Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

கொசுக்களை ஒழிக்க கைப்புகை இயந்திரம் பணியாளரிடம் ஒப்படைப்பு

Print PDF

தினமலர் 17.02.2010

கொசுக்களை ஒழிக்க கைப்புகை இயந்திரம் பணியாளரிடம் ஒப்படைப்பு

கோவை : கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், வாகனங்கள் செல்ல முடியாத பகுதிகளில், கொசு ஒழிப்பு பணி மேற்கொள்ள, 20 கைப்புகை இயந்திரங்கள் புதியதாக வாங்கப்பட் டுள்ளது. கோவை மாநகராட்சியில் கொசு ஒழிப்பு பணி மேற்கொள்ள இது வரை லாரிகளும், சிறிய ரக ஆட்டோக்களும், மினிடோர் வேன்களும் பயன்படுத்தப்பட்டது. வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் ஏராளமான குடியிருப்புகள் கோவையில் உள்ளது. அப்பகுதிகளில் கொசு மருந்து இது வரை அடிக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்குள்ளாகி வந்தனர்.இப்பிரச்னைக்கு தீர்வு காண கோவை மாநகராட்சியிலுள்ள நான்கு மண்டலத்திற்கு தலா ஒரு மண்டலத்திற்கு ஐந்து கைப்புகை இயந்திரங்கள் என 20 இயந்திரங்களை வாங்கியுள்ளது."போர்ட்டபிள் தெர்மல் பாகிங்' என்ற பெயருள்ள கொசு மருந்து அடிக்கும் கைப்பம்பு இயந்திரத்தில் 45 நிமிடங்களுக்கு தொடர்ச்சியாக கொசு மருந்து அடிக்கலாம். இயந்திரம் பெட்ரோலில் இயங்ககூடியது.

அதிக இரைச்சல் இல்லாமல் இயங்கும்; பைரித் ரம் மற்றும் டெக்னிக்கல்மாலத்தியான் இணைந்த கொசு மருந்துப்பொருள்; டீசல் ஆகியவற்றை இயந்திரத்தில் ஊற்றி இயக்க வேண்டும். புகையாக மருந்து வெளியேறும். கரும்புகை மற்றும் மருந்துப்புகை இரண்டும் கலந்து கொசுக்களை அழிக்கும். இந்த கொசு மருந்து அடிப்பதால்,டெங்கு, சிக்குன் குனியா போன்ற காய்ச்சல் ஏற்படுவதிலிருந்து தடுக்கலாம். முதற்கட்டமாக 20 இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன. ஒரு இயந்திரம் 49 ஆயிரம் வீதம் 20 இயந்திரங்களுக்கு 9.8 லட்சம் செலவில் வாங்கப்பட்டுள்ளது. "வார்டுக்கு ஒரு இயந்திரம் வீதம் 52 இயந்திரங்கள் வாங்கப்படும்' என, மேயர் வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.

Last Updated on Wednesday, 17 February 2010 05:17
 

ஓட்டல்களில் சுகாதார ஆய்வாளர் ஆய்வு சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிப்பு

Print PDF

தினமலர் 15.02.2010

ஓட்டல்களில் சுகாதார ஆய்வாளர் ஆய்வு சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிப்பு

ராமநாதபுரம் :ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓட்டல்களில் சுகாதாரமான முறையில் உணவுகள் தயாரிக்கப்படுகிறதா? சுகாதாரமான முறையில் சப்ளை செய்யபடுகிறதா? சுத்தமான குடிநீர் வழங்கப்படுகிறதா? என்பதை சுகாதார ஆய்வாளர்கள் சரியான முறையில் ஆய்வு செய்யாததால் நோய்கள் பரவும் வாய்ப்பு உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் சுற்றுலா ஸ்தலமாக உள்ளதால் நாள்தோறும் வெளி மாநில மற்றும் மாவட்ட சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பதால் மாவட்டத்தில் கையேந்திபவன் முதல் ஸ்டார் ஓட்டல்கள் வரை பஞ்சமில்லாமல் அதிகமாகவே காணப்படுகிறது.

மேலும், தற்போது வீட்டில் கணவன் மனைவி இரண்டுபேருமே பெரும்பாலும் வேலைக்கு செல்பவர்களாக மாறிவரும் நிலையில், வேலை பளு காரணமாக அடிக்கடி ஓட்டல்களுக்கு செல்லும் நிலை உள்ளது. இந்நிலையில், ஓட்டல்களில் தரமான உணவு வழங்கப்படுகிறதா என்பதுதான் பலரின் கேள்வியாக உள்ளது. கடந்த சில மாதங்களாகவே புது புதுநோய்கள் பரவிவரும் நிலையில் மருத்துவ துறையினர் வீட்டில் சுகாதாரமாக இருக்க வேண்டும், குடிநீரை சுடவைத்து குடிக்க வேண்டும், பழைய(கெட்டுபோன) உணவுகளை தவிர்க்க வேண்டும் என பல்வேறு அறிவுரைகளை கூறிவருகின்றனர். தண்ணீர் மூலமாகவே பல நோய்கள் வருவதற்கு காரணமாக உள்ளது என கூறப்படும்நிலையில் மாவட்டத்தில் பரவி வரும் காய்ச்சலுக்கு ஓட்டல்களில் சுகாதாரமற்ற முறையில் வழங்கப்படும் குடிநீராகவும் இருக்க வாய்ப்பு உள்ளது.
ஓட்டல்களில் தரவரிசை அடிப்படையில் சப்ளை செய்பவர்களின் உடை முதல் சப்ளை செய்யும் பாத்திரங்கள், டேபிள் சேர்கள், காற்றோட்ட வசதி போன்றவை எப்படி அமைந்திருக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் சுடுதண்ணீர் கேட்டால் தர வேண்டும், கழிப்பறை வசதி இருக்க வேண்டும், சமையல் செய்யும் இடங்கள் மறைவாகவும் சுகாதாரமாகவும் இருக்க வேண்டும்.

ரோட்டில் அடுப்பை வைத்து சமையல் செய்யக்கூடாது, தீராத நோயோ, காய்ச்சல் இருமல் போன்ற நோய் உள்ளவர்களை சப்ளைக்கு வைத்திருக்க கூடாது, சப்ளைக்கு பயன்படுத்தப்படும் பாத்திரங்கள் சுடுதண்ணீரில் கழுவ வேண்டும். சிறுவர்களை வேலைக்கு வைத்திருக்ககூடாது போன்ற பல்வேறு விதிமுறைகள் உள்ளன. ஆனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பல ஓட்டல்களில் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதே கேள்விகுறியாகத்தான் உள்ளது. குறிப்பாக குடிநீர் சுத்தமில்லாத நீரை பல ஓட்டல்களில் வழங்குகின்றனர். அசைவ ஓட்டல்களில் கறிகள் சுகாதாரமான முறையில் வெட்டப்பட்டு சமைக்கப்படுகிறதா என்பதே தெரியவில்லை. சில ஓட்டல்களில் குறைந்த விலைக்கு, நோய் வந்த ஆடு கோழிகளின் கறிகளை பயன்படுத்துகின்றனர். இதனால் உணவுகளை சாப்பிடுவோருக்கு பல்வேறு நோய்கள் வரவாய்ப்பு உள்ளது. ஓட்டல்களின் சுகாதார ஆய்வாளர்கள் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு தரமற்ற நிலையில் செயல்படும் ஓட்டல்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

Last Updated on Monday, 15 February 2010 07:27
 

நட்சத்திர ஹோட்டல் உணவகத்துக்கு சீல்: மாநகராட்சி அதிரடி

Print PDF

தினமணி 14.02.2010

நட்சத்திர ஹோட்டல் உணவகத்துக்கு சீல்: மாநகராட்சி அதிரடி

சென்னை, பிப். 13: கழிவு நீரை நேரடியாக கூவத்தில் விட்ட நட்சத்திர ஹோட்டலின் உணவகத்துக்கு மாநகராட்சி அதிகாரிகள் சனிக்கிழமை சீல் வைத்தனர்.

மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் சனிக்கிழமை மேற்கொண்ட ஆய்வின் போது, கோயம்பேடு பூவிருந்தவல்லி நெடுஞ்சாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் இருந்து வெளியேறும் கழிவு நீர், நேரடியாக கூவத்தில் விடப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. ஹோட்டலில் கழிவு நீர் இணைப்பும் இல்லாததும் தெரியவந்தது.

இதையடுத்து மேயர் மா. சுப்பிரமணியன் உத்தரவுபடி, அதிகாரிகள் அந்த ஹோட்டல் உணவகத்துக்கு சீல் வைத்தனர். மேலும், சுகாதாரச் சீர்கேட்டை விளைவித்ததற்காக தமிழ்நாடு பொதுச் சுகாதார சட்டம் மற்றும் மாநகராட்சி சட்டத்தின்படி நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இந்த ஹோட்டல் ரூ. 16 லட்சம் சொத்துவரி செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளது என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.

 


Page 352 of 519