Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நெல்லையில் சுகாதாரமற்ற கேக், ரொட்டி தயாரிப்பு 21ம் தேதி நேரில் ஆஜராக மாநகராட்சி உத்தரவு

Print PDF

தினமலர் 15.04.2010

நெல்லையில் சுகாதாரமற்ற கேக், ரொட்டி தயாரிப்பு 21ம் தேதி நேரில் ஆஜராக மாநகராட்சி உத்தரவு

திருநெல்வேலி:நெல்லையில் சுகாதாரமற்ற முறையில் கேக், ரொட்டி தயாரித்தது தொடர்பாக வரும் 21ம் தேதி விசாரணை நடக்கிறது.நெல்லை ஜங்ஷன் கைலாசபுரம் நடுத்தெருவில் அனுமதியின்றி நடந்து வரும் கேக், ரொட்டி தயார் செய்யும் இடம் ஆய்வு செய்யப்பட்டு பல்வேறு குறைபாடுகள் மாநகராட்சி அதிகாரிகளால் கண்டறியப்பட்டது.பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ள இக்கட்டடத்தின் தரை தளம் மோசமாக பல மாதங்களாக சுத்தம் செய்யப்படாமல் காணப்படுகிறது. உணவு பொருள் தயாரிக்கும் இடத்தில் வெப்பக் காற்று புகை வெளியேற போதுமான வசதி செய்யப்படவில்லை. அண்டி தோடு எரிபொருளாக பயன்படுத்தும் நிலையில் புகை வெளியேறும் குழாயின் உயரம் போதுமானதாக இல்லாத நிலையில் இப்பகுதி மக்களுக்கு சுவாச கோளாறுகள், சுகாதார கேடு ஏற்படுவதாகவும் மாநகராட்சி குழுவினர் கண்டறிந்தனர்.

இந்த குறைபாடுகள் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் உரிய ஆவணங்களுடன் வரும் 21ம் தேதி நேரில் விசாரணையில் ஆஜராக வேண்டும். இல்லையெனில் மாநகராட்சி சட்ட விதிகளின்படி உரிய மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி கமிஷனர் பாஸ்கரன் தெரிவித்தார

Last Updated on Thursday, 15 April 2010 08:57