Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குப்பைத் தொட்டியில் மருத்துவக்கழிவு கொட்டினால் அபராதம்:ஆணையர்

Print PDF

தினமணி 01.04.2010

குப்பைத் தொட்டியில் மருத்துவக்கழிவு கொட்டினால் அபராதம்:ஆணையர்

கோவை, மார்ச் 31: மருத்துவக் கழிவுகளை குப்பைத் தொட்டியில் கொட்டினால் சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு அபராதம் விதிக்கப்படும் என்று, கோவை மாநகராட்சி ஆணையர் அன்சுல் மிஸ்ரா எச்சரித்துள்ளார்.

÷இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

÷கோவை மாநகரப் பகுதியில் உள்ள மருத்துவமனைகள், மருத்துவக் கழிவுகளை அப்புறப்படுத்த அதற்கென நிர்ணயிக்கப்பட்டுள்ள பொதுநிறுவனத்திடம் தான் ஒப்படைக்க வேண்டும்.

÷மாநகராட்சியின் குப்பைத் தொட்டிகளிலோ, சாக்கடையிலோ மருத்துவக் கழிவுகளைக் கொட்டக் கூடாது. அவ்வாறு செய்யும் மருத்துவமனைகளுக்கு அபராதம் விதிக்கப்படும்.

÷மருத்துவக் கழிவுகளை குப்பைத் தொட்டிகளில் கொட்டுவதால் துப்புரவுப் பணியாளர்களின் கைகளில் ஊசி, கண்ணாடி பாட்டில்கள் கிழித்து சிரமப்படும் சூழல் இருக்கிறது. மேலும் நோய் தாக்கும் அபாயமும் உள்ளது.

÷இதுதொடர்பான விவரங்களுக்கு 93622}55666 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று, தெரிவித்துள்ளார்.

Last Updated on Thursday, 01 April 2010 09:54