Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

கலப்பட டீத்தூள் பறிமுதல்

Print PDF

தினமலர் 25.02.2010

கலப்பட டீத்தூள் பறிமுதல்

சுல்தான்பேட்டை : சுல்தான்பேட்டை வட்டாரத்தில் உள்ள கடைகளில் சுகாதாரத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி ஐந்து கிலோ கலப்பட டீத்தூளை பறிமுதல் செய்து அழித்தனர்.

சுல்தான்பேட்டை வட்டார சுகாதார மேற்பார்வை யாளர் அருள்ராஜ், சுகாதார ஆய்வாளர்கள் வெள் ளிங்கிரி, ரவிச்சந்திரன், கனகராஜ் தலைமையிலான அலுவலர்கள், சுல்தான்பேட்டை வட்டாரத்தில் உள்ள மளிகைக்கடைகள், டீக்கடைகள், பேக்கரி கடைகளில் போலி கலப்பட டீத்தூள் பயன்படுத்தப்படுகிறதா அல்லது விற்பனை செய்யப்படுகிறதா என அதிரடிசோதனை நடத்தினர்.

இதில், ஐந்து கிலோ கலப்பட டீத்தூள் பறிமுதல் செய்யப்பட்டு, அழிக்கப்பட்டது. ஆய்வு செய்த டீத்தூள் மாதிரி கோவை உணவு பொதுபகுப்பாய் வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. கலப்பட டீத் தூள் வைத்து இருந்தவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க மேலதிகாரிகளுக்கு சுகாதாரத்துறையினர் பரிந்துரை செய்துள்ளனர்.

Last Updated on Thursday, 25 February 2010 07:10
 

டீ தூளில் கலப்படம் குறித்து ஆய்வு

Print PDF

தினமலர் 25.02.2010

டீ தூளில் கலப்படம் குறித்து ஆய்வு

தூத்துக்குடி : தூத்துக்குடி யூனியனுக்கு உட்பட்ட கிராமங்களில் டீ தூளில் கலப்படம் குறித்து உணவு ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர்.தூத்துக்குடி யூனியனுக்கு உட்பட்ட மடத்தூர், பிஆண்ட் டி காலனி, ராஜிவ் நகர், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுசுகாதார துறை இயக்குனர் உத்தரவுப்படி டீ தூளில் கலப்படம் குறித்து ஆய்வு செய்தனர். பல்வேறு இடங்களில் டீ தூளின் மாதிரிகள் சேகரிகப்பட்டு ஆய்விற்கு அனுப்பபட்டுள்ளது.

Last Updated on Thursday, 25 February 2010 07:02
 

டீ தூள்களில் கலப்படம்: அதிகாரிகள் திடீர் சோதனை

Print PDF

தினமலர் 25.02.2010

டீ தூள்களில் கலப்படம்: அதிகாரிகள் திடீர் சோதனை

பேரம்பாக்கம்: திருவள்ளூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் டீ தூள் களில் கலப்படம் உள்ளதா என உணவு கலப்படத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை செய்து 30 கிலோ டீ தூள்களை பறிமுதல் செய்தனர். கொஞ்சம் கொஞ்சமாக விஷமாக மாறி, உயிரை பறிக்கும் கலப்பட டீத் தூள் விற்பனை தமிழகம் முழுவதும் அமோகமாக நடந்து வருவதாக தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குனருக்கு தகவல் வந்தது. இவரது ஆணைப்படி திருவள்ளூர் மாவட்ட சுகாதார பணிகள் துறை துணை இயக்குனர் சம்பத் உத்தரவின் பேரில், கடம்பத்தூர் ஒன்றிய பகுதிகளில் உள்ள டீ கடைகள் மற்றும் மளிகை கடைகளில் உணவு கலப் படத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை செய்தனர். இப்பணியில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அருட்செல்வி, ராதிகா தேவி, உணவு ஆய்வாளர்கள் சிவக் குமார், முருகன், பிரபாகரன் மற்றும் சுகாதார ஆய் வாளர்கள் ஈடுபட்டனர்.

பேரம்பாக்கம், கடம்பத் தூர், மணவாளநகர் ஆகிய பகுதிகளில் உள்ள 30க்கும் மேற்பட்ட டீக் கடைகள் மற்றும் மளிகை கடைகளில் கலப்பட டீத்தூள் விற்பனை செய்யப்படுகிறதா என சோதனை செய் தனர். சோதனையில் 30 கிலோ கலப்பட டீத்தூள்களை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இதேபோல ஓட்டல்கள், பேக்கரி ஆகியவற்றுக்கும் சென்று உணவு கலப்படத்தை கண்டுபிடித்து சாப்பிடத் தகாத உணவு பொருட்களை அழித் தனர். பல கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு எச்சரிக்கை விடுக்கப் பட்டது. இதே போல புழல், காரம்பாக்கம், மணலி, காரனோடை ஆகிய பகுதிகளிலும் சோதனை நடத்தப் பட்டது. இச்சோதனை மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நடைபெறும்' என அதிகாரிகள் தெரிவித் தனர்.

Last Updated on Thursday, 25 February 2010 06:38
 


Page 338 of 519