Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

போலி டீ தூள் உபயோகமா?டீக்கடைகளில் 'திடீர்' ஆய்வு:சேத்துப்பட்டில் பரபரப்பு

Print PDF

தினமலர் 24.02.2010

போலி டீ தூள் உபயோகமா?டீக்கடைகளில் 'திடீர்' ஆய்வு:சேத்துப்பட்டில் பரபரப்பு

சேத்துப்பட்டு:சேத்துப்பட்டில் போலி டீ தூள் பயன்படுத்தப்படுகிறதா? என்று டீ கடைகளில் சுகாதார ஊழியர்கள் திடீர் ஆய்வு செய்தனர்.சேத்துப்பட்டு பேரூராட்சியில் 25க்கும் அதிகமான டீக்கடைகள் உள்ளன. இதில் பல கடைகள், சுகாதாரம் இன்றி கழிவுநீர் கால்வாய்கள் ஓரமாக வைத்துள்ளனர். டீ கடையின் கழிவு நீரை நடுரோட்டிலேயே ஊற்றுகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. ரோட்டில் நடந்து செல்லும் பொதுமக்கள் கழிவுநீரை மிதித்துக்கொண்டு தான் செல்ல வேண்டியுள்ளது. பால் காய்ச்சும் பாத்திரங்களை மூடுவதே கிடையாது. இதில் ரோட்டில் பறக்கும் தூசிகள் எல்லாம் விழுந்து கிடக்கும். இந்த பாலில் இருந்துதான் வாடிக்கையாளர்களுக்கு டீ தயாரித்து கொடுப்பார்கள். பொதுமக்களும் இதையே வாங்கி குடிக்கும் அவல நிலை காணப்படுகிறது.இதற்கிடையே, சேத்துப்பட்டு டீக்கடைகளில் புளியங்கொட்டை, மரத்தூள் கலந்த போலி டீ தூள் பயன்படுத்தி, டீ தயாரிப்பதாக மாவட்ட சுகாதார துறையினருக்கு பொதுமக்கள் புகார் செய்தனர்.

இதைத்தொடர்ந்து, மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனர் சித்ரா உத்தரவின் பேரில், சேத்துப்பட்டு வட்டார மருத்துவ அலுவலர் கீர்த்தி தலைமையில் வட்டார மேற்பார்வையாளர் சந்திரசேகர், சுகாதார ஆய்வாளர்கள் அன்பரசன், அந்தோணிராஜ், ராமச்சந்திரன் ஆகியோர் சேத்துப்பட்டு பேரூராட்சியில் உள்ள டீக்கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது டீ தூள் மாதிரிகளை சேகரித்து, சென்னை கிண்டியில் உள்ள பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைத்தனர்..எஸ்.. தரம் இல்லாமல், போலி டீ தூள் தான் என்று கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார துறையினர் தெரிவித்தனர்.டீக்கடைகளில் சுகாதார துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டதால் சேத்துப்பட்டில் பரபரப்பு ஏற்பட்டது.

Last Updated on Wednesday, 24 February 2010 07:07
 

ஆடு இறைச்சி கடைகளில் பெரம்பலூர் நகராட்சி அதிகாரிகள் 'ரெய்டு'

Print PDF

தினமலர் 24.02.2010

ஆடு இறைச்சி கடைகளில் பெரம்பலூர் நகராட்சி அதிகாரிகள் 'ரெய்டு'

பெரம்பலூர்: பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஆடு இறைச்சி கடைகளில் நகராட்சி அதிகாரிகள் நேற்று திடீர் ரெய்டு நடத்தினர். பெரம்பலூர் நகரில் ஆடு இறைச்சியை வெட்டுவதற்காக இருபது லட்சம் ரூபாய் செலவில் வடக்குமாதவி சாலையில் ஆடு இறைச்சி கூடம் அமைக்கப்பட்டுள்ளது. ஆடு இறைச்சி விற்பனை செய்வோர் இங்கு கொண்டு வந்து கால்நடை மருத்துவரிடம் ஆட்டை காண்பித்து அதை வெட்டித்தோல் உரித்த பிறகு ஆட்டுத் தொடையில் மருத்துவரால் சீல் வைத்தப்பின்பு விற்பனை செய்ய வேண்டும் என விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆடு இறைச்சி விற்பனையாளர்கள் விதிமுறைகளை மீறி ஆடுகளை தங்களது விற்பனை கூடத்திலேயே அறுத்து விற்பனை செய்து வருவதாக புகார் வந்தது. இதையடுத்து நகராட்சி கமிஷனர் அசோக்குமார் உத்தரவின்பேரில், சுகாதார ஆய்வாளர் வெங்கடாஜலம் தலைமையில், துப்புறவு பணி மேற்பார்வையாளர் கணேசன், களப்பணி உதவியாளர் பன்னீர்செல்வம், துப்புரவு ஆய்வாளர் முருகன் மற்றும் துப்புறவு பணியாளர்கள் கொண்ட குழுவினர் நேற்று காலை பெரம்பலூர் நகராட்சி பகுதிக்குட்பட்ட பழைய பஸ் ஸ்டாண்ட், வடக்குமாதவி சாலை, துறைமங்கலம் நான்குரோடு, துறையூர் சாலை ஆகிய பகுதிகளில் உள்ள ஒன்பது கடைகளை திடீர் ஆய்வு செய்தனர். அப்போது, விதிமுறை மீறி "சீல்' வைக்காமல் விற்பனை செய்ய வைக்கப்பட்டிருந்த 10 கிலோ எடையுள்ள ஆட்டு இறைச்சியை நகராட்சிக் குழுவினர் பறிமுதல் செய்தனர்.

Last Updated on Wednesday, 24 February 2010 07:05
 

கொசுவை ஒழிக்க நோய் தராத பூச்சிகளை உருவாக்க ஆய்வு :பொது சுகாதார துறை இயக்குனர் தகவல்

Print PDF

தினமலர் 24.02.2010

கொசுவை ஒழிக்க நோய் தராத பூச்சிகளை உருவாக்க ஆய்வு :பொது சுகாதார துறை இயக்குனர் தகவல்

மதுரை: ""நோய்களை உருவாக்கும் கொசுக்களை ஒழிக்க, நோய்களை தராத பூச்சிளை உருவாக்க ஆய்வு நடக்கிறது,'' என பொது சுகாதார துறை இயக்குனர் இளங்கோ கூறினார்.மதுரையில் பூச்சியியல் மருத்துவ ஆராய்ச்சி மையம் சார்பில், "ஆசியன் பயோ சேப்டி' பயிற்சி கருத்தரங்கு நேற்று நடந்தது. மையத்தின் பொறப்பாளர் பி.கே.தியாகி தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் எஸ்.இளங்கோ பேசியதாவது: மரபணு மாற்றத்தால் பூச்சிகளை உருவாக்கி, நோய்களை தடுத்தல் தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக சர்வதேச அளவில் 16 நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். நோய்களை உருவாக்கும் கொசு போன்ற பூச்சிகளை ஒழிக்க, நோய்களை உருவாக்காத பூச்சிகளை உருவாக்க ஆய்வு மேற்கொளப்பட்டு வருகிறது. விவசாயத்தில் நோய் பாதிப்பை தடுக்க, மரபணு மாற்றப்பட்ட விதைகள் இல்லாத காய்கறிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதனால் ஒரிஜினல் காய்கறிகள் அழியும் வாய்ப்புள்ளது என்பதால், விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

இதேபோல பூச்சிகளிலும் உருவாக்கும்போது, அது மனித கோட்பாடுகளுக்கு உட்பட்டு, சட்டத்திற்கும், நெறிமுறைகளுக்கும் உட்பட்டு இருக்க வேண்டும். சமூகத்திற்கு பாதுகாப்பாக இருக்க வேண்டுமே தவிர, மக்களுக்கு தீங்கு விளைவிப்பதாக இருக்கக் கூடாது. ஒட்டுமொத்தமாக சுற்றுச் சூழல் பாதிப்பு இல்லாததாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் அதை மக்கள் ஏற்றுக் கொள்வர், என்றார்.பயிற்சி அரங்கில் டாக்டர் தீபாலிமுகர்ஜி, காசநோய் ஆய்வு மைய பொறுப்பாளர் குமாரசாமி உட்பட பல்வேறு டாக்டர்கள் கலந்து கொண்டனர்.

Last Updated on Wednesday, 24 February 2010 06:59
 


Page 340 of 519