Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

மாநகராட்சி நகர்நல மைய டாக்டர்களுக்கு தனி பயிற்சி

Print PDF

தினமலர் 26.01.2010

மாநகராட்சி நகர்நல மைய டாக்டர்களுக்கு தனி பயிற்சி

கோவை : மாநகராட்சி சார்பில் இயங்கும் ஐந்து நகர் நல மையங்களுக்கு ஐ.எஸ்.., தரச்சான்று பெற, மாநகராட்சி டாக்டர்களுக்கான தனிப்பயிற்சி நேற்று துவங்கியது. கோவை மாநகராட்சியின் சீத்தாலட்சுமி, மீனாட்சி, வி.வி.எம்., சிங்காநல்லூர், சி.டி.எம்., ஆர்.கே.பாய் நகர் நல மையங்களுக்கு ஐ.எஸ்..9001-2008 தரச்சான்று பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் ஐ.எஸ்.. தரச்சான்று பெற்றுதரும் பிரதிநிதி சிவக்குமார் நேற்று மாநகராட்சி நகர் நல மையங்களில் பணிபுரியும் டாக்டர்களுக்கு முதற் கட்ட பயிற்சி அளித்தார்.

மருத்துவமனையில் மேற்கொள்ளப்படும் நடைமுறை அமைதியாக இருத்தல், சுத்தமாக வைத்துக்கொள்ளுதல், வந்து செல்லும் நோயாளிகளை பதிவுசெய்தல், சிகிச்சை பெற்றவர்களுக்கு சிகிச்சை பெற்ற விபரங்களை குறிப்பிட்டு விபர அட்டை வழங்குதல், மாத்திரை வழங்க சீட்டு கொடுத்தல்,பராமரித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ள வேண்டும். மாநகராட்சி மருத்துவமனைகளுக்கு ஏழை மற்றும் பாமர மக்கள் வந்து செல்வர்.

அவர்கள் மனம் நோகாமலும், நம்முடைய தரம் குறையாமலும் சிகிச்சையளிக்க வேண்டும். நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் மருந்து, ஊசிகள் தரமுள்ளதாக இருக்க வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் சூழலில் காத்திருக்கும் நோயாளிகள் கால் கடுக்காமல் இருக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.நோயாளிகளுக்கு எந்த குறைபாடுகளும் இருக்க கூடாது. இவ்வாறு பயிற்சியாளர் சிவக்குமார் கூறினார். பயிற்சியில் மாநகராட்சி டாக்டர்கள் பங்கேற்றனர். பயிற்சியை கமிஷனர் அன்சுல் மிஸ்ரா, மேயர் வெங்கடாசலம் பார்வையிட்டனர்.

 

கடைகளில் விற்கப்படும் சமையல் எண்ணெய்: ஆய்வுக்கு சேகரிப்பு

Print PDF

தினமலர் 25.01.2010

கடைகளில் விற்கப்படும் சமையல் எண்ணெய்: ஆய்வுக்கு சேகரிப்பு

கும்மிடிப்பூண்டி : மக்களின் உடல் நலன் கருதி மார்க்கெட்டில் விற்பனையில் உள்ள அனைத்து தர சமையல் எண்ணெய்கள் ஆய்வுக்காக சேகரிக்கப்பட்டது.தமிழக அரசின் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை சார்பில், மக்களின் உடல் நலன் கருதி மார்க்கெட்டில் விற்பனையில் உள்ள பல தரப் பட்ட சமையல் எண்ணெய்களை ஆய்வு நடத்த முடிவு செய்யப்பட்டது.அதன்படி கும்மிடிப்பூண்டி வட்டார சுகாதார ஆய்வாளர் முருகன் தலைமையில் சுகாதாரத் துறையினர் அப்பகுதியில் உள்ள மளிகை கடைகளில் விற்கப்படும் சமையல் எண்ணெய் பாக் கெட்டுகளை சேகரித்தனர்.சேகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய்களை ஆய்வுக்காக, சென்னையில் உள்ள உணவு ஆய்வகத்திற்கு அனுப்பட்டது.பள்ளிகளை சுற்றியுள்ள பெட்டி கடைகளில் விற்கப்பட்ட மாத்திரை வடிவ மிட்டாய்களை சுகாதார குழுவினர் பறிமுதல் செய்து எச்சரித்தனர்.

Last Updated on Monday, 25 January 2010 06:38
 

சிவகாசி நகராட்சியில் கொசு ஒழிப்பு பணிக்கு 7 பேர் நியமனம்

Print PDF

தினமலர் 25.01.2010

சிவகாசி நகராட்சியில் கொசு ஒழிப்பு பணிக்கு 7 பேர் நியமனம்

சிவகாசி:சிவகாசியில் வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்க பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் பாலசுப்பிரமணியம் ஆலோசனையில் தடுப்பு நடவடிக்கைள் துவக்கியுள்ளன.

சிவகாசி நகராட்சி பகுதிகளில் நீர்த்தேக்க தொட்டிகளில் கொசுப் புழுக்களை ஒழிக்க "டெமிபாஸ்' மருந்து கரைசல் ஊற்றுவதற்கும், இரவில் கொசு புகை மருந்து தெளிக்கும் பணிகள் செய்திட 7 பணியாளர்கள் நான்கு மாதத் திற்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

ச்இவர்கள் தண்ணீர் தொட்டிகள், கீழ்நிலை, மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளில் கொசு புழுக்கள் வளர்கின்றனவா என பார்த்து மருந்து கரைசல் ஊற்றி அழிப்பார்கள். பிளாஸ்டிக் கப்புகள், உபயோகமற்ற டயர்கள், உரல்கள் தேங்கிய நீரை வடித்து விடுவார்கள் என நகராட்சி ஆணையாளர் விஜயராகவன் தெரிவித்துள்ளார

Last Updated on Monday, 25 January 2010 06:36
 


Page 380 of 519