Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

கொசு ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம்

Print PDF

தினமணி 18.02.2010

கொசு ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம்

சிதம்பரம்
, பிப். 17: சிதம்பரம் நகராட்சி சார்பில் கொசு ஒழிப்பு பணி விழிப்புணர்வுப் பிரசாரம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது. ÷சிதம்பரம் பகுதியில் விஷக்காய்ச்சல் நோய் பரவி வருவதை அடுத்து தமிழக அரசு சுகாதாரத்துறை கொசு ஒழிப்பு பணியை தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளது. இதனையொட்டி சிதம்பரம் ஜவகர் தெருவில் கொசு ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரத்தை நகரமன்ற துணைத் தலைவர் ஆர்.மங்கையர்கரசி தொடங்கி வைத்தார். நகரமன்றத் தலைவர் ஹெச்.பௌஜியாபேகம் தலைமை வகித்தார். ஆணையாளர் பா.ஜான்சன் முன்னிலை வகித்தார்.

÷இந்நிகழ்ச்சியில் நகரமன்ற உறுப்பினர்கள் ஜேம்ஸ்விஜயராகவன், அப்புசந்திரசேகரன், இரா.வெங்கடேசன், மணிகண்டன், வி.என்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி, சேது ஜெயகோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Last Updated on Thursday, 18 February 2010 09:31
 

15 துரித உணவகங்களுக்கு சீல்: சென்னை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை

Print PDF

தினமணி 18.02.2010

15 துரித உணவகங்களுக்கு சீல்: சென்னை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை

சென்னை, பிப். 17: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் சுகாதாரமற்ற முறையில் செயல்பட்டு வந்த 15 துரித உணவகங்கள் மற்றும் டீ கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை சீல் வைத்தனர்.

நடைபாதை வியாபாரிகள் சீரமைப்புக் குழு பரிந்துரைப்படி, புரசைவாக்கம், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் இருந்த நடைபாதை வியாபாரிகளுக்கு அல்லிக்குளம் வளாகத்தில் கடை வைத்துக்கொள்ள இடம் ஒதுக்கப்பட்டது. இதில் சிலர், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் உள் ஒதுக்கீடு செய்திருப்பது தெரியவந்தது.

இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 15 துரித உணவகங்கள் மற்றும் டீ கடைகள் சுகாதாரமற்ற முறையில் செயல்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த கடைகளுக்கு சீல் வைத்த அதிகாரிகள், அங்கிருந்து பிரியாணி, பரோட்டா, மீன், கறி, சாம்பார் உள்ளிட்ட 850 கிலோ உணவுப் பொருள்களை பறிமுதல் செய்தனர்.

Last Updated on Thursday, 18 February 2010 09:23
 

வடவள்ளியில் ரூ.7 லட்சத்தில் பொதுக்கழிப்பிடம்

Print PDF

தினமலர் 18.02.2010

வடவள்ளியில் ரூ.7 லட்சத்தில் பொதுக்கழிப்பிடம்

பேரூர் : வடவள்ளியில் ஏழு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பொதுக்கழிப்பிடம் கட்டப்படுகிறது.

வடவள்ளி பேரூராட்சி, ஆறாவது வார்டில் உள்ள வி.என்.ஆர்., நகர், 13வது வார்டிலுள்ள ஆதிதிராவிடர் காலனியில் பொதுக்கழிப்பிடம் இல்லை. இதனால், கழிப்பிடம் கட்டக்கோரி, தொண்டாமுத்தூர் எம்.எல்.., கந்தசாமியிடம், பேரூராட்சி தலைவர் அமிர்தவல்லி கோரிக்கை விடுத்தார்.

தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் இரண்டு வார்டுகளிலும் தலா 3.5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பொதுக்கழிப்பிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து, 13வது வார்டிலுள்ள ஆதிதிராவிடர் காலனி பகுதியில் கழிப்பிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. எம். எல்.., கந்தசாமி, பேரூராட்சி தலைவர் அமிர்தவல்லி, செயல் அலுவலர் சந்திரன், முன்னாள் பேரூராட்சி தலைவர் சண்முகசுந்தரம், ஒன்றிய செயலாளர் துரைசாமி, வார்டு கவுன்சிலர்கள் ராயப்பன், குமுதம், சின்னதங்கம் உள்பட பலர் பங்கேற்றனர்.

Last Updated on Thursday, 18 February 2010 06:55
 


Page 350 of 519