Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அதிரையில் கலப்பட பொருட்கள் அழிப்பு

Print PDF

தினமலர் 19.04.2010

அதிரையில் கலப்பட பொருட்கள் அழிப்பு

பட்டுக்கோட்டை: அதிராம்பட்டினம் பேரூ ராட்சி பகுதியில் உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வது கண்டுபிடிக்கப் பட்டு நடவடிக்கை எடுக் கப்பட்டது.அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதியில் டீத்தூள், மளிகைப் பொருட்கள், குளிர்பானங்கள் ஆகியவற் றில் கலப்படம் செய்யப் பட்டு விற்பதாக தகவல் கிடைத்தது.இதை ஒட்டி சுகாதார ஆய்வாளர்கள் பாம்பன், காசிநாதன், சந்திரசேகரன், கண்ணன், துப்புரவு பணியாளர் ஸ்ரீதரன் ஆகியோர் பேரூராட்சியில் உள்ள அனைத்து கடைகளிலும் சோதனையிட்டனர். அப்போது சந்தேகப் படும் படியாக உள்ள அனைத்து உணவுப் பொருட்களையும் கைப் பற்றி அழித்தனர்.

சுகாதாரக் கேடான உணவு விடுதி, குளிர்பானக் கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட அழுகிய பழங்கள் மற்றும் ஐ.எஸ். . முத்திரை இல்லாத குடிநீர் பாக்கெட்டுகள் அதிராம்பட்டினம் பஸ் நிலையத்தில் வைத்து அழிக்கப் பட்டது. கலப்பட உணவுப் பொருள், ஈ மொய்க்கும் பண்டங்கள், திறந்த வெளியில் வைத்திருக்கும் உணவுப் பொருட்கள், தயாரிப்பு தேதி இல்லாத உணவுப் பொருட்கள், கடை லைசென்ஸ் இல்லாமல் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார துறை அறிவுறுத்தி உள்ளது.

Last Updated on Monday, 19 April 2010 06:24