Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

8600 குழந்தைகளுக்கு 2-ம் கட்டமாக போலியோ சொட்டு மருந்து வழங்கல்

Print PDF

தினமணி 08.02.2010

8600 குழந்தைகளுக்கு 2-ம் கட்டமாக போலியோ சொட்டு மருந்து வழங்கல்

போடி, பிப். 7: போடி நகராட்சியில் 2-ம் கட்டமாக 8,600 குழந்தைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

போடி நகராட்சியில் 33 வார்டுகளில், கடந்த ஜனவரி 10-ம் தேதி முதல் கட்டமாக போலியோ சொட்டுமருந்து 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. இதில் 8 ஆயிரத்து 804 குழந்தைகள் பயன் பெற்றனர்.

2-ம் கட்டமாக ஞாயிற்றுக்கிழமை போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. புதூர், போஜன் பார்க், கீழத்தெரு, சர்ச் தெரு, 10-வது வார்டு நகராட்சிப் பள்ளி, கே.எம்.எஸ்.லே-அவுட், வெங்கிட்டம்மாள் பார்க், குப்பழகிரி தோட்டம், நகராட்சி காலனி, அண்ணா துவக்கப் பள்ளி, பெரியாண்டவர் ஹைரோடு, நகராட்சி குடியிருப்பு, போடி மெட்டுப் பாதை, செüடம்மன் கோயில் தெரு, மோகன் நாராயணசாமி லே-அவுட், டி.வி.கே.கே. நகர், நகராட்சி தங்கும் விடுதி ஆகிய இடங்களில் உள்ள சத்துணவு மையங்களிலும், சுப்புராஜ் நகர் காமராஜ் வித்யாலயம், சேது மறவர் திருமண மண்டபம், அரசு மருத்துவமனை, நகராட்சி மகப்பேறு மருத்துவமனை ஆகிய இடங்களிலும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

போடி பஸ் நிலையத்தில், தர்மத்துப்பட்டி ஏ.எச்.எம். டிரஸ்டுடன் இணைந்து அமைக்கப்பட்டிருந்த சிறப்பு மையத்தில், ஞாயிற்றுக்கிழமை போடி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். லட்சுமணன் சொட்டுமருந்து வழங்கும் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், தேனி மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் டாக்டர் செல்லத்துரை, நகராட்சி ஆணையாளர் கே. சரவணக்குமார், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் இளமுருகன் ஆகியோர் பங்கேற்றனர். போடி பகுதியில் 23 மையங்களில் 92 பணியாளர்கள் சொட்டு மருந்து வழங்கும் பணியில் ஈடுபட்டனர்.

சொட்டுமருந்து வழங்குவதற்கான ஏற்பாடுகளை நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் பழனிச்சாமி, வர்கீஸ், சென்றாயன், .எச்.எம். டிரஸ்ட் சமுதாய சுகாதாரப் பிரிவைச் சேர்ந்த கணேசன், பிரேமா, மஞ்சு, அம்சவள்ளி, கோபிராஜன், ரவி ஆகியோர் செய்தனர்.

இதுகுறித்து மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்கள் கூறுகையிலó மாவட்டத்தில் கிராம பகுதியில் 660 மையங்களும், நகர்ப் பகுதியில் 126 மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இதில் மொத்தம் 1 லட்சத்து 12 ஆயிரத்து 340 குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

கடந்த ஜனவரி 10-ம் தேதி 1 லட்சத்து 13 ஆயிரத்து 249 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இந்தப் பணியில் 3 ஆயிரத்து 490 பேர் ஈடுபட்டுள்ளனர். மேலும் 17 நடமாடும் சொட்டுமருந்து மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. மலைப் பகுதிகள், போக்குவரத்து இல்லாத பகுதிகளிலும் சொட்டு மருந்து வழங்க 62 பேர் நியமிக்கப்பட்டிருந்தனர் என்றார்.

Last Updated on Monday, 08 February 2010 09:57
 

2 லட்சம் குழந்தைகளுக்கு இரண்டாம் கட்ட போலியோ சொட்டு மருந்து வழங்கல்

Print PDF

தினமணி 08.02.2010

2 லட்சம் குழந்தைகளுக்கு இரண்டாம் கட்ட போலியோ சொட்டு மருந்து வழங்கல்

திண்டுக்கல், பிப். 7: திண்டுக்கல் மாவட்டத்தில், இரண்டாம் கட்டமாக 2.1 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே அமைக்கப்பட்டிருந்த போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமை, ஞாயிற்றுக்கிழமை மாவட்ட ஆட்சியர் மா. வள்ளலார் தொடங்கி வைத்தார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் 1,232 மையங்கள் மூலம் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 5,343 பணியாளர்கள் சொட்டு மருந்து வழங்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டச் சத்து மையங்கள், பள்ளிக்கூடங்கள், ஊராட்சி அலுவலகங்கள், ரயில் மற்றும் பஸ் நிலையங்கள், 25 நடமாடும் சொட்டு மருத்துவ முகாம்கள், 18 போக்குவரத்து முகாம்களிலும் சொட்டு மருந்துகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில், நகராட்சி ஆணையர் அர. லட்சுமி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் ஜெகதீஸ்குமார், கோட்டாட்சியர் ராமசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.

Last Updated on Monday, 08 February 2010 09:52
 

1192 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்:ஆட்சியர்

Print PDF

தினமணி 08.02.2010

1192 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்:ஆட்சியர்

சிவகங்கை,பிப்,7: சிவகங்கை மாவட்டத்தில் 1192 இடங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியர் மகேசன் காசிராஜன் தெரிவித்தார்.

7-2-2010 ஞாயிற்றுக்கிழமை போலியோ நோயை ஒழிக்கும் விதமாக தமிழகத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் முகாம் அமைத்து அரசு வழங்கி வருகிறது.

சிவகங்கையில் மாவட்ட ஆட்சியர் குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்து துவக்கி வைத்துப் பேசியது: சிவகங்கை மாவட்டத்தில் 1,37,274 குழந்தைகளுக்கு 10-1-2010 அன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளன.

அதுபோல் இரண்டாம் கட்டமாக குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து கொடுக்கும் முகாம் நடைபெற்று வருகிறது. இதற்காக அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், நகர் நல மையங்கள், பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள்ன 1192 இடங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் 6029 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போலியோ சொட்டு மருந்து குறித்த விழிப்புணர்வைப்ó பெற்றோர்கள் நன்கு உணர்ந்து தவறாமல் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க வேண்டும் என ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.

முகாமில் சுகாதாரத் துறை இணை இயக்குநர் ரகுபதி, மாவட்ட பூச்சியயில் நிபுணர் ரமேஸ், மாவட்ட நலக்கல்வியாளர் ராஜேந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Last Updated on Monday, 08 February 2010 09:42
 


Page 365 of 519