Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

சேலம் மாநகராட்சி பகுதியில் ஏ.டி.எஸ்.கொசுவை ஒழிக்க பயனற்ற 4 டன் டயர்கள் அகற்றம்

Print PDF

தினத்தந்தி           23.09.2013

சேலம் மாநகராட்சி பகுதியில் ஏ.டி.எஸ்.கொசுவை ஒழிக்க பயனற்ற 4 டன் டயர்கள் அகற்றம்

 

 

 

 

 

சேலம் மாநகராட்சி பகுதியில் ஏ.டி.எஸ். கொசுவை ஒழிக்கும் வகையில் பயனற்ற 4 டன் டயர்கள் அகற்றப்பட்டன.

கொசு ஒழிப்பு தீவிரம்

மழை காலங்களில் கொசுக்களின் உற்பத்தியை தடுத்து டெங்கு காய்ச்சல் நோய் பரவுவதை தடுக்க சேலம் மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த வாரம் துப்புரவு பணியாளர்கள் மற்றும் சுகாதார அலுவலர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் நேரில் சென்று வீட்டில் சேகரித்து வைக்கப்பட்ட தேவையற்ற பொருட்களை பெற்று மாநகராட்சி லாரிகள், டிராக்டர்கள், ஆட்டோக்கள், மற்றும் கைவண்டிகள் மூலமாக பெறப்பட்டது.

மேலும் ஏடிஸ் கொசுப்புழு ஒழிப்பதற்கான அபேட் மருந்து அனைத்து வீடுகளிலும் தேக்கி வைக்கப்பட்டுள்ள நல்ல நீரில் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து நகரின் பல்வேறு பகுதிகளில் ஏடிஸ் கொசுக்கள் உற்பத்திக்கு முக்கிய காரணமாக விளங்கும் பழைய டயர்களை அப்புறப்படுத்திட மாநகராட்சி ஆணையாளர் அசோகன் சுகாதாரத் துறைக்கு உத்தரவிட்டார்.

4 டன் டயர்கள் அகற்றம்

அதனைத் தொடர்ந்து நேற்று மாநகராட்சி நகர் நல அலுவலர் டாக்டர் அர்ஜீன்குமார் தலைமையில் சுகாதாரத் துறையினர் சூரமங்கலம் மற்றும் அம்மாபேட்டையில் உள்ள அனைத்து பகுதிகளிலும் ஆய்வு செய்தனர். தெருக்களிலும், ரோட்டோரங்களிலும் பயன்பாடற்று குவித்து வைக்கப்பட்டிருந்த 4 டன் எடையுள்ள பழைய டயர்களை அப்புறப்படுத்தி வாகனங்களில் எடுத்து சென்றனர்.

இந்த ஆய்வில் சுகாதார ஆய்வாளர்கள் வெங்கடாஜலம், கந்தசாமி, மலேரியா களப்பணி உதவியாளர் செல்வம் மற்றும் களப்பணியாளர்கள் ஆகியோர் ஈடுபட்டனர்.

இது குறித்து மாநகராட்சி ஆணையாளர் அசோகன் கூறியதாவது:–

வேண்டுகோள்

பொதுமக்கள், வியாபரிகள், வாகன பணிமனைகள் வைத்திருக்கும் உரிமையாளர்கள் ஆகியோர் பயன்பாடற்ற பழைய டயர்களை வீட்டிற்குள்ளோ அல்லது வெளியிலோ வைத்திருக்க வேண்டாம். ஏடிஸ் கொசுக்கள் இனப்பெருக்கத்திற்கு புகழிடமாக விளங்கும் பயன்பாடற்ற டயர்களை மாநகராட்சி பணியாளர்கள் உங்கள் இல்லம் அல்லது கடையை நாடி வரும்ப்போது ஒப்படைத்து டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க உங்களுடைய முழு ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Last Updated on Monday, 23 September 2013 10:53
 

சென்னையில் கொசுக்களை ஒழிக்க கூடுதலாக 262 கைத்தெளிப்பான்கள்: மாநகராட்சி ஏற்பாடு

Print PDF

மாலை மலர்           23.09.2013

சென்னையில் கொசுக்களை ஒழிக்க கூடுதலாக 262 கைத்தெளிப்பான்கள்: மாநகராட்சி ஏற்பாடு
 
 

மீண்டும் வந்தது "நிலவேம்பு' கசாயம்

Print PDF

தினமலர்           19.09.2013

மீண்டும் வந்தது "நிலவேம்பு' கசாயம்

மதுரையில் "டெங்கு' தீவிரத்தை தடுக்க, மாநகராட்சி மருத்துவமனைகளில் "நிலவேம்பு' கசாயம் கொடுக்கும் முறை, நேற்று முதல் மீண்டும் தொடங்கப்பட்டது. 2012 ஜூனில் டெங்கு பாதிப்பை தடுக்க, நிலவேம்பு கசாயத்தை அரசே பரிந்துரை செய்தது. மாநகராட்சி மருத்துவமனைகளில், இலவசமாக கொடுக்கப்பட்டது.

தற்போது மீண்டும் "டெங்கு' பீதி தொற்றியுள்ளதால், மாநகராட்சி மருத்துவமனைகளில் மீண்டும் "நிலவேம்பு' கசாயம் வழங்கும் முறை, நேற்று தொடங்கப்பட்டது. புதுஜெயில் ரோட்டில் உள்ள தேவசகாயம் மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில், கலெக்டர் சுப்ரமணியன், கமிஷனர் நந்தகோபால் ஆகியோர், கசாயத்தை குடித்து, தொடங்கி வைத்தனர். "டெங்கு' காய்ச்சல், குழந்தைகளை குறிவைக்கும் நோய் என்பதால், குழந்தைகளுக்கு கட்டாயம், நிலவேம்பு கசாயம் கொடுக்க, அறிவுறுத்தப்பட்டுள்ளது. பால் கொடுக்கும் தாய்மார்களும், கசாயம் குடிப்பதால், குழந்தையின் நலன் பாதுகாக்கப்படும். "டெங்கு' கூட்டம் எங்கு?தேடி அலைந்த சிரியர்கள்மதுரையில் "டெங்கு' காய்ச்சல் விழிப்புணர்வு கூட்டம் நடந்த இடத்தை தேடி தலைமையாசிரியர்கள் அலைந்தனர்.டெங்கு காய்ச்சல் பாதிப்பு மீண்டும் மதுரையில் ஆரம்பித்துள்ளதை தொடர்ந்து, பள்ளிகளில் டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தலைமையாசிரியர்கள் கூட்டத்திற்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது.

மாநகராட்சி கூட்ட அரங்கில், மாலை 4 மணிக்கு நடப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. தலைமையாசிரியர்கள் அங்கு செல்ல, மடீட்சியா அரங்கிற்கு கூட்டம் மாற்றப்பட்ட தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கும் செல்ல, பொருளாதார கணக்கெடுப்பு தொடர்பாக ஒரு கூட்டம் நடந்துகொண்டிருந்ததால் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.தலைமையாசிரியர்கள் கூறியதாவது:கூட்டம் எங்கு நடக்கிறது என ஏற்பாடு செய்தவர்கள் தெளிவாக தெரிவிக்கவில்லை. இடங்களை மாற்றி மாற்றி தெரிவித்தனர். அதிகாரிகளிடம் கேட்டால், மடீட்சியா அரங்கில் தான் நடக்கிறது. ஏற்கனவே ஒரு கூட்டம் அங்கு நடந்தது. அது முடியும் வரை காத்திருங்கள் என்றனர். இதனால், 2 மணிநேரம் காத்திருந்து பங்கேற்றோம், என்றனர்.

அரசு மருத்துவமனையில்தட்டுப்பாடின்றி மருந்து:டீன் மோகன்""மதுரை அரசு மருத்துவமனையில் மருந்துகள், தடையின்றி கிடைக்க இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக,'' டீன் மோகன் தெரிவித்தார்.இம்மருத்துவமனையில் சில நாட்களாக காய்ச்சல், தலைவலி, ரத்தஅழுத்தம் போன்றவற்றிக்கு தரப்படும் மாத்திரைகள் இருப்பில் இல்லை. பெண்களுக்கான தைராய்டு மாத்திரைகளும் கிடைக்கவில்லை. இதனால், நோயாளிகள் வெளியில் விலைக்கு வாங்க வேண்டியிருந்தது.

டீன் மோகன் கூறியதாவது: தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தில் இருந்து, இந்த காலாண்டிற்கான (ஜூன் - செப்.,வரை) மருந்துகள் வினியோகம் குறைந்ததால், பற்றாக்குறை ஏற்பட்டது. தற்போது ரத்தஅழுத்த மாத்திரை, குளுகோஸ் பாட்டில்கள் உட்பட அத்தியாவசிய மருந்துகள், 15 நாட்களுக்கு தேவையான அளவு, சேவை கழகத்திடம் இருந்து வாங்கியுள்ளோம். கிடைக்காத சில மருந்துகளை இங்கேயே வாங்குவதற்கு, தடையில்லா சான்றிதழும் பெற்றுள்ளோம். அடுத்த காலாண்டிற்கு தேவையான மாத்திரைகள் அளவை,ஏற்கனவே தெரிவித்து விட்டதால், இனி தட்டுப்பாடு இருக்காது, என்றார்.

 


Page 39 of 519