Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

உளுந்தூர்பேட்டை பஸ் நிலையத்தில் பயனற்றுள்ள நவீன கட்டண கழிவறை

Print PDF

தினமணி 22.03.2010

உளுந்தூர்பேட்டை பஸ் நிலையத்தில் பயனற்றுள்ள நவீன கட்டண கழிவறை

உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டை பஸ் நிலையத்தில் புதிய தாக கட்டி முடிக்கப்பட்ட கட்டண கழிவறை பயனற்றுக் கிடப்பதால் பொதுமக்கள் அவதிடைந்து வருகின்றனர்.
உளுந்தூர்பேட்டை பஸ் நிலையத்தின் கிழக்கு பகுதி யில் பயணிகள் வசதிக்காக கழிப்பிடம் உள்ளது. இதில் ஆண்கள் பயன்படுத்தும் கழிப் பறைக்கு மேல் உள்ள சிமென்ட் காரைகள் பெயர்ந்து, அதன்மேல் வைக்கப்படுள்ள தொட் டியி லிருந்து தண்ணீர் மழை போல் கொட் டுகிறது. இதனால் சிறுநீர் கழிக்க செல்பவர்கள் கழிப்பிடத் திற்குள் சென்று வெளியே வரும் போது உடைகள் நனைந் துவிடும் அவல நிலை உள்ளது. மேலும் பஸ் நிலையத் தின் மேற் குபகுதி யில் கேளிக்கை வரி மானிய திட்டம் 2008-2009ம் ஆண்டு நிதியில் 5 லட்சம் ரூபாய் செலவில் நவீன கட்டண கழிவறை கட்டிமுடிக்கப் பட்டது.ஆனால் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடாமல் அதனை பேரூ ராட்சி நிர்வாகத்தினர் பூட்டி வைத்துள்ளனர். இந்த நவீன கழிவறையை பொதுமக்கள் பயன் பாட்டிற்கு திறந்துவிட பேரூராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Last Updated on Monday, 22 March 2010 09:48