 39 ஜே 9124) பறிமுதல் செய்தார்.

வட்டார போக்குவரத்து இன்ஸ்பெக்டர் உலகநாதன் கூறுகையில், ""ஓட்டல் கழிவை நொய்யலில் கொட்டிய 407 ரக வேன் பறிமுதல் செய்யப்பட்டது. டிரைவர் மற்றும் வேன் மீது மேல்நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு, விதிமுறை மீறுவோர் தண்டிக்கப்படுவர்,' என்றார்.

Last Updated on Monday, 01 March 2010 06:28