Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

திருமங்கலத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கையில் நகராட்சி தீவிரம்

Print PDF
தினகரன்             26.09.2013

திருமங்கலத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கையில் நகராட்சி தீவிரம்


திருமங்கலம், : டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையில் திருமங்கலம் நகராட்சி தீவிரம் காட்டி வருவதாக ஆணையாளர் முகமதுசிராஜூதீன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை:

நகராட்சியில் 27 வார்டுகளிலும் கொசுக்களினால் பரவக்கூடிய டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா மற்றும் நீரினால் பரவக்கூடிய நோய்கள் பராவமல் தடுக்க 21 தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். துப்புரவு ஆய்வாளர் மேற்பார்வையில் துப்புரவுபணியாளர்கள், நகர் சுகாதாரசெவிலியர்களுடன் இணைந்து குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவினர் தினமும் 2500 வீடுகளில் வீதம் வீடுவீடாக சென்று கொசுப்புழு ஒழிப்பு மருந்தான அபேட் தெளித்து வருகின்றனர். இதே போல் நகரில் தொடர் காய்ச்சல், வயிற்றுபோக்கால் பாதிக்கப்பட்டுள்ளோர்களின் விவரங்களையும் இந்த குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.

தொடர் காய்ச்சல் இருந்தால் அந்தநபரினை அடையாளம் கண்ட அரசுமருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பொதுமக்களும் வீடுகளை சுற்றிலும் தண்ணீர் தேங்காமலும், உபயேகமற்ற பொருள்களான தேங்காய் ஓடுகள், டயர்கள், பேப்பர் கப்புகள் ஆட்டு உரல் ஆகியவற்றில் நீர் தேங்காமல் அப்புறப்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
 

சென்னை முழு­வதும் 750 இடங்­களில் ‘நம்ம டாய்லெட்’

Print PDF

தினமலர்              26.09.2013

சென்னை முழு­வதும் 750 இடங்­களில் ‘நம்ம டாய்லெட்’

சென்னை:தாம்­பரம் நக­ராட்­சியில் அறிமுகப்­ப­டுத்­தப்­பட்ட, ‘நம்ம டாய்லெட்’ நவீன கழிப்­பறை திட்­டத்தை சென்னையில், 750 இடங்­களில் அமைக்க மாந­க­ராட்சி முடிவு செய்து உள்ளது. அதே­நேரம், மாநகராட்­சியின் இலவச கழிப்­ப­றை­களில் நடக்கும் வசூல் வேட்டையை தடுக்க இது­வரை எந்த நடவடிக்கையும் எடுக்­கப்­பட­வில்லை.

திடீர் முடிவு

சென்னை மாந­க­ராட்‌சியில் தற்­போது, 900 பொதுக் கழிப்­ப­றைகள் உள்­ளன. இவற்றில் பல கழிப்­பறைகள் பயன்­பாட்­டிற்கு உத­வாத நிலையில் உள்­ளன.

சமீ­பத்தில் அவை சீர­மைக்­கப்­பட்­டன. மாந­க­ராட்சி கூட்­டங்­களில், கழிப்­ப­றைகள் இல­வசம் என, மேயர் அடிக்­கடி அறி­வித்­தாலும், அவை இன்னும் கவுன்­சி­லர்­களின் கட்­டுப்­பாட்டில் வசூலை வாரி குவித்து வரு­கின்­றன. இந்த நிலையில், தாம்­பரம் நக­ராட்­சியில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட, ‘நம்ம டாய்லெட்’ திட்­டத்தை சென்னை முழு­வதும் அறி­மு­கப்­படுத்த மாந­க­ராட்சி முடிவு செய்துள்­ளது.

முதற்­கட்­ட­மாக 750 இடங்­களில் ‘நம்ம டாய்லெட்’ அமைய உள்­ளது. அதற்­காக பொது­மக்கள் அதிகம் கூடும் பகு­திகள், பேருந்து நிலை­யங்கள், மார்க்கெட், ரயில் நிலையம், கழிப்­ப­றைகள் பயன்­ப­டக்­கூ­டிய பகு­திகள் அடை­யாளம் காணப்­பட்டு வரு­கின்­றன.

விரைவில் இந்த திட்டம் செயல்­பாட்­டிற்கு வரும் என்று மாந­க­ராட்சி அதி­காரி ஒருவர் தெரிவித்தார். நம்ம டாய்லெட்’ திட்டத்தை செயல்­ப­டுத்­து­வதில் மாநகராட்சி மூன்று வழி­மு­றை­களை வகுத்துள்ளது. கட்­டுதல், பரா­ம­ரித்தல், ஒப்படைத்தல் ஆகிய மூன்றையும் ஒரே நிறு­வ­னத்­திற்கு வழங்­குதல், அந்த நிறுவனம் விளம்­பர வரு­வாயை ஈட்டிக் கொள்­ளலாம்.

கட்­டுதல், பரா­ம­ரித்தல் ஒரு நிறுவ­னத்­திடம் ஒப்­ப­டைக்­கப்­படும். அதற்கு மாந­க­ராட்சி பணம் வழங்கும். விளம்­பர வரு­வாயை மாந­க­ராட்சி நேர­டி­யாக ஈட்டும்.

கட்­டுதல் ஒரு நிறு­வ­னத்­திற்கும், பரா­ம­ரித்தல் ஒரு நிறு­வ­னத்­திற்கும், விளம்­பர வருவாய் ஈட்­டுதல் ஒரு நிறு­வ­னத்­திற்கும் வழங்­கு­வது இவற்றில் ஒன்றை, தேர்ந்­தெ­டுக்க மாந­க­ராட்சி திட்ட­மிட்­டுள்­ளது.

சென்­னையில், ‘நம்ம டாய்லெட்’ செயல்­பாட்­டிற்கு வந்தால், தனியார் நிறு­வ­னத்தின் பராமரிப்பில் அது இருக்கும். அங்கு கவுன்­சி­லர்கள் ஆட்­களை நிய­மித்து வசூல் செய்ய முடி­யாது என்­பதே, இந்த திட்­டத்தை செயல்­ப­டுத்­து­வதின் முக்­கிய நோக்கம்.

எதிர்பார்ப்பு

அதே நேரம், தற்­போ­துள்ள கழிப்­ப­றை­களில் நடக்கும் வசூலை எப்­படி தடுப்­பது என்­பது குறித்தும் ஆலோ­சனை நடத்­தப்­பட்டு வருகிறது.

அதி­க­மாக வசூ­லாகும் கழிப்­பறைகள், அவற்றில் வசூல் நடத்தும் கவுன்­சி­லர்கள் பட்­டியல் தயா­ரிக்­கப்­பட்டு வரு­கி­றது.

இந்த பட்­டி­யலை முதல்­வரின் கவ­னத்­திற்கு கொண்டு சென்று, அடா­வடி கவுன்­சி­லர்கள் மீது நட­வ­டிக்கை எடுத்தால், கழிப்­பறை வசூலை தடுக்க முடியும் என்றும் மாந­க­ராட்சி உயர் அதி­கா­ரிகள் எதிர்பார்க்­கின்­றனர்.

 

குடியாத்தம் நகராட்சியில் டெங்கு காய்ச்சல் கொசுப்புழு அழிக்கும் பணி

Print PDF

தினத்தந்தி            26.09.2013 

குடியாத்தம் நகராட்சியில் டெங்கு காய்ச்சல் கொசுப்புழு அழிக்கும் பணி

 

 

 

 

மாவட்ட கலெக்டர் பொ.சங்கர், வேலூர் மண்டல நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் குபேந்திரன் ஆகியோரது உத்தரவின்பேரில் குடியாத்தம் நகராட்சி மற்றும் ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் இணைந்து டெங்கு காய்ச்சல் கொசுப்புழு அழிக்கும் பணி நடைபெற்றது. இதனையொட்டி நகராட்சியில் 1, 2, 6 மற்றும் 7 ஆகிய வார்டுகளில் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) உமாமகேஸ்வரி முன்னிலையில் நகரமன்ற தலைவர் எஸ்.அமுதா கொசுப்புழு அழிக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து வீடு தோறும் சென்று கொசுப்புழு அழிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த பணிகளில் நகராட்சி துப்புரவு அலுவலர் ராஜரத்தினம், ஆய்வாளர்கள் சீனிவாசலு, சிவா, களப்பணி உதவியாளர் பிரபுதாஸ், பணி மேற்பார்வையாளர்கள் தயாளன், பென்னி, மூர்த்தி உள்ளிட்ட பணியாளர்கள் ஈடுபட்டனர்.

 


Page 37 of 519