Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

ஈரோடு மாநகராட்சியில் 7-ல் போலியோ சொட்டு மருந்து முகாம்

Print PDF

தினமணி 05.02.2010

ஈரோடு மாநகராட்சியில் 7-ல் போலியோ சொட்டு மருந்து முகாம்

ஈரோடு, பிப்.4: ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் வரும் 7-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெற உள்ளன.

மாநகராட்சி மகப்பேறு நிலையங்கள், நகர்நல மையங்கள், அரசு மருத்துவமனைகள், சத்துணவு, ஊட்டச்சத்து மையங்கள், சொட்டு மருந்து சிறப்பு முகாம்கள், பஸ், ரயில் நிலையங்களில் வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 7 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் முகாம்களில், 5 வயதுக்கு உள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டுமருந்து இலவசமாக வழங்கப்படும்.

ஏற்கெனவே குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அளிக்கப்பட்டிருந்தாலும், இந்த முகாமிலும் சொட்டு மருந்து வழங்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் ஆர்.சுடலைக்கண்ணன் தெரிவித்துள்ளார்.

 

மாநகர சுகாதார மேம்பாட்டு பணிகள் ம.பி., குழு பார்வை

Print PDF

தினமலர் 05.02.2010

மாநகர சுகாதார மேம்பாட்டு பணிகள் ம.பி., குழு பார்வை

திருச்சி: திருச்சி மாநகராட்சி பகுதியில் நடந்து வரும் சுகாதார மேம்பாட்டுப் பணிகளை மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகப் பிரதிநிதிகளுடன், மத்திய பிரதேச மாநில உயர்மட்டக் குழு நேரில் பார்வையிட்டனர். திருச்சி மாநகராட்சியில் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு மற்றும் மேம்பாட்டுக்காக மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் பற்றி மத்திய பிரதேச மாநில உயர்மட்டக் குழுவினருக்கு கம்ப்யூட்டர் விளக்கப்படம் மூலம் மேயர் சுஜாதா, கமிஷனர் பால்சாமி எடுத்துரைத்தனர்.

மாநகராட்சியில் மேற்கொள்ளப்படும் திடக்கழிவு மேலாண்மை, நவீன இறைச்சிக்கூடம், நவீன எரிவாயு தகனமேடை, பாதாள சாக்கடை திட்டம், சாலை மற்றும் வடிகால் மேம்பாட்டுப் பணிகள், குடிநீர் அபிவிருத்தி திட்டங்கள், வரி மற்றும் வரியில்லா வசூல் பணி குறித்து கம்ப்யூட்டர் மூலம் எடுத்துரைக்கப்பட்டது. விறகுப்பேட்டையில் நடக்கும் ஒருங்கிணைந்த சுகாதார வளாக பராமரிப்பு, செயல்பாடுகள் குறித்து உயர்மட்டக் குழுவினர் நேரில் அழைத்து செல்லப்பட்டு காண்பிக்கப்பட்டனர். நகரப் பொறியாளர் ராஜாமுகமது, நிர்வாகப் பொறியாளர்கள் சந்திரன், அருணாச்சலம், மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சக துணை இயக்குனர் தீனதயாளன், திட்ட அலுவலர் கமல்சந்திரநாகர் உட்பட பலர் பங்கேற்றனர

Last Updated on Friday, 05 February 2010 06:55
 

வேலூர் மாவட்டத்தில் கொசு ஒழிக்க நடவடிக்கை: கலெக்டர்

Print PDF

தினமலர் 05.02.2010

வேலூர் மாவட்டத்தில் கொசு ஒழிக்க நடவடிக்கை: கலெக்டர்

வேலூர்: "வேலூர் மாடட்டத்தில் நோய் பரப்பும் கொசுக்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என கலெக்டர் ராஜேந்திரன் தெரிவித்தார். அவர் வெளியிட்ட அறிக்கை: வேலூர் மாவட்டத்தில் பொது சுகாதாரத்துறை சார்பில் தீவிர கொசு ஒழிப்பு பணி கொசு இல்லாத வட்டாரம் என்ற திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது. முதல் கட்டமாக திமிரி வட்டாரத்தில் சோதனை முறையில் மூன்று மாதங்களுக்கு கொசு ஒழிப்பு பணி செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 28 மாவட்டங்களில் 28 வட்டாரங்களில் இந்த பணி சோதனை முறையில் அமுல்படுத்தப்படும். இதன் முடிவுகளைப் பொறுத்து அனைத்து வட்டார அளவில் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக பருவ நிலை மாறுதல்களால் நோய் பரப்பும் கொசு உற்பத்தியாகி, டெங்கு, சிக்கன் குனியா, மூளைக் காய்ச்சல் போன்றவை அதிகமாக காணப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் 2006ம் ஆண்டு முதலில் சிக்கன் குனியா நோய் பாதிப்பு ஏற்பட்டு 10,000 மேற்பட்டோர் பாதிப்படைந்தனர். மாவட்ட எல்லையோர கிராமங்களில் போர்க்கால தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக நோயின் தாக்கம் பெருமளவில் குறைக்கப்பட்டது. தற்போது டெங்கு, சிக்கன் குனியா நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பத்திரிக்கை துறை, ஊடகங்கள் மற்றும் மக்கள் பிரநிதிகளுக்கு விளக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கிராமப் பகதிகளில் கடந்த அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் வரை வட்டாரம் தோறும் 10 தற்காலிக பணியாளர்கள் வீதம் 20 வட்டாரங்களில் 200க்கும் மேற்பட்டோர் கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு கொசு உற்பத்தியை தடுத்துள்ளனர். அவர்களுக்கு நடப்பு ஆண்டிலும் பணி நிடிப்பு செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஒரு லட்சத்துக்கு குறைவான மக்கள் தொகை உள்ள நகராட்சி பகுதிகளில் தற்போது தீவிர கொசு ஒழிப்பு பணி செய்ய உள்ளார்கள். சுகாதாரத்துறை செயல்படுத்தும் நகர் பகுதிகளில் ஆயிரம் பேருக்கு ஒருவர் என்ற வீதம் தற்காலிக பணியாளர்கள் மூன்று மாதத்துக்கு நியமிக்கப்பட உள்ளனர்.

 


Page 369 of 519