Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

போலியோ சொட்டு மருந்து முகாம்

Print PDF

தினகரன் 08.02.2010

போலியோ சொட்டு மருந்து முகாம்

குன்னூர்:குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட 30 வார்டுகளிலும் நேற்று இந்தாண்டுக்கான 2ம் கட்ட இலவச போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. மக்கள் நடமாட்டம் மிகுந்த பஸ் நிலையம், ரயில் நிலையம், சிம்ஸ் பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு இருந்தது.

குன்னூர் நகராட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு நகராட்சி தலைவர் ராமசாமி தலைமை வகித்து முகாமினை துவக்கி வைத்தார். ஆணையர் ராஜன், நகர்மன்ற கவுன்சிலர்கள் ஜெகநாதன், முருக குமார், அனீபா, சாந்தா சந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

நகராட்சிக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. முகாமில் செஞ்சிலுவை சங்கம், லயன்ஸ் கிளப், அரிமா சங்கம், மகளிர் சுய உதவி குழுவினர் இணைந்து பணியாற்றினர்.

கோத்தகிரியில் நடந்த நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் போஜன் தலைமை வகித்து முகாமினை துவக்கி வைத்தார். குன்னூர் தாலுகா பகுதிகளில் நேற்று மட்டும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

Last Updated on Monday, 08 February 2010 11:27
 

தமிழகத்தில் 2வது தவணையாக 70 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

Print PDF

தினகரன் 08.02.2010

தமிழகத்தில் 2வது தவணையாக 70 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

சென்னை: தமிழகத்தில் இளம்பிள்ளைவாத (போலியோ) நோயை தடுக்க, 40 ஆயிரம் சிறப்பு மையங்கள் மூலம் 70 லட்சம் குழந்தைகளுக்கு 2வது தவணையாக நேற்று சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது.

இளம்பிள்ளைவாத (போலியோ) நோயை முற்றிலும் ஒழிக்க நாடு முழுவதும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் 2 தவணைகளாக போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்படுகிறது. இந்த ஆண்டில் முதல் தவணையாக கடந்த மாதம் 10ம் தேதி 70 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது.

2வது தவணை போலியோ சொட்டு மருந்து முகாம் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது. தமிழகம் முழுவதும் 5 வயதுக்கு உட்பட்ட 70 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது. எல்லா முகாம்களிலும் தாய்மார்கள் வரிசையில் நின்று குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்கச் செய்தனர்.

அரசு, தனியார் மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையம், மாநகராட்சி, நகராட்சி மருத்துவமனைகள், சத்துணவு மையம், பள்ளி, பஸ், ரயில், விமான நிலையங்கள், வழிபாட்டு தலங்கள், சுற்றுலா மையம் என மாநிலம் முழுவதும் 40 ஆயிரம் மையங்கள் அமைக்கப்பட்டது. இதற்கான பணியில் 2 லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்கள் ஈடுபட்டனர். போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டதன் அடையாளமாக, குழந்தையின் இடது கை சுண்டு விரலில் அடையாள மை வைக்கப்பட்டது.

Last Updated on Monday, 08 February 2010 11:26
 

போலியோ சொட்டு மருந்து முகாம் 2.3 லட்சம் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது

Print PDF

தினமணி 08.02.2010

போலியோ சொட்டு மருந்து முகாம் 2.3 லட்சம் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது

திருவண்ணாமலை, பிப்.7: திருவணணாமலை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த இரண்டாம் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாமில் மொத்தம் 2.3 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

போலியோ நோயை முற்றிலும் ஒழிக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் சார்பில் கடந்த 14 ஆண்டுகளாக 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி திருவண்ணாமலை சுகாதார மாவட்டத்தில் 1129 முகாம்கள், செய்யாறு சுகாதார மாவட்டத்தில் 693 முகாம்கள் என மொத்தம் 1822 முகாம்கள் அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

திருவணணாமலை அடுத்த வேங்கிக்கால் ஊராட்சியில் சொட்டு மருந்து முகாமை மாவட்ட ஆட்சியர் மு.ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். மாவட்டம் முழுவதும் மொத்தம் 7541 பணியாளர்கள் முகாமில் பங்கேற்றனர்.

சுகாதார இணை இயக்குநர் டாக்டர் ராமலிங்கம், மருத்துவப்பணிகள் துணை இயக்குநர் டாக்டர் சித்ரா, மருத்துவ அலுவலர் டாக்டர் புவனேஸ்வரி, வட்டாட்சியர் சுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து சில நாள்கள் வீடு வீடாகச் சென்று விடுபட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்படும்.

வந்தவாசி

வந்தவாசி பகுதியில் 23,766 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இதற்கென வந்தவாசி வட்டாரத்தில் 101 மையங்களும், தெள்ளார் வட்டாரத்தில் 86 மையங்களும், வந்தவாசி நகராட்சி சார்பில் 15 மையங்களும் அமைக்கப்பட்டிருந்தன.

வந்தவாசி வட்டாரத்தில் 10,676 குழந்தைகளுக்கும், தெள்ளார் வட்டாரத்தில் 8,950 குழந்தைகளுக்கும், வந்தவாசி நகராட்சி பகுதியில் 4,140 குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

வந்தவாசி பஸ்நிலையத்தில் நடைபெற்ற முகாமை வந்தவாசி எம்எல்ஏ ஜெ.கமலக்கண்ணன் தொடங்கி வைத்தார். வந்தவாசி ஒன்றியக்குழுத் தலைவர் எம்.எஸ்.தரணிவேந்தன், வந்தவாசி நகராட்சித் தலைவர் க. சீனுவாசன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஜெ.வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆரணி

ஆரணி நகர், ஆரணி ஒன்றியம், மேற்குஆரணி ஒன்றியம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற போலியோ முகாம்களில் 25,000 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அளிக்கப்பட்டது.

ஆரணி அரசு மருத்துவமனையில் ஆரணி எம்எல்ஏ ஆர்.சிவானந்தம் குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமை தொடங்கி வைத்தார். வட்டாட்சியர் எம்.என்.ராமலிங்கம், முன்னாள் பால்வளத்தலைவர் ஏ.செல்வரசு, தலைமை மருத்துவர் பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Last Updated on Monday, 08 February 2010 10:24
 


Page 360 of 519