Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

காலாவதியான உப்பு பாக்கெட் விற்க அதிகாரிகள் தடை:தினமலர் செய்தி எதிரொலி

Print PDF

தினமலர் 12.04.2010

காலாவதியான உப்பு பாக்கெட் விற்க அதிகாரிகள் தடை:தினமலர் செய்தி எதிரொலி

ஸ்ரீவைகுண்டம்: தென்திருப்பேரையில் காலாவதியான உப்பு பாக்கெட்டுகள் தினமலர் செய்தி எதிரொலியால் திருப்பி அனுப்பபட்டது.தென்திருப்பேரை அமுதம் ரேஷன் கடையில் 2008 ஆம் ஆண்டு 11வது மாதம் உள்ள உப்பு பாக்கெட்டுகள் நிர்ணயிக்கபட்ட 12 மாதங்களைவிட 5 மாதங்கள் கடந்து விற்பனை செய்யப்பட்டு வந்தது. இது குறித்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தினமலரில் செய்தி வெளியானது, இந்நிலையில் மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில் மாவட்ட நுகர்பொருள் வாணிபகழக அதிகாரிகள், திருச்செந்தூர் தாலுகா வழங்கள் அதிகாரிகள் எடுத்த நேரடி நடவடிக்கையின் பேரில் உப்பு பாக்கெட்டுகள் திருப்பி குடோனுக்கு அனுப்பபட்டது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

லாரி மோதி முதியவர் பலிகுளத்தூர், ஏப்.12- குளத்தூரில் ரோட்டை கடக்க முயன்ற முதியவர் மீது லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது;குளத்தூர் அண்ணாநகரைச் சேர்ந்தவர் வேதமுத்து (75). சம்பவத்தன்று இவர் குளத்தூர் கிழக்கு கடற்கரை ரோட்டை கடக்க முயன்ற போது அந்த வழியாக மணல் ஏற்றிக் கொண்டு வந்த லாரி வேதமுத்து மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து தகவல் அறிந்ததும் குளத்தூர் இன்ஸ்பெக்டர் குமரன் விரைந்து சென்று வேதமுத்து உடலை மீட்டு பிரேத பரிசோதனை க்காக விளாத்திகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். ரோட்டை கடக்க முயன்ற முதியவர் இறந்த சம்பவத்தால் நேற்று அப்பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.

Last Updated on Monday, 12 April 2010 06:51