Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

ஆட்டிறைச்சி கடைகள் நெல்லையில் அடைப்பு

Print PDF

தினமலர் 02.02.2010

ஆட்டிறைச்சி கடைகள் நெல்லையில் அடைப்பு

திருநெல்வேலி: திடீர் கட்டண உயர்வால் நெல்லையில் ஆட்டிறைச்சி கடைக்காரர்கள் நேற்று கடையடைப்பு நடத்தினர்.

திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையத்தில் ஆடு அறுக்கும் மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுவரையிலும் ஆட்டிறைச்சி கடைக்காரர்கள் ஒரு ஆடு அறுக்க மாநகராட்சிக்கு ஐந்து ரூபாயை கட்டணமாக செலுத்திவந்தனர். தற்போது ஆட்டிறைச்சி மையத்தில்தான் ஆடுகளை அறுக்க வேண்டும் எனவும் இதற்காக ஒரு ஆட்டிற்கு 20 ரூபாய் கட்டணம் செலுத்தவேண்டும் எனவும் அதனை தனியார் ஒருவருக்கு குத்தகைக்கு கொடுத்திருப்பதாகவும் மாநகராட்சி தெரிவித்தது. இதற்கு கடைக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒவ்வொருமுறையும் ஆடுகளை அறுப்பதற்காக குறிப்பிட்ட மையத்திற்கு செல்ல முடியாது எனவும் கட்டணமும் அதிகம் என கூறி நேற்று கடைகளை அடைத்து போராட்டம் நடத்தினர். இதனால் பெரும்பான்மையான ஆட்டிறைச்சி கடைகள் மூடிக்கிடந்தன.

Last Updated on Tuesday, 02 February 2010 06:32
 

சுகாதாரப் பணியாளர்களுக்கு கொசு ஒழிப்பு பயிற்சி

Print PDF
தினமணி 01.02.2010

சுகாதாரப் பணியாளர்களுக்கு கொசு ஒழிப்பு பயிற்சி

கும்மிடிப்பூண்டி, ஜன. 31: கும்மிடிப்பூண்டி வட்டாரத்தில் நோய்களை உண்டாக்கும் கொசுக்களை ஒழிப்பது குறித்து சுகாதாரப் பணியாளர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

÷கும்மிடிப்பூண்டியை அடுத்த மாதர்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்களுக்கு டெங்கு, பைலேரியா, மலேரியா போன்ற நோய்களை உண்டாக்கும் கொசு புழுக்களை ஒழிப்பது குறித்த இப் பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. இதற்கு வட்டார மருத்துவர் வனிதா மலர் தலைமை வகித்தார். மருத்துவர் சுரேஷ் முன்னிலை வகித்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட 17 பணியாளர்களுக்கு நோய்களை உண்டாக்கும் கொசுக்களை உற்பத்தி செய்யும் புழுக்களை ஒழிப்பது பற்றி சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. மழை காலத்தில் வீடுகளின் அருகே கழிவுநீர் கால்வாய்களில் உடைந்த பிளாஸ்டிக் பொருள்கள், கொட்டாங்குச்சி மற்றும் இதர பொருள்களில் மழை நீர் தேங்கி நின்றால், அதில் நோய்களை உண்டாக்கும் கொசுக்களை உற்பத்தி செய்யும் புழுக்கள் வளரும். எனவே, மேற்கண்ட பொருள்களில் தேங்கியுள்ள சாக்கடை நீரை அப்புறப்படுத்துதல், கால்வாய்களில் கொசு ஒழிப்பு மருந்து தெளித்தல் போன்றவை குறித்து இந்த பயிற்சியில் விளக்கப்பட்டது.

÷இதைத் தொடர்ந்து, சுகாதாரப் பணியாளர்கள் பாதிரிவேடு பகுதியில் நோய்களை உண்டாக்கும் கொசுக்களை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சர்தார்கான் செய்திருந்தார்.

Last Updated on Monday, 01 February 2010 06:56
 

சாலாமேடு, வழுதரெட்டியிலும் பாதாள சாக்கடைத் திட்டம் : சேர்மன் ஜனகராஜ் தகவல்

Print PDF

தினமலர் 01.02.2010

சாலாமேடு, வழுதரெட்டியிலும் பாதாள சாக்கடைத் திட்டம் : சேர்மன் ஜனகராஜ் தகவல்

விழுப்புரம் : விழுப்புரம் நகர் மன்றக் கூட்டம் சேர்மன் ஜனகராஜ் தலைமையில் நடந் தது. மேலாளர் லட்சுமிநாராயணன் முன்னிலை வகித்தார். கவுன்சிலர்கள் பலர் கலந்து கொண்டனர். விழுப்புரத்தில் திடக்கழிவு மேலாண்மை திட் டத்தில் 36 வார்டிலும் மகளிர் சுய குழுவைச் சேர்ந்த 72 பேர் மூலம் குப்பைகள் அகற்றப்படுகிறது. இதனை வரும் மார்ச் மாதம் வரை நீடிக்கவும், இதேபோல் கோலியனூரான் வாய்க் கால் தூய்மை செய்து வரும் 10 பேர் தொடர்ந்து மார்ச் வரை பணியாற்ற தீர்மானம் முன் வைக்கப் பட்டது.

கோலியனூரான் வாய்க்கால் மாதம் ஒருமுறை கூட சுத்தப்படுத்துவதில்லை என கவுன்சிலர் அலாவுதீன் புகார் கூறினார். தினசரி சீரமைக்கப் பட உள்ளதாக சேர்மன் பதிலளித்தார். நகராட்சி பூங்கா அருகேயும், அய்யனார்குளம் பகுதியிலும் திறந்தவெளியில் சிறு நீர், மலம் கழித்தல் தொடர்கிறது. தினமலரில் செய்தி வந் துள்ளது. அங்கு கழிப்பிட வசதி செய்ய வேண்டும் என ரகுபதி வலியுறுத்தினார்.

பாதாள சாக்கடை பள்ளம் எடுத்ததில் ரகீம் லேஅவுட், மாந்தோப்பு வீதி, கே.கே.ராடு, ரங்கநாத ரோடு பகுதிகளில் பெரிய பள்ளங்களை தற் காலிகமாக மூட வேண் டும் என பஞ்சநாதன் கோரினார். கீழ்பெரும்பாக்கம் சுடுகாடு பகுதியில் கழிவு நீர் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு நிலவுவதை தடுக்க வேண்டும் என மகாலட்சுமி வலியுறுத்தினார். ரயில்வே மேம்பாலம் அருகே வேகத்தடை அமைக்க வேண்டும் என வினோத் கூறினார்.

நகராட்சி பிரசவ மருத்துவமனையில் தரையில் குழந்தை கிடத்தப்படுகிறது. அங்கு டேபிள் வழங்க வேண்டும். கொசுத் தொல்லையை போக்க வீடு தோறும் செப் டிக் டேங்க் வலைகள் வழங்க வேண்டும் என துணை சேர்மன் பார்த்திபன் கூறினார். குடிநீர் திட்டம் கிடப் பில் கிடக்கிறது என கவுன் சிலர் கணேஷ் சக்திவேல் புகார் கூறினார். நகராட்சி முழுவதும் நாய்கள் தொல்லை அதிகரித்துள் ளது என கவுன்சிலர்கள் புகார் கூறினர்.

சேர்மன் ஜனகராஜ் பதிலளித்து பேசியதாவது: ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு நகராட்சி பகுதியில் கழிப்பிட வசதிகள் செய்து தரப்படும். அனைத்து பகுதியிலும் சி.எப்.எல்., பல்புகள் பொறுத்தப்படும். வீடுதோறும் நகராட்சி சார்பில் கொசு வலை வழங்கப்படும். மற்ற நகராட்சிகளை விட சிறப்பாக நடக்கிறது. ஒன்றிரண்டு குறைகள் இருப்பதும் அடுத்த கூட் டத்திற்குள் சரி செய்யப்படும். குடிநீர் திட்டத்தை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். சாலாமேடு, வழுதரெட்டியிலும் ஊராட்சி சார்பில் பாதாள சாக்கடை திட்டம் துவக்கப்பட்டு இணைக் கப்பட உள்ளது என்றார்.

Last Updated on Monday, 01 February 2010 06:37
 


Page 375 of 519