Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

விருத்தாசலத்தில் கொசு மருந்து தெளிக்கும் பணி தீவிரம்

Print PDF

தினமலர்             04.10.2013 

விருத்தாசலத்தில் கொசு மருந்து தெளிக்கும் பணி தீவிரம்

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் நகராட்சி ஊழியர்கள், கொசுக்களை ஒழிக்க மருந்து தெளிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

விருத்தாசலத்தில் சமீபத்தில் பெய்த கன மழை காரணமாக நகரின் பல இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால், கொசு உற்பத்தி அதிகரித்து, பொது மக்கள் அவதியடைந்தனர். அதைத் தொடர்ந்து நகராட்சி ஊழியர்கள் மாலை நேரங்களில், நகர்புறத்தில் கொசு மருந்து தெளித்து வருகின்றனர்.

துப்புரவு அலுவலர் சக்திவேல் கூறுகையில், "நகராட்சியில் கொசு உற்பத்தியைக் கட்டுப்படுத்த, தினமும் இரண்டு வார்டுகள் வீதம் 17 வார்டுகளில் கொசு மருந்து தெளிக்கும் பணி நடந்துள்ளது. மேலும், குடிசைப் பகுதிகள், தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் கொசுக்களை உற்பத்தி செய்யும் லார்வா புழுக்களை ஒழிக்க கை தெளிப்பான்கள் மூலம் மருந்து தெளிக்கும் பணி நடந்து வருகிறது' என்றார்.
 

"டெங்கு' இல்லாத பகுதியிலும் "அலர்ட்' மேயர் பேச்சு

Print PDF

தினமலர்             03.10.2013

"டெங்கு' இல்லாத பகுதியிலும் "அலர்ட்' மேயர் பேச்சு

மதுரை:""மதுரையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பில்லாத வார்டுகளின் பணியாளர்களும், "அலர்ட்' ஆக இருக்க வேண்டும்,'' என, மேயர் ராஜன்செல்லப்பா பேசினார்.

மதுரையில் நேற்று நடந்த டெங்கு ஒழிப்பு பணியாளர்களுக்கான கூட்டத்திற்கு, கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். கமிஷனர் நந்தகோபால் முன்னிலை வகித்தார்.

துவக்கி வைத்து மேயர் ராஜன் செல்லப்பா பேசுகையில், ""டெங்கு ஒழிப்பு பணியாளர்கள், சமூக நோக்கோடு பணியாற்ற வேண்டும். "நமது வார்டில் டெங்கு இல்லை என்று அசட்டையாக இல்லாமல், "அலர்ட்' ஆக பணியாற்றினால்,  "டெங்கு' வருவதை தடுக்கலாம்.

உள்ளாட்சியில் சிறந்த பணி, சுகாதாரப் பணி என்பதை உணர வேண்டும்,'' என்றார்.

நகர்நல அலுவலர் டாக்டர் யசோதா, நகர் பொறியாளர் மதுரம், உதவி கமிஷனர்கள் ரெகோபெயாம், தேவதாஸ், சின்னம்மாள் பங்கேற்றனர். 

 

278 நாய், பூனைகளுக்கு ரேபீஸ் தடுப்பூசி

Print PDF

தினகரன்             01.10.2013

278 நாய், பூனைகளுக்கு ரேபீஸ் தடுப்பூசி

கோவை,: கோவை மாவட்டத்தில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட நாய்கள், பூனைகள் இருப்பதாக தெரிகிறது. ரேபீஸ் தினத்தை முன்னிட்டு, மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள ரேபீஸ் அறிகுறி தென்பட்ட நாய், பூனைகளுக்கு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் தடுப்பூசி போடும் பணி நடந்தது.

இதில் 252 நாய்கள், 26 பூனைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. மாவட்ட அளவில், நாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த கால் நடை பராமரிப்பு துறை, உள்ளாட்சி நிர்வாகங்கள் தீவிர முயற்சி எடுத்துள்ளது.

கோவை மாவட்டத்தில் 44 பேரூராட்சிகளில் 8,124 நாய்களுக்கு கருத்தடை ஆபரேஷன் நடக்கிறது. மாநகராட்சியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாய்களுக்கு கருத்தடை ஆப ரேஷன் நடத்தப்பட்டது குறிப்பிடதக்கது.

 


Page 35 of 519