Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

மாநகராட்சி ஊழியர்கள் 2 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி மேயர் தொடங்கி வைத்தார்

Print PDF

மாலை மலர் 29.01.2010

மாநகராட்சி ஊழியர்கள் 2 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி மேயர் தொடங்கி வைத்தார்

சென்னை, ஜன. 29-

சைதாப்பேட்டை சின்னமலை மாநகராட்சி பள்ளியில் இன்று மாநகராட்சி ஊழியர்களுக்கு தடுப்பூசிகள் போடும் நிகழ்ச்சி அரிமா சங்கமும் சென்னை மாநகராட்சியும் இணைந்து நடத்தியது.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஊழியர்கள் தடுப்பூசிகள் போடும் திட்டத்தை மேயர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். அப் போது அவர் பேசுகையில், சென்னை மாநகராட்சியும், அரிமா சங்கமும் இணைந்து துப்புரவு பணியாளர்கள், இறைச்சி வெட்டுபவர்கள், மலேரியா தொழிலாளிகள் என மண்டலம்-9ல் பணியாற்றும் 2 ஆயிரம் மாநகராட்சி ஊழியர்கள் பயன்பெறும் வகையில் தடுப்பூசிகள் போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்ற ஆண்டில் அயனாவரம் மண்டலம்-4 மற்றும் திருவல்லிக்கேணி மண்டலம்-6ல் ரூபாய் 5 லட்சம் செலவில் அரிமா சங்கம் சார்பில் 2500 மாநகராட்சி ஊழியர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

தற்பொது தலா ரூபாய் 900/- வீதம் மொத்தம் ரூபாய் 4 லட்சம் செலவில் மண்டலம்-9ல் பணியாற்றும் ஊழியர்களுக்கு அரிமா சங்கம் சார்பில் தடுப்பூசிகள் போடப்படுகிறது.

இந்த தடுப்பூசிகள் ஒவ்வொரு மாதம் என மூன்று மாதங்கள் 5 வருடத்திற்கு ஒருமுறை போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி போடுவதினால் எந்தவித பாதிப்பும் இல்லை. சென்ற ஆண்டு புரசைவாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நானும் தடுப்பூசி போட்டுக்கொண்டேன். இதனால் எவ்வித பாதிப்பும் எனக்கு இல்லை. பி வகை மஞ்சள் காமாலை நோய் மிகவும் மோசமான நோய். ஈரலை பாதித்து, பிற்கா லத்தில் புற்றுநோய் வர வாய்ப்புள்ளது. இந்த தடுப்பூசியைப் போடுவதினால் நோயைத் தடுக்கலாம்.

இந்த நோய்க்கிருமி ஊசிகள் மூலமும், காயங்கள் மூலமும் ஒருவருக்கொருவர் பரவுகிறது. எனவே, தடுப்பூசி போடுவது மிகவும் அவசியமாகும். அரிமா சங்கத்தினர் சென்னை மாநகராட்சியுடன் இணைந்து லிம்கா சாதனைக்கு பெரிதும் உதவினர். அதே போன்று, பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மெரினா கடற்கரையில் குளிர்ந்த குடிநீர் வைக்க முன்வந்துள்ளனர். அவர்களுடைய பணி பாராட்டத்தக்கதாகும். மேலும் மற்ற மண்டலங்களில் அரிமா சங்கம் போன்று மற்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இணைந்து அனைத்து பணியாளர்களுக்கும் வருங்காலங்களில் தடுப்பூசிகள் போடுவதற்கு நடவடிக்கை மேற் கொள்ளப்படும்.

இதற்கு முன்னர் சென்ற காலங்களில் பத்து, பதினைந்து ஆண்டுகளில் பணிபுரிந்து குடிபழக்கத்தினால் பல்வேறு ஊழியர்கள் உயிரிழந்துள்ளார்கள். இதனை தடுப்பதற்காக சென்னை மாநகராட்சியும், இந்து நாளிதழும் ,டி.டி.கே நிறுவனமும் இணைந்து போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களை தடுப்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

சென்னை மாநகராட்சியில் பணிபுரிந்து இறந்தவர் களின் வாரிசுதாரர்களுக்கு வேலை வாய்ப்புகள் 900 நபர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, 2025 தற்காலிக பணியாளர்கள் இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னை மாநகராட்சியில் மாண்புமிகு தமிழக துணை முதல்-அமைச்சர் மு..ஸ்டாலின் பணிநிரந்தரம் செய்யப்பட்டு ஆணைகள் வழங்கப்பட்டது. மாநகராட்சி ஊழியர்களுக்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முகாமினை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

இந்நிகழ்ச்சியில் நல அலுவலர் டாக்டர் குகானந்தம், அரிமா சங்க தலைவர் ஹரிஹரன், அரிமா சங்கம் சார்பில் ரவிச்சந்திரன், பாலமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Last Updated on Friday, 29 January 2010 12:56
 

போடியில் கழுதை, பன்றிகள் அகற்றம்

Print PDF

தினமணி 29.01.2010

போடியில் கழுதை, பன்றிகள் அகற்றம்

போடி, ஜன. 28: போடி நகராட்சியில் சுற்றித் திரிந்த கழுதைகள், பன்றிகள் பிடிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டன.

போடி பகுதியில் மர்ம காய்ச்சலினால் மாணவர்கள் இருவர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து சுகாதாரப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பன்றிகளால் மூளைக் காய்ச்சல் பரவும் வாய்ப்புள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்ததைத் தொடர்ந்து போடி நகராட்சியில் சுற்றித் திரிந்த பன்றிகள், கழுதைகளைப் பிடித்து அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி தேனியில் செயல்படும் அவார்டு டிரஸ்ட் மூலம் பன்றிகள், கழுதைகளைப் பிடிக்க உத்தரவிடப்பட்டது. இதற்கு பன்றி, கழுதைகளின் உரிமையாளர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கும் வாய்ப்பு இருந்ததால், போலீஸ் பாதுகாப்புடன் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் போடி நகராட்சிப் பகுதிகளில் சுற்றித் திரிந்த 30 பன்றிகள், 60 கழுதைகள் வலைகள் மூலம் பிடிக்கப்பட்டு இதற்காக டிரஸ்ட் சார்பில் இயங்கும் பண்ணைகளில் அடைக்கப்பட்டு வளர்க்கப்பட உள்ளது.

இதுகுறித்து நகராட்சி ஆணையர் கே.சரவணக்குமார் கூறியது: கொடுமையிலிருந்து விலங்குகளைப் பாதுகாத்தல் சட்டம் 1960-ன்படி குற்றம் என்பதால் பன்றி, கழுதைகள் ஆகியவற்றை இடையுறு இன்றி வலை மூலம் பிடித்து சிறப்புப் பண்ணைகளில் வளர்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் நகராட்சி மூலம் அதன் உரிமையாளர்கள் கோரினால் பராமரிப்புச் செலவுகளை செலுத்திய பின் தொண்டு நிறுவனத்தினர் வழங்குவர். தொடர்ந்து நகராட்சிப் பகுதிகளில் சுற்றும் பன்றி, கழுதைகளைப் பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

 

ரோட்டில் திரிந்த பன்றி, கழுதைகள் : போடி நகராட்சி நடவடிக்கை

Print PDF

தினமலர் 29.01.2010

ரோட்டில் திரிந்த பன்றி, கழுதைகள் : போடி நகராட்சி நடவடிக்கை

போடி : போடியில் பொதுமக்களுக்கு சுகாதார கேடு மற்றும் இடைஞ்சல் ஏற்படுத்தி வந்த பன்றி, கழுதைகளை நகராட்சி நிர்வாகம் மூலம் பிடித்து, விலங்குகள் நல மற்றும் கிராம மேம்பாட்டு அறக்கட்டளையிடம் ஒப்படைத்தனர்.

போடி பஸ்ஸ்டாண்ட், அரசு ஆஸ்பத்திரி, காமராஜ் பஜார், தினசரி, வாரச் சந்தை உள்ளிட்ட பல் வேறு பகுதிகளில் பன்றிகள், கழுதைகள் தாரளாமலா உலா வந்து கொண்டிருந்தன. போடி மெயின்ரோடு உள்ளிட்ட தெருக்களில் கழுதைகள் சுற்றி திரிவதால் பொதுமக்கள் போக்குவரத்திற்கும் சிரமம் ஏற்படுகின்றன. நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பன்றிகள் தாராளமாக உலா வருவதால் பல்வேறு வகையில் சுகாதார கேடு ஏற்படுவதோடு பொதுமக்களுக்கு காய்ச்சலும் அதிகரித்துள்ளன.

இந்நிலையில் நகராட்சி பகுதியில் சுற்றி திரிந்த பன்றி, கழுதைகளை பிடித்து பாரதிய பிராணி நல வாரியம் கட்டுப் பாட்டுக்குள் தேனியில் இயங்கும் விலங்குகள் நல மற்றும் கிராம மேம்பாட்டு அறக்கட்டளை வசம் ஒப்படைக்கப்பட்டது.

நகராட்சி கமிஷனர் சரவணக்குமார் கூறுகையில்: நகரில் பொதுமக்களுக்கு சுகாதார கேடும், போக்குவரத்திற்கு இடையூறும் ஏற்படுத்தி வந்த 60 க்கும் மேற்பட்ட பன்றி, கழுதைகளை பிடித்து விலங்குகள் நல மற்றும் கிராம மேம் பாட்டு அறக் கட்டளை வசம் ஒப்படைத் துள்ளோம் என்றார்.

 


Page 377 of 519