Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

நாகையில் பிப். 28-ல் யானைக்கால் நோய்த் தடுப்பு மாத்திரைகள் வழங்கும் பணி

Print PDF

தினமணி 26.02.2010

நாகையில் பிப். 28-ல் யானைக்கால் நோய்த் தடுப்பு மாத்திரைகள் வழங்கும் பணி

நாகப்பட்டினம், பிப். 25: நாகை மாவட்டத்தில் பிப். 28-ம் தேதி யானைக்கால் நோய்த் தடுப்பு மாத்திரைகள் வழங்கும் பணி நடைபெறும் என்றார் ஆட்சியர் (பொறுப்பு) . அண்ணாதுரை.

யானைக்கால் நோய் ஒழிப்புத் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) ஆ. அண்ணாதுரை தலைமை வகித்தார்.

சுகாதாரத் துறை துணை இயக்குநர் வே. வைரமணி, மருத்துவத் துறை இணை இயக்குநர் பூர்வாதேவி, வருவாய்க் கோட்டாட்சியர் சி.ராஜேந்திரன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்துக்குப் பின்னர், ஆட்சியர் (பொறுப்பு) அண்ணாதுரை தெரிவித்தது:

யானைக்கால் நோய் ஒழிப்புத் திட்டத்தில், இந்தியாவில் முன்னோடி மாநிலமாக தமிழகம் உள்ளது. நாகை மாவட்டத்தில் டி.இ.சி. மாத்திரை ஒட்டு மொத்த சிகிச்சைத் திட்டம் 1998-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை 9 சுற்றுகள் செயல்படுத்தப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் 2 ஆயிரம் பேர் யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், கடந்த 5 ஆண்டுகளில் நாகை மாவட்டத்தில் ஒரு நபர்கூட, யானைக்கால் நோயால் பாதிக்கப்படவில்லை. யானைக்கால் நோய் ஒழிப்புத் திட்டத்தின் 10-ம் சுற்று, வரும் 28-ம் தேதி செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம், நாகை மாவட்ட நகர்ப் பகுதிகளில் 1,97,721 பேருக்கும், ஊரகப் பகுதிகளில் 12,13,299 பேருக்கும் டி.இ.சி. மாத்திரைகள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தப் பணியில் பொது சுகாதாரத் துறை, ஊட்டச்சத்துத் துறை, அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினர் உள்ளிட்ட 6,415 பேர், வீடு வீடாகச் சென்று டி.இ.சி. மாத்திரைகள் வழங்கும் பணியை மேற்கொள்வர். 2 வயதுக்குள்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், தீவிர சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் இந்த மாத்திரைகளை உட்கொள்ள வேண்டாம். மற்றவர்கள், தவறாமல் டி.இ.சி. மாத்திரைகளை உட்கொண்டு, யானைக்கால் நோய் ஒழிப்புத் திட்டப் பணிக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார் அவர்.

Last Updated on Friday, 26 February 2010 09:42
 

வீட்டில் இருந்தபடி ரத்தப் பரிசோதனை

Print PDF

தினமணி 26.02.2010

வீட்டில் இருந்தபடி ரத்தப் பரிசோதனை

சென்னை, பிப். 25: வீட்டில் இருந்தபடியே மிகக் குறைந்த கட்டணத்தில் அனைத்து வகையான ரத்தப் பரிசோதனைகளையும் செய்துகொள்ளும் திட்டம் சென்னை மாநகராட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை புளியந்தோப்பு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வியாழக்கிழமை நடந்த நிகழ்ச்சியில், மேயர் மா. சுப்பிரமணியன் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.

வீட்டில் இருந்தபடி 1913 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டால், மாநகராட்சி லேப் டெக்னிஷியன்கள் வீட்டுக்கே வந்து ரத்த மாதிரிகளை எடுத்துச் சென்று, முடிவுகளை தெரிவிப்பர்.

கட்டணம்? ரத்தத்தில் சர்க்கரை அளவை அறிய ரூ. 15}ம், சிறு நீரகத்தின் செயல் திறன் அறிய ரூ. 20}ம், சர்க்கரை ஏற்ற சோதனைக்கு ரூ. 60}ம், கொழுப்பு சத்து அளவை அறிய ரூ. 20}ம் கட்டணம் வசூலிக்கப்படும்.

ரூ. 750}க்கு முழு உடல் பரிசோதனை: இதுமட்டும் அல்லாமல் ஏழை மக்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக மாநகராட்சி பகுப்பாய்வுக் கூடங்களில் ரூ. 750}க்கு முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதுபோல் இ.சி.ஜி. பார்க்க ரூ. 40}ம், அல்ட்ரா சவுண்ட் சோதனைக்கு ரூ. 150}ம், எக்ஸ்ரே எடுக்க ரூ. 50}ம் கட்டணம்.

""சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட பலர், அதுகுறித்த பரிசோதனை செய்து கொள்வதற்கே நேரம் ஒதுக்க முடியாத நிலையில் உள்ளனர். இவர்களின் குறையை போக்கும் வகையில், வீட்டிலிருந்தபடியே ரத்தப் பரிசோதனை செய்துகொள்ளும் திட்டத்தை மாநகராட்சி அறிமுகம் செய்துள்ளது'' என்று மேயர் தெரிவித்தார்.

Last Updated on Friday, 26 February 2010 09:06
 

சுகாதாரமற்ற முறையில் பொருட்கள் விற்பனை செய்த 2 கடைகளுக்கு பூட்டு : மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

Print PDF

தினமலர் 26.02.2010

சுகாதாரமற்ற முறையில் பொருட்கள் விற்பனை செய்த 2 கடைகளுக்கு பூட்டு : மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

திருநெல்வேலி:நெல்லை புதுபஸ்ஸ்டாண்டில் சுகாதாரமற்ற முறையில் பொருட்கள் விற்பனை செய்த 2 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் பூட்டு போட்டனர்.நெல்லை புது பஸ்ஸ்டாண்ட்டில் உள்ள சில கடைகளில் சுகாதரமற்ற முறையில் பொருட்கள் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக மாநகராட்சி கமிஷனர் பாஸ்கரனுக்கு புகார் செய்யப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் மாநகராட்சி கமிஷனர் பாஸ்கரன், செயற்பொறியாளர் நாராயணநாயர், உதவி கமிஷனர் பொறுப்பு கருப்பசாமி, உதவி வருவாய் ஆய்வாளர் சோம.சுந்தரம் ஆகியோர் புது பஸ் ஸ்டாண்டில் உள்ள பல்வேறு கடைகளில் திடீரென ஆய்வு செய்தார். முதல் பிளாட்பாரத்தில் உள்ள இரண்டு கடைகள் சுகாதாரமற்ற முறையில் பொதுமக்களுக்கு பொருட்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த இரண்டு கடைகளையும் அடைக்க மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டார்.சுகாதார ஆய்வாளர் சங்கரலிங்கம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் அந்த இரண்டு கடைகளும் நேற்று மாலை அடைக்கப்பட்டன.

Last Updated on Friday, 26 February 2010 06:27
 


Page 336 of 519