Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பொது சுகாதார விழிப்புணர்வு

Print PDF

தினமலர் 16.03.2010

பொது சுகாதார விழிப்புணர்வு

திருவாரூர்: திருவாரூரில் நகராட்சி சார்பில் பொது சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கலைநிகழ்ச்சி நடத்தப்பட்டன.இதுகுறித்து ஆணையர் சரவணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:தஞ்சை மண்டல நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் சாந்தி உத்தரவின் பேரில் பொதுமக்களுக்கு பொது சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

தஞ்சாவூர் அன்னை கம்சலை கலைக்குழு மூலம் பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், பாரதி தெரு, வண்டிக்காரத்தெரு, அழகிரி நகர் உட்பட பல இடங்களில் திடக்கழிவு மேலாண்மை, பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் .தீமைகள், அயோடின் கலந்த உப்பின் நன்மைகள், உணவு கலப்படம் சம்பந்தமான விழிப்புணர்வு, தாய்சேய் நலம், குழந்தை வளர்ப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, புவி வெப்பமடைதல், மரம் வளர்த்தல், கொசு ஒழிப்பு, சிக்கன்குனியா நோய் விழிப்புணர்வு ஆகியவை குறித்து கலைநிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பார்வையாளராக வந்த குழந்தைகளிடம் விழிப்புணர்வு குறித்து கேள்வி கேட்கப்பட்டது. சரியாக பதில் கூறிய குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை சுகாதார அலுவலர் ராஜா தலைமையில் துப்புரவு ஆய்வர்கள் பழனிசாமி, பாலமுருகன், மணாழகன், அருள்தாஸ், சமுதாய அமைப்பாளர் சரஸ்வதி ஆகியோர் செய்திருந்தனர்.