Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

ஓட்டலில் சுகாதாரக் கேடு: அதிகாரிகள் திடீர் சோதனை; அபராதம் விதிப்பு

Print PDF

தினமலர் 19.02.2010

ஓட்டலில் சுகாதாரக் கேடு: அதிகாரிகள் திடீர் சோதனை; அபராதம் விதிப்பு

திருநெல்வேலி:புதிய பஸ்ஸ்டாண்டில் சுகாதாரக் கேடாக இருந்த ஓட்டலில் மாநகராட்சி அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி அபராதம் விதித்தனர்.நெல்லை புதுபஸ்ஸ்டாண்டு உணவகத்தில் உணவு தயாரிக்கும் இடம் மிகவும் சுகாதாரக் கேடாக இருப்பதாக மாநகராட்சி கமிஷனருக்கு புகார் வந்தது. மேலப்பாளையம் உதவிக்கமிஷனர் (பொறுப்பு) பாஸ்கர் தலைமையில் உதவி வருவாய் அலுவலர் சோமசுந்தரம், உணவு ஆய்வாளர் ஏ.ஆர்.சங்கரலிங்கம், சுகாதார ஆய்வாளர் முருகேசன் சம்பந்தப்பட்ட கடையில் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது சுகாதாரக் கேடாக உணவு தயாரிக்கும் இடம் இருந்ததால் அந்த கடையில் உணவு தயாரிப்பதை உடனடியாக நிறுத்த உத்தரவிட்டனர். ரூ.250 அபராதமும் விதிக்கப்பட்டது. அந்த இடத்தில் உணவு தயாரிக்க மாட்டேன் என உறுதிமொழி பெறப்பட்டது.

Last Updated on Friday, 19 February 2010 07:51
 

லப்பைக்குடிக்காடு பாதாள சாக்கடை: கலெக்டர் ஆய்வு

Print PDF

தினமலர் 19.02.2010

லப்பைக்குடிக்காடு பாதாள சாக்கடை: கலெக்டர் ஆய்வு

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் லப்பைக்குடிக்காடு டவுன் பஞ்சாயத்தில் 137.50 லட்சம் ரூபாய் மதிப்பில் அமையவுள்ள பாதாள சாக்கடை திட்டத்திற்கான இடத்தினை கலெக்டர் விஜயகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். லப்பைக்குடிக்காடு டவுன் பஞ்சாயத்தில் ஜமாத்தார்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களுடன் நடைபெற்ற கூட்டத்தில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படுவது தொடர்பாக மாவட்ட கலெக்டர் விஜயகுமார் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ள இடங்களை ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர் விஜயகுமார் அடுத்த வாரத்தில் நடைபெறவுள்ள கூட்டத்தில் இத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டு இத்திட்டம் விரைவில் தொடங்குவதற்கு ஆவண செய்யப்படும் என்று தெரிவித்தார். இக்கூட்டத்தில், ஆர்.டி.., பாலுசாமி, குன்னம் தாசில்தார் தங்கராஜ், டவுன் பஞ்சாயத்து தலைவர் நூர்ஜகான் உட்பட பலர் பங்கேற்றனர்.

Last Updated on Friday, 19 February 2010 07:30
 

ரயில்வே பாலம் கட்டுவதற்கு தோண்டிய குழியில் கழிவு நீர் : நகராட்சி சுகாதாரத்துறை ஆய்வு

Print PDF

தினமலர் 19.02.2010

ரயில்வே பாலம் கட்டுவதற்கு தோண்டிய குழியில் கழிவு நீர் : நகராட்சி சுகாதாரத்துறை ஆய்வு

பொள்ளாச்சி : பொள்ளாச்சியில் ரயில்வே பாலம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட குழியில் தேங்கியிருக்கும் கழிவு நீரால் சுகாதாரம் பாதிக்காமல் இருக்க நகராட்சி சுகாதாரப்பிரிவில் ஆய்வு செய்தனர். கோவை - பொள்ளாச்சி அகல ரயில்பாதை அமைக்கும் பணிக்காக, பொள்ளாச்சியில் வடுகபாளையம் பிரிவு அருகில் குழி தோண்டப்பட்டுள்ளது. பாலம் கட்டுவதற்கு தாமதமாவதால், அந்த குழியில் குடியிருப்பு பகுதிகளின் கழிவு நீர் தேங்கி நிற்கிறது. குடியிருப்புகள் சூழ்ந்த பகுதியில் மெயின் ரோட்டோரத்தில் குழி உள்ளது. இதனால் ஆபத்து உள்ளது என்பதையும், கழிவு நீர் தேங்கி நிற்பதால் கொசு உற்பத்தி குளமாக மாறிவிட்டது பற்றியும் தினமலரில் செய்த வெளிவந்தது. அதையடுத்து, பொள்ளாச்சி நகராட்சி சுகாதாரப்பிரிவு மூலம் கழிவுநீர் தேங்கியுள்ள பகுதியை ஆய்வு செய்ய கமிஷனர் வரதராஜ் உத்தரவிட்டார். சுகாதாரப்பிரிவு ஆய்வாளர்கள் கோவிந்தராஜ், ஜெரால்டு, செந்தில்குமார் நேற்று ஆய்வு செய்தனர். குடியிருப்பு பகுதியில் இருந்து கழிவு நீர் வரும் பாதையில் குழி தோண்டப் பட்டுள்ளது. தேங்கியிருக்கும் கழிவு நீர் வெளியேறுவதற்கு அங்கு ஏற்கனவே கழிவு நீர் வெளியேறும் பாதை உள்ளது. அதன்வழியாக கழிவு நீரை வெளியேற்றுவது பற்றி அதிகாரிகள் ஆலோசனை செய்தனர். சுகாதாரப்பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: கழிவு நீர் வெளியேறும் பாதையை சுத்தம் செய்துள்ளோம். பாலம் கட்டி முடிக்காமல் அங்கு தேங்கியிருக்கும் கழிவு நீரை முழுமையாக வெளியேற்ற முடியாது. அதனால், கழிவு நீர் தேங்கியிருக்கும் குழியில் "ஆயில் பால்' போடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. கழிவு நீரின் மேற்பரப்பு முழுவதும் ஆயில் பரவிவிட்டால் கொசு உற்பத்தி ஆகாது. மேலும், பாலம் கட்டும் பணியை வேகப்படுத்தி, அங்கிருக்கும் குழியை அடைக்க ரயில்வே நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பப்படுகிறது என்றனர.

Last Updated on Friday, 19 February 2010 07:19
 


Page 349 of 519