Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

காலாவதி பொருள் விற்றால் ஆயுள் தண்டனை விதிக்க வேண்டும்; சட்டசபையில் வற்புறுத்தல்

Print PDF

மாலை மலர் 04.05.2010

காலாவதி பொருள் விற்றால் ஆயுள் தண்டனை விதிக்க வேண்டும்; சட்டசபையில் வற்புறுத்தல்

சென்னை, மே. 4-

காலாவதி உணவு பொருள் விற்பனை தொடர்பாக சட்டசபையில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது நடந்த விவாதம் வருமாறு:-

பி.கே.சேகர்பாபு (.தி. மு..):- சென்னையில் காலாவதி பொருட்களும், கலப்பட பொருட்களும் தாராளமாக விற்கப்படு கின்றன. கொள்ளை கூட்ட கும்பலே இதில் தீவிர விற்பனையில் ஈடுபடுகிறது.

இந்த பொருட்களை குடிசை பகுதிகளில் அதிகம் விற்று உள்ளனர். காலாவதி உணவு பொருட்களை விற்க முன்னணி வணிக நிறுவனங்கள் ஊக்குவிக் கின்றன. காலாவதியான மருந்து பிடிபட்ட பரபரப்பு அடங்குவதற்குள் காலாவதி உணவு பொருட்களும் தாராளமாக புழக்கத்தில் உள்ளன. இதில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சமூக விரோத கும்பல் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், குற்றவாளிகள் சுலபமாக ஜாமீனில் வந்து விடுகின்றனர்.

எனவே தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அவர்களை ஜெயிலில் அடைக்க வேண்டும், சட்டத்தை கடுமை யாக்க ஆயுள் தண்டனை வரை விதிக்கும் அளவுக்கு இந்த சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே சட்ட திருத்தம் கொண்டு வரவேண்டும்.

பீட்டர் அல்போன்ஸ் (காங்.):- மத்திய அரசு ஏற்கனவே உணவு கலப்படம் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க ஆயுள் தண்டனையை சட்டமாக நிறைவேற்றி உள்ளது. அதை தமிழ்நாட்டிலும் நாம் கொண்டு வரவேண்டும். இதற்கு ஒரு தனியாக அதிகார அமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.

பெரிய சூப்பர் மார்க்கெட் கடைக்காரர்கள் தான் காலாவதி பொருளை சந் தைக்கு விற்கிறார்கள். எனவே இதன் பின்னணியில் உள்ள தொழில் அதிபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேல்முருகன் (பா...):- இன்று நாம் சாப்பிடும் எல்லாவற்றிலும் கலப்படம் உள்ளது. குடிக்கும் டீயில் கூட முந்திரி கழிவுகளை கலந்து விடுகிறார்கள். எனவே உயிரோடு விளையாடும் கலப்படக்காரர்கள் மீதும் காலாவதி பொருள் விற்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மகேந்திரன் (மார்க்சிஸ்டு கம்யூ¢.):- உயிரை பறிக்கும் காலாவதி, கலப்பட பொருட்கள் விற்பவர்கள் மீது தயவு தாட்சன்யம் இன்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதே போல சிவபுண்ணியம் (இந்தியகம்யூ.), சதன் திருமலைகுமார் (.தி.மு..), ரவிக்குமார் (விடுதலை சிறுத்தை) ஆகியோரும் இந்த கருத்துக்களை வலியுறுத்தி பேசினார்கள்.