Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

பெரம்பலூரில் 49 ஆயிரம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து

Print PDF

தினமணி 08.02.2010

பெரம்பலூரில் 49 ஆயிரம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து

பெரம்பலூர், பிப். 7: பெரம்பலூர் மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக 49 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்டும் முகாமை மாவட்ட ஆட்சியர் எம். விஜயகுமார் ஞாயிற்றுகிழமை தொடக்கிவைத்தார்.

பெரம்பலூர் புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமைத் தொடக்கி வைத்து, ஆட்சியர் பேசியது:

இந்தியாவில், இளம்பிள்ளை வாத நோயை ஒழிக்க பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து புகட்டப்படுகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் ஜன, 10ம் தேதி நடைபெற்ற முகாமில் 49,742 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து புகட்டப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் என 343 மையங்களில் இம்முகாம் நடைபெறுகிறது. பணியில், சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், தன்னார்வ தொண்டர்கள் உள்ளிட்ட 1,372 பேர் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம், சுமார் 49,000 குழந்தைகள் பயனடைவர். பொதுமக்கள் அனைவரும், தங்களது 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்கெனவே சொட்டு மருந்து புகட்டியிருந்தாலும், மீண்டும் புகட்டலாம் என்றார் ஆட்சியர்.

நலப் பணிகள் இணை இயக்குநர் ஜி. குணகோமதி, துணை இயக்குநர் ஆ. மோகன், உதவி இயக்குநர் ராஜேந்திரன், வட்டார மருத்துவ அலுவலர் ரமேஷ், பூச்சியியல் உதவியாளர் சுப்பிரமணியன், கோட்டாட்சியர் ச. பாலுசாமி, மாவட்ட ரோட்டரி தலைவர் ஜே. அரவிந்தன், ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவர் சி. விவேகானந்தன், வட்டாட்சியர் ஜெயராமன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Last Updated on Monday, 08 February 2010 10:09
 

அறந்தாங்கியில் 3,980 பேருக்கு சொட்டு மருந்து

Print PDF

தினமணி 08.02.2010

அறந்தாங்கியில் 3,980 பேருக்கு சொட்டு மருந்து

அறந்தாங்கி, பிப். 7: அறந்தாங்கி நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை 3,980 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்டப்பட்டது.

அறந்தாங்கி நகராட்சியில் பேருந்து நிலையம், காந்தி பூங்கா, அங்கன்வாடி உள்பட 11 மையங்களில் இந்த முகாம் நடைபெற்றது.

காந்தி பூங்கா மையத்தில் நடைபெற்ற முகாமுக்கு அறந்தாங்கி ரோட்டரி கிளப் தலைவர் வி.விஜயா துரைராஜ் தலைமை வகித்தார்.

அறந்தாங்கி நகர்மன்றத் தலைவர் பழ. மாரியப்பன் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து புகட்டி முகாமை தொடக்கிவைத்தார்.

துப்புரவு அலுவலர் பி. சங்கர சபாபதி, ரோட்டரி கிளப் செயலாளர் கை. வீரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர்மன்ற உறுப்பினர் ச.சுமதி சங்கர், துப்புரவு ஆய்வாளர் எஸ். சேகர், மாவட்ட தாய்சேய் நல அலுவலர் அ. சுந்தரிபாய், ரோட்டரி முன்னாள் தலைவர்கள் நா. சந்திரமோகன், ரெ. அமரகெங்கன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

போலியோ சொட்டு மருந்து பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நகராட்சி அலுவலர்களும், ரோட்டரி கிளப் உறுப்பினர்களும் நகர் முழுவதும் வாகனங்களில் ஊர்வலமாக வந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Last Updated on Monday, 08 February 2010 10:07
 

பட்டுக்கோட்டையில் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து

Print PDF

தினமணி 08.02.2010

பட்டுக்கோட்டையில் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து

பட்டுக்கோட்டை
, பிப். 7: பட்டுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை 6,706 குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து புகட்டப்பட்டது. பள்ளிகள், சத்துணவு மையங்கள், ரயில் மற்றும் பஸ் நிலையங்கள், அரசு மருத்துவமனை என 26 இடங்களில் போலியோ சொட்டு மருந்து புகட்டும் முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன.

நகராட்சி அலுவலகத்தில் ஆணையர் கு.வெ. பாலகிருஷ்ணன் குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்தைப் புகட்டி, முகாமைத் தொடக்கி வைத்தார் ..

நகர்மன்ற முன்னாள் தலைவர் சீனி. இளங்கோ, நகராட்சி சுகாதார அலுவலர் மு.. பாலசுப்பிரமணியன், குளோபல் நர்சிங் கல்லூரித் தாளாளர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், மனோரா ரோட்டரி சங்க நிர்வாகிகள் எஸ்.எம். சின்னக்கண்ணு, . பூவலிங்கம், எஸ்.ஆர். ரவி, . முகமது அலி ஜின்னா, எஸ்.ஜெ. சம்பத், ஆர். அண்ணாதுரை, பி. கண்ணதாசன், .கே. குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை, நகராட்சி மேலாளர் ராமமூர்த்தி, சுகாதார ஆய்வாளர்கள் என். ரவிச்சந்திரன், வை. நடராஜன், பொ. மாரிமுத்து ஆகியோர் செய்திருந்தனர். சொட்டு மருந்து புகட்டும் பணியில் பட்டுக்கோட்டை குளோபல் நர்சிங் கல்லூரி மாணவிகள் ஈடுபட்டனர்.

Last Updated on Monday, 08 February 2010 10:05
 


Page 363 of 519