Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

பெசன்ட்நகர் கடற்கரையை சுத்தம் செய்யும் நிகழ்ச்சி

Print PDF

தினகரன் 27.01.2010

பெசன்ட்நகர் கடற்கரையை சுத்தம் செய்யும் நிகழ்ச்சி

வேளச்சேரி : ‘கடற்கரையை மீட்டெடுப்போம்இளைஞர் இயக்கம் சார்பில் பெசன்ட்நகர் ஊரூர்குப்பம், ஆள்காட் குப்பம் கடற்கரை பகுதிகளை சுத்தம் செய்யும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. தன்னார்வ இயக்க இளைஞர்கள் சேகரித்த குப்பைகளை நீல் மெட்டல் பனால்கா ஊழியர்கள் வந்து லாரிகளில் எடுத்துச் சென்றனர். சுமார் ஒன்றரை கி.மீ. தூரம் சுத்தம் செய்யும் பணி நடந்தது. இதில் 300 பேர் பங்கேற்றனர். கல்லூரி, பள்ளி மாணவ& மாணவிகளுடன் பொதுமக்களும் இணைந்து குப்பை சேகரித்தனர்.

பின்னர் ஸ்ரீதேவி எல்லையம்மன் கோயில் அருகில் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. அப்போது அந்த பகுதி மக்களிடம் திடக்கழிவு குப்பைகளை கடலில் போடாதீர்கள், கழிவுநீர் கடலில் கலக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று அறிவுரை கூறினர்.

Last Updated on Wednesday, 27 January 2010 11:31
 

காமயகவுண்டன்பட்டியில் ஒட்டுமொத்த துப்புரவு பணி

Print PDF

தினமலர் 27.01.2010

காமயகவுண்டன்பட்டியில் ஒட்டுமொத்த துப்புரவு பணி

கம்பம்:காமயகவுண்டன்பட்டி பேரூராட்சியில், குப்பைகள் அகற்றம், கொசு மருந்து தெளிக்கும் பணியில் ஒட்டுமொத்த துப்புரவு பணியாளர்களும் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டத்தில் கிராமப்புறங்களில் காய்ச்சலால் மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் நிலையில் கொசு உற்பத்தியை முழுவதும் கட்டுப்படுத்த பேரூராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சிகளுக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து காமயகவுண்டன்பட்டி பேரூராட்சியில் காலை முதல் மாலை வரை கொசு மருந்து தெளிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.பேரூராட்சி தலைவர் ராதிகா, செயல் அலுவலர் குணாளன் ஆகியோர் முன்னிலையில் துப்புரவு பணியாளர்கள் கொசு மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

கள்ளர் பள்ளி தெரு, வாய்க்கால் தெரு, நடுத்தெரு, மெயின்ரோடு, கருமாரிபுரம் உள்ளிட்ட பல தெருக்களிலும், சாக்கடை மற்றும் குப்பை கிடங்குகளிலும் மருந்து தெளிக்கும் பணி நடைபெற்றது. ஒரே சமயத்தில் 20 க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Last Updated on Wednesday, 27 January 2010 06:28
 

மாநகராட்சி பகுதியில் 'சிக்-குன் குனியா' பாதிப்பு அதிகம் : இலவசமாக சித்த மருந்து வினியோகம்

Print PDF

தினமலர் 26.01.2010

மாநகராட்சி பகுதியில் 'சிக்-குன் குனியா' பாதிப்பு அதிகம் : இலவசமாக சித்த மருந்து வினியோகம்

மதுரை : மதுரை மாநகராட்சி பகுதியில்தான் "சிக்-குன் குனியா' காய்ச்சல் அதிகம் உள்ளது. இந்தாண்டு ஜன.,20 வரை 14 பேருக்கு இக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையாக, இன்று முதல் பொதுமக்களுக்கு சித்த மருந்து இலவசமாக வழங்கப்படுகிறது.சிக்-குன்குனியா, டெங்கு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மதுரையில் நேற்று நடந்தது. மாவட்ட மலேரியா தடுப்பு அதிகாரி டாக்டர் வரதராஜன் பேசியதாவது : 2006ல் எட்டு கிராமங்களில், 22 பேருக்கு சிக்-குன் குனியா இருந்தது. 2007ல் இல்லை. 2008ல் 15 பேர், 2009ல் 128 பேர் இக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது.

 

கடந்தாண்டு செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பரில் மட்டும் 15,000 பேருக்கு பலவித காய்ச்சல் ஏற்பட்டது. இதில், செப்டம்பரில் 16 பேர், அக்.,23, நவ.,36, டிச.,51 பேர் சிக்-குன் குனியாவால் பாதிக்கப்பட்டனர். இந்தாண்டு ஜன.,20 வரை காய்ச்சல் ஏற்பட்ட 124 பேரில், 14 பேருக்கு சிக்-குன் குனியா உறுதி செய்யப்பட்டது. பெரும்பாலும் 15 வயதிற்கு மேற்பட்டவர்களுக்குதான் இக்காய்ச்சல் ஏற்படுகிறது.

 

இதில் ஆண்கள்தான் அதிகம். தேங்கிய தண்ணீர் போன்ற காரணங் களால் மாநகராட்சி பகுதியில்தான் பாதிப்பு அதிகமாக உள்ளது என்றார்.மாநகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் சுப்பிரமணியம் பேசுகையில், ""சிக்-குன் குனியா, டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த, மாநகராட்சிக்கு அரசு 5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. இன்று முதல் யானைக்கல், நரிமேடு, காமராஜர்சாலையில் உள்ள சித்த மருந்தகம் மற்றும் அனுப்பானடி, ஒர்க்ஷாப் ரோட்டில் உள்ள ஆயுர்வேத மருந்தகங்களில், சித்த மருந்து இலவசமாக வழங்கப்படுகிறது,'' என்றார்.இந்த காய்ச்சல்கள் பரவ கொசுவே முக்கிய காரணம். கொசு ஒழிப்பில் மாநகராட்சி அக்கறை காட்டினால் பல்வேறு தொற்று நோய்களை ஒழிக்கலாம்.

 


Page 379 of 519