Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு

Print PDF

தினமலர்             24.09.2013

டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு

ஸ்ரீமுஷ்ணம்:ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சி சார்பில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

பேரூராட்சி சேர்மன் ஆதிலட்சுமி கலியமூர்த்தி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பேரூராட்சி செயல் அலுவலர் அருள்குமார், சீதாலட்சுமி ஆதிவராகன் துவக்கப் பள்ளி நிர்வாக குழு உறுப்பினர் சுரேஷ் முன்னிலை வகித்தனர்.

பள்ளி மாணவ, மாணவிகள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக டெங்கு காய்ச்சல் நோய் பரவும் விதம், தடுக்கும் செயல்முறைகள் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.

இதில் கல்விக்குழுத் தலைவர் கலியமூர்த்தி, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி தலைவர் பூமாலை கேசவன், பேரூராட்சி துணைத் தலைவர் சின்னப்பன், லயன்ஸ் கிளப் தலைவர் ஜெயவேல், பொருளாளர் ஜவகர் நாராயணசாமி, மாவட்ட தலைவர் வேல்முருகன் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

 

பகுதிநேர துப்­பு­ரவு பணிக்கு மாந­க­ராட்சி அழைப்பு ஒரு மணி­ நே­ரத்­திற்கு ரூ.40 ஊதியம்

Print PDF

தினமலர்          23.09.2013

பகுதிநேர துப்­பு­ரவு பணிக்கு மாந­க­ராட்சி அழைப்பு ஒரு மணி­ நே­ரத்­திற்கு ரூ.40 ஊதியம்

சென்னை:ஒரு மணி­நேர துப்­பு­ரவு பணிக்கு 40 ரூபாய் சம்­பளம் வழங்க மாந­க­ராட்சி முடிவு செய்­துள்­ளது. இந்த பகுதி நேர துப்­பு­ரவு பணிக்கு 40 வயது வரை உள்­ள­வர்கள் விண்­ணப்­பிக்­கலாம் என்று மாந­க­ராட்சி அறி­வித்­துள்­ளது.

சென்னை மாந­க­ராட்சி, துப்­பு­ரவு பணியில் சில மாற்­றங்­களை செய்து, புதிய நடை­மு­றை­களை கையாள உள்­ளது.

அதன்­படி துப்­பு­ரவு பணிக்கு விருப்பம் உள்­ள­வர்­களை பகுதி நேர அடிப்­ப­டையில் பயன்­ப­டுத்தி கொள்ள சென்னை மாந­க­ராட்சி முடிவு செய்­து உள்­ளது.

சுவர்ண ஜெயந்தி நகர்ப்­புற வேலை வாய்ப்பு திட்­டத்தில் பதிவு செய்தோர், பதிவு செய்­யாதோர், அண்டை வீட்டு குழுக்கள், சென்னை மாந­க­ராட்­சி­யுடன் இணைக்­கப்­பட்ட பகு­தி­களின் மகளிர் சுய உதவிக் குழுக்கள், இந்த துப்­பு­ரவு பணிக்கு விண்­ணப்­பிக்­கலாம்.

பகுதி நேர பணி, ஒரு மணி­நேரம் முதல் இரண்டு மணி­நேரம் வரை இருக்கும். ஒரு மணி நேரத்­திற்கு 40 ரூபாய் ஊதியம் வழங்­கப்­படும். பணி செய்த நேரம் கணக்­கி­டப்­பட்டு மாத­மாக சம்­பளம் வழங்­கப்­படும்.

பணிக்கு 18 வயது முதல் 40 வயது வரை ஆண், பெண்கள் விண்­ணப்­பிக்­கலாம். பெண்­க­ளுக்கு முன்­னு­ரிமை. விருப்பம் உள்ளோர் தங்­க­ளது புகைப்­ப­டத்­துடன் பெயர், முக­வரி அடங்­கிய விவ­ரங்­களை, திட்ட அலு­வலர், சுவர்ண ஜெயந்தி நகர்ப்­புற வேலை வாய்ப்பு திட்ட அலு­வ­லகம், எண், 2, டாக்டர் பெசன்ட் சாலை, திரு­வல்­லிக்­கேணி, சென்னை 600005 என்ற முக­வ­ரிக்கு விண்­ணப்­பிக்­கலாம்.

 

மதுரையில் "டெங்கு' கொசு "பேக்டரி'களுக்கு சீல் விகாசா பள்ளி அருகே மாநகராட்சி நடவடிக்கை

Print PDF

தினமலர்          23.09.2013

மதுரையில் "டெங்கு' கொசு "பேக்டரி'களுக்கு சீல் விகாசா பள்ளி அருகே மாநகராட்சி நடவடிக்கை

மதுரை : மதுரையில், காய்ச்சலில் பலியான மாணவி படித்த, விகாசா பள்ளியின் அருகே கட்டப்பட்ட ஆறு கட்டடங்கள் மூலம், "டெங்கு' பரப்பும் "ஏடிஸ்' கொசுக்கள் உற்பத்தியாவதாகக் கூறி, மாநகராட்சி அதிகாரிகள் கட்டடங்களுக்கு "சீல்' வைத்தனர்.

இப்பள்ளியின் மோசமான சுகாதார சூழலே, மாணவி பலிக்கு காரணம் என, சக மாணவர்களின் பெற்றோர் பிரச்னை எழுப்பினர். "பள்ளியில் உள்ள குறைபாடுகளை, செப்., 23க்குள் சரிசெய்யாவிட்டால், சுகாதாரச் சான்று ரத்துசெய்யப்படும்' என, மாநகராட்சி எச்சரித்துள்ளது.

மாநகராட்சியின் கண்காணிப்பு வளையத்தில், விகாசா பள்ளியும் அதைச் சுற்றியுள்ள இடங்களும் கொண்டுவரப்பட்டு உள்ளன. பள்ளி அருகே புதிய குடியிருப்புகள் கட்டப்படுகின்றன. நேற்று அங்கு வந்த, கமிஷனர் நந்தகோபால் தலைமையிலான மாநகராட்சி அதிகாரிகள், கட்டடங்களில் சோதனை மேற்கொண்டனர். வரைபட அனுமதிக்கு மாறாகவும், கூடுதலாகவும், விதிமீறியும் நடந்த கட்டுமானப்பணியில், பாதாள அறைகள் கட்டப்பட்டதை கண்டறிந்தனர்.

அவற்றில் தேங்கும் நீரில், "டெங்கு' பரப்பும் "ஏடிஸ்' கொசுக்கள் உற்பத்தியானதும் தெரிந்தது. விகாசா பள்ளி குழந்தைகளுக்கு, அவற்றால் பாதிப்பு ஏற்படும் என, உறுதியானது. தனிக்கொடி, பாண்டிசெல்வம், பிரகாஷ், கண்ணன், ராமச்சந்திரன், லட்சுமணன் ஆகியோருக்கு சொந்தமான, ஆறு கட்டடங்களை, அதிகாரிகள் "சீல்' வைத்தனர். அவை தவிர, மேலும் 10 கட்டடங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

கமிஷனர் நந்தகோபால் கூறும்போது, ""இக்கட்டடங்களில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இது அருகில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மேல்தளம் எழுப்பிய பின், ரகசியமாக பாதாள அறைகள் கட்டப்பட்டுள்ளன. ஆறு கட்டடங்களுக்கு, முதற்கட்டமாக "சீல்' வைத்துள்ளோம்,'' என்றார்.

உதவி கமிஷனர் ரகோபெயாம், உதவி நகரமைப்பு அலுவலர்கள் முத்துக்குமார், நாராயணன், உதவிப்பொறியாளர் மஞ்சுளா உடன் சென்றனர்.

 


Page 38 of 519