Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

ஓட்டல், பேக்கரியில் 'ரெய்டு' : சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிரடி

Print PDF

தினமலர் 09.02.2010

ஓட்டல், பேக்கரியில் 'ரெய்டு' : சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிரடி

பொள்ளாச்சி : ஓட்டல், பேக்கரி, மளிகை கடைகளில் நேற்று நகராட்சி சுகாதாரப்பிரிவினர் "ரெய்டு' நடத்தி கலப்பட உணவு பொருட்கள் மாதிரிகளை எடுத்துச் சென்றனர். பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் உள்ள ஓட்டல், பேக்கரி, மளிகைகடைகள் மற்றும் உணவு பொருள் விற்பனை செய்யும் கடைகளில் காலாவதியான பொருட்களும், கலப்படம் செய்யப்பட்ட உணவு பொருட்களும் விற்பனை செய்வதாக நகராட்சிக்கு புகார் வந்துள்ளது.நகராட்சி கமிஷனர் வரதராஜ் உத்தரவின் பேரில், உணவு ஆய்வாளர்கள் சுப்புராஜ், மோகனரங்கன், கோவிந்தராஜ் மற்றும் சுகாதார பணியாளர்கள் "ரெய்டு' நடத்தினர்.பொள்ளாச்சியில் கோவை ரோடு, உடுமலை ரோடு, பாலக்காடு ரோடு, மார்க்கெட் ரோடு, பெருமாள் செட்டி தியில் உள்ள பேக்கரி, டீக்கடைகள், ஓட்டல்கள், மளிகை கடைகள், மொத்த விற்பனையாளர்களிடம் "ரெய்டு' நடத்தினர். உணவு பொருட்களில் கலப்படம் இருக்கிறதா என்பதை பரிசோதனை செய்தனர்.மொத்தம் 22 இடங்களில் ரெய்டு நடத்தி, மசாலாபொடி, மிளகு, டீத்தூள் போன்றவற்றை மாதிரி எடுத்து சீல் வைத்தனர். மார்க்கெட் ரோட்டில் ரெய்டு நடத்திய போது, காலாவதியான 30 கிலோ மசாலா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Last Updated on Tuesday, 09 February 2010 09:05
 

ஆடறுப்பு கட்டணத்தை குறைக்க மாநகராட்சி மறுப்பு: வியாபாரிகள் அதிருப்தி

Print PDF

தினமணி 09.02.2010

ஆடறுப்பு கட்டணத்தை குறைக்க மாநகராட்சி மறுப்பு: வியாபாரிகள் அதிருப்தி

திருநெல்வேலி, பிப். 8: திருநெல்வேலி மாநகராட்சி நடத்திய சமாதான பேச்சுவார்த்தையில், ஆடு அறுப்பு கட்டணத்தை குறைக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டதால், வியாபாரிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

திருநெல்வேலி மாநகராட்சி ஆடறுப்பு கட்டணத்தை ரூ. 20 ஆக உயர்த்தியதைக் கண்டித்து மாநகரில் ஒரு வாரமாக கடையடைப்பு போராட்டத்தில் ஆட்டு இறைச்சி வியாபாரிகள் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், மாநகராட்சி நிர்வாகம் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காணலாம் என வலியுறுத்தியதின் விளைவாக, சனிக்கிழமை போராட்டம் தாற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

மாநகராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை ஆட்டு இறைச்சி வியாபாரிகளிடம், மாநகராட்சி பேச்சுவார்த்தை நடத்தியது.

இப் பேச்சுவார்த்தையில் ஆட்டு இறைச்சி வியாபாரிகள் சங்கத் தலைவர் கே.. முகமதுமைதீன், சி.ஐடி.யூ. நிர்வாகிகள் தியாகராஜன், மீராஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாநகராட்சி சார்பில் மேயர் அ.லெ. சுப்பிரமணியன், துணை மேயர் கா. முத்துராமலிங்கம், மண்டலத் தலைவர்கள் சுப. சீதாராமன், முகம்மதுமைதீன், பூ. சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இப் பேச்சுவார்த்தையின் முடிவில், நகரம், பாளையங்கோட்டையில் உடனடியாக ஆடறுப்பு மனைகள் அமைப்பது, அதுவரை வழக்கம்போல ஆடுகளை கடைகளிலேயே அறுப்பது, மேலப்பாளையம் மண்டலத்தைச் சார்ந்தவர்கள் அங்குள்ள ஆடறுப்பு மனையிலேயே ஆடுகளை அறுப்பது என முடிவுகள் எடுக்கப்பட்டன.

ஆடறுப்பு கட்டணத்தை குறைத்தால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படும் என்பதால், கட்டண குறைப்புக்கு மாநகராட்சி மறுப்புத் தெரிவித்துவிட்டது. இது ஆட்டு இறைச்சி வியாபாரிகளிடம் அதிருப்தியை ஏற்பட்டது. இதனால் செவ்வாய்க்கிழமையும் தொடர்ந்து போராட்டம் நடைபெறுகிறது.

செவ்வாய்க்கிழமை ஆட்டு இறைச்சி வியாபாரிகள் கூட்டம் நடைபெறுகிறது. இக் கூட்டத்தில் போராட்டத்தை தொடர்வதா அல்லது நிறுத்துவதா என்று முடிவு எடுக்கப்படும் என்றார் கே.. முகமதுமைதீன்.

Last Updated on Tuesday, 09 February 2010 07:12
 

துப்புரவுப் பணியாளர்களுக்கு கொசு ஒழிப்பு பயிற்சி

Print PDF

தினமணி 09.02.2010

துப்புரவுப் பணியாளர்களுக்கு கொசு ஒழிப்பு பயிற்சி

புதுச்சேரி, பிப். 8: புதுச்சேரி பகுதிகளில் கொசுவை ஒழிக்க துப்புரவுப் பணியாளர்களுக்கு 1 நாள் பயிற்சி திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

÷இது குறித்து உழவர்கரை நகராட்சி ஆணையர் சி.ராஜமாணிக்கம் கூறியது: புதுச்சேரியில் கொசுக்களை அடியோடு ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் 5-ம் தேதி தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

÷பொது சுகாதாரத்துறை அமைச்சர் எ.நமச்சிவாயம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். அதில் 1 வாரத்தில் கொசு ஒழிப்புக்கான பணிகளை ஆரம்பித்து முடிக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.

÷உழவர்கரை நகராட்சியில் 37 வார்டுகள் உள்ளன. அனைத்து பகுதிகளிலும் நடவடிக்கை மேற்கொள்ள போதுமான ஆட்கள் சுகாதாரத்துறையில் இல்லை.

÷அதனால் நகராட்சி துப்புரவுப் பணியாளர்களுக்கு கொசு ஒழிப்பதற்கான பயிற்சி திங்கள்கிழமை வழங்கப்பட்டது. ஒரு வார்டுக்கு 2 நபர் வீதம் 74 பேருக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.

÷பயிற்சியில் மருந்து கலத்தல்,தெளித்தல், உபகரணத்தில் ஏற்படும் சிறு பழுதுகளை சரி செய்தல் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டன. ஒவ்வொருவருக்கும் மருந்து தெளிப்பான் வழங்கப்பட்டுள்ளது.

÷பயிற்சியில் நகர்மன்றத் தலைவர் ஜெயபால் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் மேற்பார்வையில், பொதுமக்கள் ஒத்துழைப்போடு துப்புரவுப் பணியாளர்கள் கொசு மருந்து தெளிக்க உள்ளனர்.

÷கொசு அதிகம் உள்ள பகுதிகளில் பாகிங் மெஷின் மூலம் புகை அடிக்கப்படும். இது ஒரு தாற்காலிக தீர்வுதான். வீட்டு கழிவறை தொட்டியிலிருந்து 60 சதவீத கொசுக்கள் உருவாகிறது. நீர் தேங்கி நிற்கும் வாய்க்கால்களில் 30 சதவீதமும், குடிநீர் போன்றவற்றில் 10 சதவீதமும் உருவாகிறது. இங்கு கழிவறைத் தொட்டியில் இருந்து நீர் வெளியேறும் குழாய்கள் யூ வடிவில் பொருத்த பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

÷இதனால் குழாய்களில் நீர் நிறைந்து, குழாய்கள் வழியாக கொசு உற்பத்தியாகி வெளியேற வாய்ப்பில்லாமல் போகும். இவ்வாறு பொருத்தும் செலவு ரூ.100தான் ஆகும். ÷இத் தொட்டிகளில் காற்றுப் போக்கிகளில் கொசு வலைகளை கட்டுவதன் மூலமும் கொசுக்கள் உற்பத்தியாகி வெளியேறுவது தடுக்கப்படும். இதை வீட்டில் உள்ள கிழிந்த துணிகளை கொண்டே செய்யலாம்.

÷இதன் மூலம் 60 சதவீதம் கொசுக்களை ஒழிக்க முடியும். வாய்க்கால்கள் தூர் வாரப்படுவதால், நீர் தேங்காமல் செல்லும். இதனால் 30 சதவீதம் கொசுக்கள் உருவாவது தடுக்கப்படும். குடிநீரில் கொசுக்கள் உருவாவதை தடுக்க கம்பூசியா மீன் சுகாதாரத்துறை மூலம் வழங்கப்பட உள்ளது.

÷இவை அனைத்தும் மோதிலால் நேரு நகரில் பரிசோதனை செய்து, அதன் முடிவை பொருத்து, உழவர்கரை நகராட்சி முழுவதும் செயல்படுத்தி கொசுக்கள் அடியோடு ஒழிக்கப்படும் என்றார்

Last Updated on Tuesday, 09 February 2010 07:05
 


Page 359 of 519